Sunday, 9 February 2014
வோடஃபோன் & ஏர்டெல்க்கு சுப்ரீம் கோர்ட் வைத்த செக்மேட்…!
இன்று காலை 9 மணிக்கு இந்தியாவில் தொடங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலம் நன்றாக போய்கொண்டிருக்கிறது. இது 2ஜி ஊழலில் கேன்சல் செய்யபட்ட 122 லைசென்ஸ்களின் புதிய அதிகாரபூர்வ ஏலம் ஓப்பன் டென்டர் முறையில் நடக்கிறது. இந்த ஏலமானது 1800 MHz அலைவரிசையில் 385 MHzம் / 900 MHz bandல் – 46 MHzம் ஏலம் விடப்படுகிறது. மொத்தம் 240 நிமிடங்கள் அதாவது 4 மணி நேரம் ரேம்ப் அப் முறையில் விடப்படும்.
இது என்ன முறை – ஒரு கம்பெனி ஏற்கனவே உள்குத்து செட் பண்ணி ஒரு விலையை கோட் செய்து மொத்தமா மொங்காம் போடமுடியாது. அதாவது ஒரு கம்பனி 1000 கோடிக்கு ஒரு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் கேட்டால் இன்னொரு கம்பெனி அதை 1001 கோடிக்கு ஓப்பனாய் ஏலம் கேட்க முடியும். ஒவ்வொரு ரவுண்டும் 60 நிமிடத்தில் நடக்கும் இதில் 20 நிமிடம் பிரேக். ஒவ்வொரு சுற்றிலும் ஏலம் கேட்ட கம்பெனிகளின் விலையை அரசு அறிவிக்கும் அடுத்த ரவுண்டில் அதை ஏத்தி கேட்கலாம். இப்படி இருப்பதால் நிறைய புது கம்பெனிகள் சர்வீஸுக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் மூலம் 42,000 கோடி முதல் 55,000 கோடி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்க படுகிறது. அப்ப 1,76,000 கோடி என்ன கணக்குனு கேட்பவங்களுக்கு மீதியை கீழே படிக்கவும்.
முதன் முதலில் 3ஜி லைசென்ஸ் ஏலம் 34 நாட்கள் நடந்தது 2010ல் 2012ல் இரண்டு நாளும் போன வருடம் ஒரு முழு நாள் கூட நடைபெறாமல் போனது இந்த மாதிரி ஒப்பன் டென்டர் இல்லாதது தான். சரி முக்கிய மேட்டருக்கு வருவோம். டெல்லி / மும்பாய் / கொல்கத்தா போன்ற பெரு நகர லைசென்ஸ்கள் – வோடஃபோன் / ஏர்டெல் மற்றும் லூப் மொபைலின் லைசென்ஸ் நவம்பர் 2014ல் நிறைவடைகிறது.
இது வரை இந்த கம்பெனிகள் தாங்களே ஒரு விலையை நிர்ணயித்து இதை புகுத்தின. ஆனால் ட்ராய் ரொம்ப நாள் கழித்து விழித்துகொண்டமையால் – இனிமே நீங்களும் வழக்கம் போல லைனில நின்னு பத்தோடு பதினொன்னாய் தான் ஏலம் கேட்கனும், இந்த முதல்ல லைசென்ஸ் வச்சவனுக்கே இனிமே கன்டினியூ இல்லைனு சொல்ல – உடனே இந்த ஏழைகள் சுப்ரீம் கோர்ட்டை நாட – சுப்ரீம் கோர்ட்டும் ட்ராய் கூறிய வகையில் தான் நீங்களும் ஏலம் கேட்கனும்னு செக் மேட் வைத்தத காரணத்தினால் இந்த தடவை அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதாவது மும்பாயில் வோடஃபோன் 20,000 கோடி என்று ஏலம் கேட்டால் இன்னொரு புது ஆப்பரேட்டர் 30000 கோடிக்கு கேட்க வாய்ப்புண்டு. வோடஃபோன் / ஏர்டெல் / லூப் மொபைல் பல கோடி சந்தாக்காரர்களை வைத்திருப்பதால் என்ன விலையானாலும் இந்த ஏலத்தை ஒப்பன் முறையில எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். இந்த மூன்று பெரு நகரங்கள் போனால் அவர்களின் 74% நெட்வொர்த் தெருவுக்கு வந்துவிடும் ஆபத்து. 2013 அக்டோபரிலே இந்தியா முழுவதும் ஒரே விலை ரோமிங் கிடையாது என ட்ராய் அறிவித்த போதும் இன்னும் செயல்படுத்தாமல் டிமிக்கி கொடுத்த வகையில் இந்த இரண்டு க்ம்பெனிக்கும் பெரும் பங்குண்டு இப்போது இது வேற என்ன ஆகுமோ என்று மன்டையை பிய்த்து கொண்டிருக்கிறது.
Labels:
அனுபவம்,
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment