என்னென்ன தேவை?
- திணை மாவு - 1/2 கப்,
- தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,
- பொடி செய்த வெல்லம் - 1/4 கப்,
- ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்,
- நெய் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 20 மி.லி.,
- முந்திரி - 25 கிராம்.
எப்படிச் செய்வது?
திணை மாவுடன் தேங்காய்த் துருவல், வெல்லப் பொடி, ஏலக்காய்த் தூள், நெய், தேங்காய்ப் பால் விட்டுக் கலந்து பிசையவும். பேடாவாகத் தட்டும் அளவுக்கு பதம் இருக்க வேண்டும். வட்ட வடிவில் திணை மாவுக் கலவையை தட்டி, நடுவில் முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.
நார்ச்சத்து மிகுந்த உணவு. நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்லது.மலச்சிக்கலைத் தீர்க்கும்.
வாழைத்தண்டு கூட்டு
என்னென்ன தேவை?
- வாழைத்தண்டு - 1 கப்,
- தேங்காய் - 1/2 மூடி,
- சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
- உப்பு - தேவைக்கேற்ப,
- பச்சை மிளகாய் - 2,
- கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 1/2 மூடி தேங்காயை விழுது போல் அரைத்து, 250 மி.லி. தண்ணீர் சேர்த்து பால் எடுத்து கொள்ளவும். நறுக்கிய வாழைத்தண்டுடன் தேங்காய்ப் பால் சேர்க்கவும். அத்துடன் பச்சை மிளகாயை சிறிய துண்டாக நறுக்கிச் சேர்க்கவும். உப்பு, சீரகத் தூள், கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.,
நீரிழிவுக்கு நல்லது. சிறுநீரகப் பாதையில் ஏற்படும் கல்லடைப்புகளை நீக்குகிறது.
No comments:
Post a Comment