Sunday 9 February 2014

உங்கள் கணவரின் நடவடிக்கையில் சந்தேகமா..இத கவனிங்க...!



உங்கள் கணவரின் உணர்வுகள் உங்களை பாதிக்கின்றனவா? அவரின் மாற்றம், ரகசியம், தனிப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றின் மேல் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா?

 அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் இந்த பகுதியை படிக்க வேண்டும். இதனால் அவரது நடவடிக்கைகள் சரியானதா அல்லது நீங்கள் அவர் மேல் கர்வம் கொண்டு இப்படி நினைக்கின்றீர்களா என்பதை தெரிந்து கொள்ள முடியும்

இப்போது உங்கள் கணவர் உங்களை ஏமாற்றுகிறார் என்றால் எந்த மாதிரியான செயல்களையெல்லாம் மேற்கொள்வார் என்று கீழே குறிப்பிட்டுள்ளோம். அதைப் பார்ப்போம்...

ஏமாற்றும் கணவர்கள் பொதுவாக மனைவி முன் தொலைபேசியில் பேச மாட்டார்கள். அவ்வப்போது இதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் எப்போது அழைப்பு வருகின்றதோ அப்பொழுதெல்லாம் இதை செய்தால் ஏதோ தவறு நடக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இத்தகைய புதிய முறைகளை கையாளும் போது எச்சரிக்கையாக இருங்கள். அவரின் மேல் எப்போதும் ஒரு பார்வை வைப்பது நல்லது.

பொதுவாக போனில் உள்ள குறுஞ்செய்திகளை நிரம்ப நிரம்ப யாரும் அழிப்பது கிடையாது. அப்படி அழிக்க நினைத்தாலும் நமக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் உங்கள் கணவர் அப்படி குறுஞ்செய்திகளை ஒவ்வnhரு முறை வரும் போதும் அனுப்பும் போதும் அழித்துக் கொண்டு இருந்தால் அது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

குடும்பத்திற்காக குறைந்த நேரத்தை ஒதுக்குவதும், முன்பு இருந்ததை விட நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பழகாதிருத்தலும் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக இருக்கும் போது தனியாக விலகி இருப்பதும் மற்றும் தினமும் கால தாமதமாக வருவதும் ஆகியவை சந்தேகத்திற்கு இடமளிக்கும் நடவடிக்கைகளாகும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது இணையதளத்தின் மூலமோ தொடர்பில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

எப்போதுமில்லாமல் திடீரென்று ஒரு தனிப்பட்ட நபருடன் அதிக நேரம் செலவு செய்கின்றாரா? அவர் எதிர் பாலினமா? ஜாக்கிரதை! நீங்கள் நிச்சயம் அவர்களின் உறவை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வரும் போது வேறு வாசனை பொருளை போட்டுக் கொண்டு வருகின்றாரா அல்லது காலையில் சென்றது போல் வீட்டிற்கு புதிதாக களைப்பில்லாமல் வருகின்றாரா இதை எல்லாம் கவனிக்க வேண்டும். இதனால் அவர் மற்றவர்களுடன் நேரம் செலவு செய்வது தெளிவாக தெரிகின்றது.

கணவன் மனைவி இடையே உள்ள சிறிய சண்டை மற்றும் தீராத விவாதங்கள் ஆகியவற்றால் அன்பு தற்காலிகமாக குறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் திடீரென்று காரணம் இல்லாமல் விலகிச் செல்வதும் மற்றும் ஏதேனும் காரணம் சொல்லி விலகி இருப்பதும் அவர்களின் புதிய உறவு பற்றி நமக்கு அறிவுறுத்துகின்றன.

முன்பெல்லாம் அவர் தன்னுடைய அலுவலகத்தில் என்ன நடந்தது என்று முழுமையாக விவரித்திருப்பார், ஆனால் அவர் இப்போது அது பற்றி உங்களிடம் ஒன்றும் கூறுவதில்லை. நீங்கள் திரும்பத் திரும்ப கேட்கும் போதும் சரியாக பதில் கொடுப்பதில்லை. இத்தகைய நடவடிக்கைகள் கவனிக்கப்பட வேண்டியவைகளாகும்.

சிறிய தவறுகள் மற்றும் பேசிக் கொண்டு இருக்கும் போது சண்டைகள் வந்தாலும் பெரிய பூகம்பம் வெடித்தாலும் இது சராசரியாக நடக்காத காரியமாக இருந்தால் கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவரின் துணி காணாமல் போனால் கூட கவனிக்க வேண்டும்.

திடீரென்று அதிகம் தள்ளி இருப்பது, உங்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் ஆகிய நாட்களில் வெளியே கூட்டிச் செல்லாமல் இருப்பது மற்றும் பரிசு வாங்கித் தராமல் இருப்பது மற்றும் அதிக விஷயங்களை மறைப்பது ஆகியவை அவரை பற்றி தவறான அபிப்பிராயத்தை உண்டாக்கின்றன. இதை கவனித்து திருத்த வேண்டும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா