Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Friday, 14 March 2014

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலையின் சில முக்கிய நன்மைகள்..!



மருத்துவ குணம் வாய்ந்த வேப்பிலையின் நன்மைகளைச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் சிலருக்கு வேப்பிலையின் ஒருசில முக்கியமான நன்மைகளைப் பற்றி தெரியாது.

இதில் உள்ள நன்மைகளால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் வேப்பிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கோடைகாலம் வரப்போகிறது. மிகவும் ஆபத்தான நோயான அம்மையின் தாக்கத்திற்கு பலர் உட்பட நேரிடும். ஆனால் அந்த அம்மை நோய்க்கு வேப்பிலை மிகவும் சிறப்பான பொருள்.

ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், நோயெதிர்ப்பு அழற்சி, பூஞ்சை எதிர்ப்பு பொருள் அதிகம் இருக்கிறது.

எனவே உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணமாக்கும். இங்கு அனைவரும் தவறாமல் தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவ குணம் வாய்ந்த வேப்பிலையின் சில சிறப்பான நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதைப் படித்து, உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை வேப்பிலை கொண்டு குணமாக்கிக் கொள்ளுங்கள்.

சின்னம்மை இருக்கும் போது, கொதிக்கும் நீரில் வேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அந்த நீரைக் கொண்டு குளித்தால், சின்னம்மையின் தடிப்புக்கள் மேலும் பரவாமல் தடுக்கப்படும்.

தொண்டையில் புண் இருந்தால், அதனை விரைவில் குணமாக்க, வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரால், கொப்பளிக்க வேண்டும்.

கண் புரையை சரிசெய்ய வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரால் கண்களை கழுவ வேண்டும். குறிப்பாக வேப்பிலையை நீரில் போட்டு 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, பின் குளிர வைக்க வேண்டும். இந்த நீரைக் கொண்டு எரிச்சல் மற்றும் அரிப்பு உள்ள கண்களைக் கழுவினால் உடனே குணமாகும்.

பூச்சிக்கடியால் ஏற்பட்ட தடிப்பை சரிசெய்ய, வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பூச்சிக்கடி உள்ள இடத்தில் தடவி வந்தால், அவ்விடத்தில் உள்ள விஷம் மற்றும் கிருமிகள் அழிக்கப்பட்டு, வீக்கம் குறைந்துவிடும்.

மூட்டு வலி அதிகம் இருந்தால், அப்போது வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை வலி உள்ள இடத்தில் தடவினால், மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைந்து, வலியும் குறைந்துவிடும். மேலும் முதுகு வலி இருந்தால், அப்போது வேப்பிலை பேஸ்ட் கொண்டு மசாஜ் செய்தால், முதுகு வலி பறந்து ஓடிவிடும்.

வேப்பிலையில் மலேரியா காய்ச்சலைப் போக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால், மலேரியா உடனே குணமாகும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் மலேரியாவை சரிசெய்ய இந்த முறையைத் தான் பின்பற்றுவார்கள்.

வேப்பிலையைப் பயன்படுத்தி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களைத் தடுக்கலாம். மேலும் வேப்பிலை சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தின் நிறத்தை அதிகரித்து வெளிப்படுத்

வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, கூந்தல் உதிர்தல், பேன் தொல்லை, வறட்சியான ஸ்கால்ப் போன்றவற்றை தடுக்கலாம்.

Wednesday, 5 March 2014

உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!



ஒரு மனிதனுக்கு எல்லா செல்வங்களையும் விட சிறந்தது குழந்தைச் செல்வம் தான். அந்த குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் அளவில்லா இன்பம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிப் படிகள் சீறாக அமைவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கண்டு கொள்வது.

அவற்றை எப்படி சரி செய்வது என்பதை பற்றி விளக்குவதே இந்த கட்டுறையின் நோக்கம். ஒரு குழந்தை கருவில் இருந்து தான் அதன் முதல் வளர்ச்சி தொடங்குகின்றது. குழந்தை பிறப்பிற்கு பின் உள்ள வளர்ச்சிப்படிகளைப் பற்றி பார்ப்போம். குழந்தையின் வளர்ச்சியை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. உடல் சார்ந்த வளர்ச்சிகள்

2. அறிவு சார்ந்த வளர்ச்சிகள் இதில் உடல் சார்ந்த வளர்ச்சி என்பது குழந்தை பிறந்தது முதல் நடக்கும் வரை உள்ள பல்வேறு வளர்ச்சிப் படிகள். அதாவது குழந்தை பிறந்து 3 முதல் 4 மாதத்திற்குள் காலை நிற்க வேண்டும். 4 முதல் 5 மாதத்தில் திரும்பி படுத்தல்,

6-7 மாதத்தில் நெஞ்சால் தேய்த்துக் கொண்டு முன்னே நகருதல், 7-8 மாதத்தில் கைகளை ஊன்றி உட்காருதல், 8-9 மாதத்தில் தவழுதல், 9-10 மாதத்தில், உதவியுடன் பிடித்துக் கொண்டு நிற்றல், 10-11 மாதத்தில் உதவியுடன் நடத்தல்,

11-12 மாதத்தில் தனியாக நடத்தல், 14-18 மாதங்களில் மாடிப்படி ஏறுதல், 18-24 மாதங்களில் மாடிப்படி இறங்குதல், இந்த வளர்ச்சிப்படிகள் ஒன்றி அல்லது இரண்டு மாதங்கள் முன் பின் நடக்கலாம். ஆனால் அதைவிட அதிகமாக (இரண்டு மாதங்கள் கழிந்தும்) மாதங்கள் கடந்தும் வளர்ச்சிப்படியில் மாற்றம் இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அனுகி அதற்கான மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

ஏனென்றால் சில பெற்றோர்கள் சரியான மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிப்படி இல்லை என்றாலும் அதை உடனடியாக கவனிக்க மறந்து விடுகின்றனர். அல்லது நமது குடும்பததில் எல்லோரும் சற்று தாமதமாகத்தான் நடந்தார்கள் என்று எண்ணி குழந்தையை வீட்டிலே வைத்து விடுகின்றனர். பின் தாமதமாக பயிற்சியளிப்பது மிக குறைவான முன்னேற்றத்தையே தரும்.

2. அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள்:- குழந்தையின் அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே நம்மால் கண்டு கொள்ள முடியும். எளிமையாக கண்டு கொள்ள நான் இங்கு குழந்தையின் சில நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

1. குழந்தையை கூப்பிடும் போது திரும்பிப் பார்க்காமல் இருத்தல்.

2. குழந்தையிடம் பேசும் போது முகத்தை பார்க்காமல் இருத்தல்.

3. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருந்தல்.

4. தனியாக விளையாடுதல்.

5. சில சமயங்களில் அடம் பிடித்தல்/ அழுது கொண்டே இருத்தல்.

6. ஓரிடத்தில் அமராமல் சுற்றிக் கொண்டே இருத்தல்.

7. பொது இடங்களில் சுய கட்டுப்பாடு இன்றி அழுதல், அடம் பிடித்தால், மற்றவர்களுடன் பழக மறுத்தல்.

8. பொருட்களை உடைத்தல்/ தூக்கி எறிதல்.

9. இயற்கை உபாதையை கட்டுப்பாடு இன்றி இருக்கும் இடத்திலேயே கழித்தல்.

10. 1 வயதில் பேசிய குழந்தை 1 வயது முதல் பேசாமல் இருத்தல்.

11. வயதுக்கேற்ற புரிதல், பேசுதல் இல்லாமல் இருத்தல்.

12. தனியாக அர்த்தமற்ற வார்த்தைகளால் பேசுதல் அல்லது கத்துதல்.

இது போன்ற செயல்களை நாம் வீட்டில் கவனித்தால் உடனடியாக இதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் கவனிக்க வேண்டியவை.

1. பள்ளியில் ஓரிடத்தில் அமராமல் சுற்றித்திரிதல்.

2. தான் கொண்டு சென்ற பொருட்களை தொலைத்து விடுதல்.

3. சரியாக புரிந்து கொள்ளாமல் இருத்தல்.

4. கையெழுத்து சரியாக இல்லாமல் இருத்தல்.

5. கவனக்குறைவுடன் இருத்தல்.

6. (spelling mistake) எழுத்துப்பிழை உடன் எழுதுதல்.

7. மற்ற குழந்தைகளுடன் ஒத்துக் போகாமல் இருத்தல்.

8. home work சரியாக செய்யாமல் இருத்தல்.

9. வயதுக்கேற்ற பேச்சு இல்லாமல் இருத்தல்.

10. படித்ததை எளிதில் மறந்து விடுதல்.

11. (board copy) கரும் பலகையை பார்த்து எழுதாமல் இருத்தல்.

இது போன்ற பிரச்சினைகளை உங்கள் குழந்தைகளிடத்தில் இருந்தால் உடனடியாக  மருத்துவரை தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.

Tuesday, 4 March 2014

சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?



பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள் பலவற்றை படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள். குறிப்பாக அப்பாக்களை விட, சில மாறுபட்ட சவால்களை அம்மாக்களே எதிர்கொள்கின்றனர்.

இப்போது அம்மாவாக இருப்பவர்கள், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் கீழே சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. தாயாக இருப்பது சில நேரங்களில் சற்று சவாலானதாகவே இருக்கும். அதனால் எப்போதும் அமைதியாகவும் மற்றும் பொறுமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது குறும்பு செய்தால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

2. உங்கள் குழந்தைகளின் விருப்பங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு இசையில் விருப்பமிருந்தால், அவனுக்காக ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாசிப்பதை கவனியுங்கள். குழந்தை கோபமாக இருந்தால், அப்போது அவர்களிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும்.

3. பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் பணத்தை கொடுப்பது சரியில்லைதான், அதற்காக உங்கள் குழந்தை கேட்கும் எந்தவொரு விருப்பத்தையும் உடனே முடியாது என்று நிராகரிக்க வேண்டாம். எதைக்கேட்டாலும் முடியாதென்றும், எப்போதும் பணத்தை சேமிப்பது பற்றிய அறிவுரைகளை சொல்லி, எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்தால், பின் அவர்கள் மனதில் உங்கள் மீது இருக்கும் அன்பு குறைய நேரிடும். எனவே அவ்வப்போது ஏதேனும் விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

4. உங்களை எப்பொழுதும் அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற நபராக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள். எப்பொழுதும் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் மற்றும் அவர்கள் பேசுவதை செவிகொடுத்து கேட்பவராகவும் இருப்பதற்கு, உங்களால் முடிந்தவரை கடினமான முயற்சிகளை எடுங்கள். அம்மாவிடம் நட்புடன் ஆலோசனை கேட்பதும், வயதுக்கு வருவது பற்றிய சந்தேகங்களை கேட்கவும், வீட்டுவேலைகளில் உதவி செய்யவும், அல்லது சாதாரணமாக அம்மாவை கட்டிப்பிடிப்பதும் அவர்களுக்கு தெரியும். தங்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாமலிருந்தால், பின் குழந்தைகள் தனிமையிலேயே இருப்பார்கள். எனவே அவ்வப்போது அவர்களிடம் பேசும் வழக்கத்தை கொள்ள வேண்டும்.

5. குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு மருத்துவம் படிப்பதிலோ அல்லது மருத்துவராக ஆவதிலோ விருப்பம் இல்லையென்றால், அப்போது கோபப்பட வேண்டாம். உங்கள் மகளின் எண்ணம் உங்களுடையதிலிருந்து மாறுபடுவதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளை எப்போதுமே குழந்தையாக எண்ணாமல், அவர்களின் வயதிற்கு ஏற்றவாறு மாறுங்கள். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே பெரியளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். அதனால் அதனையே திரும்பவும் செய்ய வேண்டாமே!

6. தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க பயப்படாதீர்கள். இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் தவறை நீங்கள் ஒப்புக் கொள்வதும் மன்னிப்பு கேட்பதும் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். நீங்கள் பிடிவாதமாக இல்லாமலிருந்தால் அது மற்றவர்கள் உங்கள் மேல் கோபப்படுவதை தடுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுங்கள்.

7. குழந்தை தனது தந்தையை நேசிப்பதற்கு மதிப்பளித்திடுங்கள். உங்கள் குழந்தை, அவர்களது தந்தையை அளவுக்கு அதிகமாக நேசிப்பதைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது.

8. இறுதியாக, மற்ற எல்லாவற்யையும் விட உங்கள் குழந்தைகளை அதிகமாக நேசியுங்கள். அவர்களை நேசிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் அர்த்தம் தராது. எந்த நேரத்திலும் குழந்தைகளை நேசித்தால், அவர்களது மனதில் எக்காலத்திலும் பெற்றோர்களை மறக்காமல் நேசிப்பார்கள்.

Monday, 3 March 2014

பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்புவது உணவா..? விஷமா..?



பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட என்ன செய்து கொடுப்பது என்ற பொறுப்பு தாய்மார்களுக்கு இருக்கிறது. அந்த கடமையை, பொறுப்பை சரிவர செய்யாத பெற்றோருக்கு பிரிட்டனில் உள்ள ஆரம்ப பள்ளியின் நிர்வாகம் மாணவர்கள் எடுத்து வர வேண்டிய மதிய உணவு வகைகள் குறித்த விதிமுறையை அமல்படுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

 மாணவர்களுக்கு, அவர்கள் வயதிற்கேற்ற ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து அனுப்பவேண்டும்; சிப்ஸ், இனிப்பு வகைகள், சாக்லேட்கள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த விதிமுறையை தொடர்ந்து மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் ரிலோ என்னும் ஆறு வயது மாணவன் தினமும் தனது மதிய உணவாக சிப்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து வந்தான். இதையடுத்து, அந்த மாணவனை, நான்கு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

School-Kids 1

பெரும்பாலும் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும் இன்று காலை உணவை தவிர்ப்பது அல்லது அதனைக் குறித்து அலட்சியமாக இருப்பது வழக்கமாகிவிட்டது.

வெளிநாடுகளில் பணியாற்றுவோர் குறித்து கேட்க தேவையில்லை. பெயரளவில் ஏதேனும் ப்ரெட் வகைகளையோ, சாண்ட்விச்சுகளையோ சாப்பிட்டால் போதுமானது என்ற மனோநிலையே அவர்களிடம் காணப்படுகிறது.இப்படி காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.அதிலும் இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.

அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதற்கிடையில் நாம் பள்ளிக்குக் கொடுத்து அனுப்பும் உணவை, நம் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்று நம்மால் உறுதிபடுத்த முடியுமா? குழந்தைகள் சாப்பிடுவது எல்லாம் சத்தான உணவுதானா?அதிலும் நாம் கொடுத்தனுப்பும் தவறான உணவுப் பழக்கத்தினால், குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் விளையவிருக்கும் கேடுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?அதிலும் இன்றைய மாணவர்கள்தான், நாளைய சமுதாயம்.எனவே இம் மாணவர்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை வளரச் செய்வதற்கும், நொறுக்குத் தீனியின் (ஸ்நாக்ஸ் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) தீமைகளை அறியச் செய்வதற்கும், நன்மை அல்லது தீமை தரும் உணவுகளைப் பற்றி எடுத்துச் சொல்வதற்கும், பாதுகாப்பான உணவுகளையே உண்ண வேண்டும் என்பதை உலகமெங்கும் வலியுறுத்தி வரும் அமைப்புகள் அதிகரித்து வருகின்றன.

அண்மையில் கூட சிட்னி பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் தெரேஸா டேவி தலைமையிலான குழு,சென்னையிலிருக்கும் பள்ளிக்கூட மாணவர்களின் மதிய உணவை வைத்து ஆய்வை மேற்கொண்டபோது தெரிந்த விஷயங்களை மறுபடியும் நினைவூட்டிக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது:;

மொத்தம் 300 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்த ஆய்வில் 55.7% பேர் பெண்கள். இவர்கள் கொண்டு வந்த மொத்த உணவு வகைகள் 2,941. இவற்றில் 8% மட்டுமே மாமிச உணவு வகையைச் சேர்ந்தவை. பெரும்பான்மையானோர் புளிசாதம், எலுமிச்சைசாதம், தயிர்சாதம் என தென்னிந்திய அரிசி உணவு வகைகளையே கொண்டு வந்தனர். சில மாணவர்கள் வறுவல், பீட்ஸா உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளையும் மதிய உணவாக கொண்டு வந்தனர். சில குழந்தை கள், கோலா உள்ளிட்ட பானங்களையும் குடிக்கக் கொண்டு வந்திருந்தனர்.

மொத்த மாணவர்களில் 87.7% பேர் வீட்டில் அம்மா செய்து கொடுத்த உணவையும், 7.3% பேர் பாட்டி உள்ளிட்ட மற்றவர்கள் செய்து கொடுத்த உணவையும், மீதமுள்ள 5% குழந்தைகள் ஹோட்டல் உள்ளிட்ட வெளிப்புற உணவையும் கொண்டு வந்திருந்தனர். இதில் வேதனையான ஒரு விஷயம், சில குழந்தைகள் பிரபல சிக்கன் உணவகத்தின் உணவுகளையும், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பான வகைகளையும் கொண்டு வந் திருந்தனர். சத்துமிகுந்த பழங்கள், காய்கறி களை, கைவிட்டு எண்ணக்கூடிய குழந்தைகளே எடுத்துவந்தார்கள்.

84.3% குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த உணவை விரும்பிச் சாப்பிட்டார்கள். மீதமுள்ள குழந்தைகள் வேண்டா வெறுப்போடு சாப்பிட்டார்கள். சில குழந்தைகள் மதிய உணவைச் சாப்பிடவே விரும்பாதவர்களாக இருந்தார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்… அதிக சதவிகித குழந்தைகள், சத்தான உணவுகளைக் கொண்டு வராததோடு, கொண்டு வரும் உணவையும் பிளாஸ்டிக் போன்ற ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களில்தான் எடுத்து வந்தார்கள்” என்றவர், ‘லஞ்ச் பாக்ஸ்’ விஷயத்தில் பெற்றோர், பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார்.
நூடுல்ஸ்… பர்கர்!

பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டுவரும் உணவுகள், பெற்றோர்களின் விருப்பப்படியே அமைகிறது. அதிகமான பெற்றோர்… காலை நேர பரபரப்பில் கட மையே என்று ஏதாவது ஒரு உணவைத் தயா ரித்து கொடுத்து அனுப்புபவர்களாகவும், அது சத்தானதாக, ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதில் எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பெரும்பாலான பள்ளிகள், குழந்தைகளின் மதிய உணவு விஷயத்தில் தலையிடுவதை விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.

இதனால் குழந்தைகளின் உணவுப் பழக்கத்துக்கு வீடு, பள்ளி என இரண்டு இடங்களிலுமே ஒரு கடிவாளம் இல்லை. இதனால் சில குழந்தைகள் பர்கர், பீட்ஸா, நூடுல்ஸ், கோலா என்று அதிக ஆபத்துக்களை விளைவிக்கக்கூடிய உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதுடன், அதையே மதிய உணவாக பள்ளிக்கும் எடுத்து வருகிறார்கள்.

School-Kids lunch

இப்படி பாதிப்புகளை விளைவிக்கக்கூடிய நொறுக்குத்தீனி வகைகளையும், கொழுப்பு உணவுகளையும், உடல் பருமன் உண்டாக்கக் கூடிய உணவுகளையும், ஊட்டச்சத்து இல் லாத உணவுகளையும், உடல் நலத்தை கெடுக் கக்கூடிய உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றனர்’அத்துடன் குழந்தைகள் அருந்தும் பானங்களில் உள்ள சிலவகை அமிலங்கள், பல்லைக்கூட கரைக்கும் தன்மை கொண்டவை.

மேலும் குழந்தைகளின் ஆதரவைப் பெற, இதுபோன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எக்கச்சக்கமான விளம்பரங்களைச் செய்கின்றன..கூடவே இலவச பொருட்களையும் அள்ளித் தருகின்றன. அதனால் குழந்தைகள் விரும்பிக் கேட்க, பெற்றோரும் மறுக்காமல் வாங்கித் தருகிறார்கள்.

அது மட்டுமின்றி இப்போது இந்தியாவில் ஆண்டுக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நொறுக்குத்தீனி மட்டுமே விற்பனை ஆகிறதாம். இதை அதிகமாக குழந்தைகள்தான் உட்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நொறுக்குத்தீனிகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால், குழந்தைகளின் உடல்பருமன் அதிகரிக்கிறது. விளைவு எதுவரை செல்கிறது என்றால், புகைப்பிடித்தலுக்கு அடுத்தபடியாக இந்த உடல் பருமன்தான் இறப்புக்குக் காரணமாக அமைகிறதாம்.

 ‘கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளிடம் உடல் பருமன் மும் மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே இதய நோய்க்கான மிகமுக்கியக் காரணியாக இருக்கிறது’ என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘நொறுக்குத் தீனிகள் மிக விரைவில் உடலில் உள்ள ஈரலையும் பாதிப்படையச் செய்கின்றன’ இதனிடையேதான் பிரிட்டன் பள்ளிகள் லஞ்ச் விஷயத்தில் கெடுபிடியாக நடந்து கொள்கிறது. அது போல இங்கேயும் பள்ளி நிர்வாகம் நடந்து கொள்ள அனுமதிக்காமல் பார்த்துக் கொள்வது நம் கையிதான் உள்ளது,  

குட்டீஸ்களுக்கு உணவு ஊடடும் போது பொறுமை முக்கியம்..!

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

dec 7 health child food

ருசியான உணவு

குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.
தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.


சரியான அளவு

குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.


ஊட்டச்சத்து உணவுகள்

புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.


பொறுமை அவசியம்

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.


ஸ்பூன் எச்சரிக்கை

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.


முன் உதாரணம்

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.


Sunday, 2 March 2014

பற்களை பாதுகாப்பது எப்படி......?



நம் அன்றாட வாழ்வில் பல் துலக்குதல் ஓர் அத்தியாவசியமான அங்கமாகிவிட்ட காலமிது. காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. துலக்கி முடிக்கும் வரை நாம் வாயில் எச்சில் கூட்டி விழுங்கவும் தோன்றாது, துப்பவும் தோன்றாது படும் அவதி ஓர் தனி விதம்.


துலக்கிய பின் தோன்றும் புத்துணர்வும், தூய்மை உணர்வும் ஓர் தனி இன்பமே. எனவே பல் துலக்குதல் காலைக் கடன்களில் ஒன்றாகவேக் கருதப்பட்டு, அனைவராலும் சாதி, மத பேதமின்றி, அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆகையினால் நாம் இந்த நல்ல பழக்கத்தினை சரியாக அறிந்துக் கொண்டு, சரிவர கடைப்பிடித்தலை கடமையாகக் கொள்வது கட்டாயம் தானே.

பல் துலக்குதலின் முக்கியத்துவம்:

முதற் கோணல் முற்றும் கோணல் என்பது பழமொழி. நாம் காலையில் செய்யும் இம் முதல் காரியமே சரியாக அமைந்தால் அன்றைய அனைத்து காரியங்களுமே சரியாக நடக்கக் கூடுமன்றோ... பல் துலக்குதலின் சரியான வழிமுறையினையும், நுட்பத்தினையும் நாம் அறிந்துகொண்டு, நல்ல பலனடைந்து, நம் வழித்தோன்றல்களுக்கும் இந்த நல்ல பழக்கத்தினை படிப்பித்து, பலனடைய வைப்பது நமது கடமை. பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்க வல்லது.

நாம் ஏன் பல் துலக்க வேண்டும்?

பல் துலக்குதல் என்பது நம் வாயிலும் பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். இந்த அழுக்கை ஆங்கிலத்தில் plaque என்றும் tartar என்றும் கூறுவர். இந்த அழுக்கானது, பல் ஈறுகளிலிருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்களும் கலந்த ஓர் கலவையே. பல் துலக்கிய இரண்டு அல்லது மூன்று மணிகளுக்குள்ளே இந்த அழுக்கு (plaque) பல் ஈறுகளில் படியத் துவங்கும். இவைகள் பல்லை மட்டுமல்லாமல் பல் ஈறுகளுக்கும் பாதிப்புகளை அதிகமாக்குவதோடு, பற்களை இழப்பதற்கும் காரணமாகிவிடுகிறது. எனவே பற்களை இருமுறை துலக்குதலும், உணவு உண்டபின் ஒவ்வொரு முறையும் மிக நன்றாக வாய் கொப்பளித்தலும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும். இதற்குத் தண்­ரையோ, கொப்பளிக்கும் திரவத்தையோ உபயோகிக்கலாம்.

எப்படி சரியாக பல்லைத் துலக்குவது?

பல் துலக்குவதற்கு ஒரே ஒரு சரியான முறைதான் உள்ளது என்ற நிலை இல்லை. அந்நுட்பம் ஒவ்வொருவரின் வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ள தன்மையினைப் பொருத்து மாறுபடும். பரவலாக, பல் மருத்துவர் பலராலும் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப்படும் அழுக்கினை (plaque) நீக்கும் வழியினை இங்கு பார்ப்போம்.

பெரியவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறை:

பல் துலக்கியின் (plaque) குச்சுகள் 45 டிகிரி கோணத்தில் ஈறுகளின் மேல் சாய்த்துப் பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல், முன்னும், பின்னும் நகர்த்தி, சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும். இம்முறையை கடைவாய் பற்களில் துவக்கி முன் பற்கள் வரை, மூன்று, மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின் வலது, இடது, உள், வெளிப் பக்கங்களிலும், அதே போல் கீழ் தாடையிலும் வலது, இடது, உள், வெளிப் பக்கங்களிலும் தேய்க்க வேண்டும். இச் சுழற்சியினை சுமார் 15 முதல் 20 முறைகள் ஒவ்வோர் இடத்திலும் மேற்கொள்ள வேண்டும்.

முன் பற்களுக்கு மட்டும் பல் துலக்கியை செங்குத்தாக பிடித்து 45 டிகிரி கோணத்தில் மேலும் கீழும் நகர்த்தி, உள்ளும் வெளியும் தேய்த்து விட வேண்டும். கடைவாய் பற்களின், மெல்லும் மற்றும் கடிக்கும் பகுதிகளில் பல்துலக்கியின் குச்சுகளால் நன்றாக அழுத்திப் பிடித்து முன்னும் பின்னுமாகத் தேய்த்து விட வேண்டும். பற்களைத்தான் செம்மையாகத் தேய்த்து முடித்தாயிற்றே என்று முடித்து விடாமல் மறவாது நமது நாக்கின் புற பகுதிகளில் பல் துலக்கியால் முன்னும் பின்னும் அசைத்து நகர்த்தித் தேய்த்தால், வாய் துர்நாற்றம் வீசக் காரணமான கிருமிகளை அகற்றி விட முடியும்.

சிறியவர்களுக்கான முறை:

சிறார்களை பல் மற்றும் ஈறுகளில் பல் துலக்கியின் குச்சுகளால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறிவுறுத்த வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, பச்சிளம், பல் முளைக்காத பாலகர்களுக்கும் பக்குவமாக ஈறுகளை விரல்களால் தேய்த்து விடுதல் சாலச் சிறந்த முறை. குழந்தைகளை பாசப் பரிவுடன் ஒரு கையில் ஏந்திக்கொண்டு மறு கையில், ஆள்காட்டி விரலில் ஈரத் துணி சுற்றி ஈறுகளில் இதமாக முழுதாகத் தடவி துடைத்து விட வேண்டும்.

எத்தகைய பல்துலக்கிகளை உபயோகித்தல் நல்லது?

மிருதுவான, கூர்முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய பல் துலக்கியால் பல் துலக்குவது நல்லது. கூர் முனை குச்சுகளைத் தவிர்க்க வேண்டும். கடினமான மற்றும் விரைப்பான குச்சுகள் கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதப்படுத்தி விடக்கூடும். அவைகளைத் தவிர்த்தல் நலமே.

எவ்வித பற்பசைகளை உபயோகிக்கலாம்?

பற்சிதைவைத் தடுக்கும் தன்மை வாய்ந்த புளூரைடு கொண்ட பற்பசைகளை உபயோகித்தல் நல்லது. சிறுவர்களுக்கு ஒரு பட்டாணியின் அளவிலான பற்பசையினை உபயோகித்தலே போதுமானது. ஏனெனில் சில சிறுவர்கள் அதிக பற்பசை வைத்தால் துலக்கும்போது விழுங்கிவிட வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு உடலில் அதிக அளவிலான புளூரைடு நிறைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும்.

பற்களை எப்படி பாதுகாப்பது?

பற்களை குண்டூசி மற்றும் குச்சிகளை வைத்து குத்தக் கூடாது. அப்படி குத்துவதால் ஈறுகள் பாதிக்கப்படும். புகையிலை, புகை, போதைபாக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிகக் கடினமான பொருட்களை பற்களைக் கொண்டு கடிக்கவோ, உடைக்கவோ கூடாது.

பற்களைப் பாதுகாக்க அதிகளவு ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உணவுகளையும், நார்ச்சத்து நிறைந்த பழங்களையும் சாப்பிட வேண்டும். பல்வலி, பல்கூச்சம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. பல் துலக்கியவுடன் ஆள்காட்டி விரலைக் கொண்டு பல் மற்றும் ஈறுகளை நன்கு தேய்க்க வேண்டும். பல் துலக்கும் பிரஷ்ஷை அடிக்கடி வெந்நீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் கழுவுவது நல்லது.

தவறான பல்துலக்கும் நுட்பம் தரும் பாதிப்புகள் என்ன?

உடலிலேயே மிக மிகக் கடினமானது, கெட்டியானது எதுவென்றால் அது பல்லின் வெளிப்புறமுள்ள எனாமல்தான். இது எலும்பை விட உறுதியானது. தவறான, முறையற்ற வகையில் பல் துலக்கும் பழக்கம் இந்த உறுதியான எனாமலையும் பாதித்து, செயலிழக்கச் செய்து, பற்சிதைவை உருவாக்கிவிடக் கூடும். அத்தோடு ஈறுகளை சிதைத்து, இரத்தம் வழியவிட்டு, புண்ணாக்கி பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எப்பொழுதும் பதமாக, மெதுவாக பல் துலக்கிகளை உபயோகிப்பீர். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பல் துலக்கிகளை மாற்றிவிடுவது அவசியம்.

பெற்றோர்களுக்கு பக்குவமான பத்து டிப்ஸ்..!



* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.

* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக 'மெய்ன்டெய்ன்' செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.

* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.

* அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 'பாக்கெட் மணி' கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.

* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் 'வாக்கிங்' அழைத்துச் செல்வதும் அவசியம்.

* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, 'இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்' என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

* பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.

* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.

மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்..

குழந்தைகள் பாதுகாப்பு - குழந்தை வளர்ப்பு....- சில டிப்ஸ்கள்



* கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.

*கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.

* சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.

* தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.

* குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்

* மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.

* குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.

* சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.

* குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.

* குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.

* கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

* குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.

 * கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

* இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.

* ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

 * தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.

* சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.

* கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

* பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.

* வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.

* மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

* மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.

* இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.

* சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

* சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.

 * ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.

* சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம். * வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

* கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

* தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்

* சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.

* ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.

* கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.

* எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்..

* வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.

* குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

* குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.

* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.

* வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.

* குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.

* துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.

* தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.

* குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.

* குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.

* நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.

* வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.

* விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.

மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்..!



உங்கள் மகள் வாழ்க்கையில் உள்ள நல்லது கெட்டது, புதிய பல விஷயங்கள் போன்றவைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்துடன் தானும் சேர்ந்தே வளர்கிறாள். இந்த பருவத்தில் தான் அவள் காதலிலும் விழுகின்றாள்.

அவள் உணர்ச்சிகளுக்கு போராட்டங்களை உண்டு பண்ணும், பல உணர்ச்சிகளை கொண்ட பல நபர்களின் அறிமுகமும் கிட்டும். அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவளை சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல நீங்கள் தான் சிறந்தவர். அதனால் காதல் பாடங்களைப் பற்றிய முக்கியத்துவத்தைப் பற்றி பார்க்கலாம்.

உங்கள் மகள் தன்னை தானே விரும்ப அவளுக்கு கற்றுக் கொடுங்கள். அவள் அவளை விரும்பினால் தான் மற்றவர்களாலும் அவள் விரும்பப்படுவாள். தன்னுடைய தேவைகளுக்கு மரியாதை கொடுத்து தன்னை தானே காதலிக்க கற்றுக் கொடுங்கள்.

"உன்னை நீ எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை." என்பதை தான் ஒரு தாய் தன் மகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவளை மாற்ற யாராவது வலியுறுத்தினாலோ அல்லது காதலுக்கு அவள் லாயக்கில்லை என்று யாராவது வசை பாடினாலும், அவர் உங்கள் மகளுக்கு ஏற்றவர் அல்ல என்பதை அவளுக்கு புரிய வையுங்கள்.

ஒரு தாயாக பாலுணர்வை பற்றி பேச உங்களுக்கு விருப்பமிருக்காது. ஆனால் உங்கள் மகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவளுக்கு தேவையான சுகங்கள் மற்றும் பாலுணர்வை நேர்மறையான ஆசையாக யோசிக்க அவளுக்கு கற்றுக் கொடுத்தால், அவள் அவைகளை அனுபவிக்கும் தயார் நிலைக்கு வரும் போது பயனுள்ளதாக இருக்கும். .

ஏதோ குறை இருந்து கொண்டே இருக்கிறது என்று அவள் தொடர்ந்து குற்றஞ்சொல்ல தூண்டுகோலாக இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். எந்த இடத்தில் தவறு உள்ளது என்பதை அறிந்து அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அவளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..!




பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம் என்று தான். ஆனால் இப்படி வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இந்தியாவில் பார்க்க முடியாது. மாறாக மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்தால் தெரிந்திருக்கலாம்.

ஏனெனில் இந்தியாவில் குழந்தை பெண்ணாக இருந்தால், கருவிலேயே சிலர் கலைத்துவிடுகின்றனர் என்பதால் தான். இருப்பினும் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நம் முன்னோர்களின் வாக்கு மூலம் தெரிந்து கொள்ளலாம்.


கர்ப்பிணிகளே! குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...

மேலும் அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள். இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம்.
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.


வயிற்றின் நிலை

வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம். எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம்.

சிறுநீரின் நிறம்

நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு வந்தார்கள்.


பிம்பிள்

கர்ப்ப காலத்தில் பிம்பிளால் அவஸ்தைப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம்.


சிறிய வயிறு

நிறைய பெண்கள் வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த கூற்றின் படி பல பெண்களுக்கு சரியாக நடந்துள்ளது என்றால் பாருங்களேன்.

மார்பகத்தின் அளவு

கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருக்குமாம்.


குளிர்ச்சியான பாதம்

கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.


இதயத்தின் துடிப்பு

ஒவ்வொரு முறை மருத்துவரை சந்திக்கும் போதும், குழந்தையின் இதயத்தின் துடிப்பை கண்காணித்து வாருங்கள். ஏனெனில் குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

கூந்தல் வளர்ச்சி

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கூந்தலின் வளர்ச்சி. கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.


ஆசை

கர்ப்பமாக இருக்கும் போது உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுவது சாதாரணம் தான். ஆனால் புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமாக இருந்தால், அது வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம்.


தூங்கும் நிலை

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும். இருப்பினும்., அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.


கைகள்

எவ்வளவு தான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அதுவும் ஆண் குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

Saturday, 1 March 2014

ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்பும்! – அதிர்ச்சி தகவல்..!



மருத்துவமனைகளில் நாம் அமரும் சோபா, நாற்காலி, அங்குள்ள பழைய பேப்பர், புத்தகங்கள் மற்றும் அங்கு பணிபுரியும் சுகாதார ஊழியர்களின் கைகளின் மூலம் பாக்டீரியாக்கள் பரவுகின்றன என்ற முன்னரே கண்டறிந்தறிந்துள்ளனர்.

இதனிடையே மருத்துவர்கள் உபயோகிக்கும் ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்புகிறது என்றும் தொற்றுநோய் எதிர்ப்பு, நோயாளி பாதுகாப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்புகளும் ஒவ்வொரு பரிசோதனைக்குப் பின்னரும் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் தற்போதைய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்டெதாஸ்கோப்பை ‘லேனக்”என்ற பிரெஞ்சு டாக்டர் 1816 – ம்ஆண்டில் கண்டறிந்தார். சிறுவர்கள் ஒரு குழாயின் மேல் பகுதியில் ஒலி எழுப்பி,அதை குழாயின் கீழ்ப்பகுதி மூலம் கேட்டு மகிழ்ந்ததை லேனக் பார்த்தபோது ,”அடடே. நமது இதயம் மற்றும் நுரையீரல் ஒலிகளை இப்படிக் கேட்க முடியுமா?” என்ற யோசனை தோன்றியதாம்.இந்த எண்ணத்துக்குக் கிடைத்த பரிசுதான் ஸ்டெதாஸ்கோப் எனும் கருவியாகும்.

இந்த ஸ்டெதாஸ்கோப் பெரும்பாலும் டாக்டர்கள் தங்கள் கல்லூரி வாழ்க்கையின் போது வாங்கியதைதான் பயன் படுத்தி வருகிறார்கள். அதை யாரும் சுத்தப்படுத்தியதாக தெரியவில்லை. இந்நிலையில்தான் ஜெனிவா மருத்துவமனைகளின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு உடல் பரிசோதனை மூலம் மருத்துவரின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்பும் பரப்பும் பாக்டீரியாக்களின் அளவைக் கண்டறிந்துள்ளனர்.

71 நோயாளிகளை மூன்று மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்கும்போது அவர்களில் ஒருவர் ஒவ்வொருமுறையும் சுத்தம் செய்யப்பட்ட ஸ்டெதாஸ்கோப்பையும், கையுறைகளையும் பயன்படுத்தியதன்மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு நோயாளியின் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டபின் ஸ்டெதாஸ்கோப்பின் குழாய் மற்றும் அடிப்பகுதி, மருத்துவரின் கைகளின் நான்கு பகுதிகள் போன்றவற்றில் சேரும் பாக்டீரியாக்களின் அளவு தனித்தனியே கணக்கிடப்பட்டது.

மருத்துவர் களின் விரல்நுனியும், ஸ்டெதாஸ்கோப்பின் அடிப்பகுதியும் பாக்டீரியாக்கள் அதிகம் சேரும் இடங்களாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இத்தகைய ஒப்பிடுதலை நேரடியாக நடத்திய முதல் ஆய்வு இதுவென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஒரு நாளில் தொடர்ந்து உபயோகிக்கப்படும் ஸ்டெதாஸ்கோப் பல நோயாளிகளின் தோல்பரப்பின் மீது நேரடியாக வைக்கப்படுகின்றது.

இதனால் எம்ஆர்எஸ்ஏ போன்ற கடுமையான தொற்றுவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இந்தக் கருவியில் சேர வாய்ப்புண்டு. அதுமட்டுமின்றி மருந்து எதிர்ப்பு தன்மை உடைய பாக்டீரியாக்களும் நோயாளி பரிசோதனையின்போது இந்தக் கருவியில் படிய வாய்ப்புள்ளது என்பதால் பாக்டீரியாக்களைப் பரப்புவதில் ஸ்டெதாஸ்கோப்புகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தலைமை ஆராய்ச்சியாளரான டிடியர் பிட்டெட் தெரிவித்தார்.

தொற்றுநோய் எதிர்ப்பு, நோயாளி பாதுகாப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்புகளும் ஒவ்வொரு பரிசோதனைக்குப் பின்னரும் முறையாக சுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Thursday, 27 February 2014

பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும்..!



குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. அதிலும் அவர்களை நம் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது மிகவும் கடினமானது. ஆகவே குழந்தைகள் நம் பேச்சை கேட்க மறுக்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்கள் குழந்தைகளை மிரட்டுவதோ, அடிப்பதோ அல்லது அவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் நடந்தால் மட்டும் குழந்தைகளை நம் வழிக்கு கொண்டு வர முடியாது.

child and parentsமாறாக, இதனால் குழந்தைகளின் மனதில் கெட்ட அபிப்பிராயத்தைத் தான் பெற முடியும். பின் பிற்காலத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கமாட்டார்கள்.

ஆனால் குழந்தைகளிடம் பொறுமையாகவும், அன்பாகவும், அவர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொண்டு அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்தாலும், அவர்கள் நிச்சயம் காதைக் கொடுத்து கேட்டு புரிந்து கொண்டு நடப்பார்கள். மேலும் இதனால், குழந்தைகள் தங்கள் பெற்றோரை அளவுக்கு அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பதோடு, அவர்களுக்கு நெருங்கிய நண்பனாகவும் ஆக முடியும்.

ஏனெனல் அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்க முடியும். அதுமட்டுமின்றி, எப்பேற்பட்ட குணமுடையவரையும் பணிய வைக்க முடியும். இங்கு குழந்தைகள் பெற்றோர்களின் சொல் பேச்சை கேட்டு நடக்க வேண்டுமானால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றி, உங்கள் குழந்தைக்கு பிடித்த பெற்றோராக இருங்கள்.

குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்கும் போது, அவர்களிடம் சத்தமாகவோ, மிரட்டும் படியாகவோ சொல்லக் கூடாது. இதனால் குழந்தைகளின் மனம் தான் அதிகமாக கஷ்டப்படும். ஆகவே பொறுமையை கையாண்டு, மென்மையாக சொல்ல வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் வெளிப்படையாக பேசினால், அவர்களது மனதில் நல்ல இடத்தைப் பிடிப்பதோடு, அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருக்க முடியும். அதுமட்டுமல்லாமல், அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஒருவேளை அவர்களிடம் அப்படி இல்லாவிட்டால், அவர்கள் உங்களிடம் எதையும் பகிராமல், அவர்களுக்கு தோன்றுவதே சரி என்று செய்ய ஆரம்பிப்பார்கள்.

எப்போதுமே உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம். இது அவர்களது மனதில் பெரிய வடுவாய் அமைந்து, அவர்களுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும். மேலும் இவ்வுலகில் அனைத்து குழந்தைகளுமே ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு எந்த ஒரு கட்டளை இடுவதாக இருந்தாலும், அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மென்மையான முறையில் சொல்ல வேண்டும். அதை விட்டு, பாடம் எடுப்பது போல் எதை எதையோ சொன்னால், அவர்களுக்கு கடுப்பு வந்து, பின் உங்கள் வார்த்தையை மதிக்கக்கூட மாட்டார்கள்.

குழந்தைகளிடம் பழகும் போது குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றவாறு யோசித்து, அவர்களைப் போலவே சிந்தித்து, அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும். இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

குழந்தைகள் விருப்பப்பட்ட எதற்கும் வேண்டாம் என்று சொல்லாமல், சரி என்ற சொல்லிப் பாருங்கள். இதன் மூலம் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் வார்த்தையை மதிப்பதோடு, நீங்கள் அவர்கள் மீது வைத்துள்ள அன்பையும், அக்கறையையும் புரிந்து கொண்டு, எந்த ஒரு தவறான பாதைக்கும் செல்லமாட்டார்கள். இப்படி சிறு வயதிலிருந்தே நடந்து கொண்டால், பிற்காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும்.

குழந்தைகள் ஏதேனும் ஒரு பெரிய தவறு செய்துவிட்டால், அந்த தவறைப் பற்றி எப்போதும் பேசாமல், அவர்களிடம் கூலாக இனிமேல் அந்த தவறை செய்யாதே, அதை மறந்துவிடு என்று மன்னிக்கும் குணத்துடன் பேசிப் பாருங்கள். பின் உங்கள் குழந்தைகள் உங்கள் மீது எவ்வளவு பாசம் வைத்து, உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள் என்று புரியும்.

தற்போதுள்ள குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் எதற்கும் காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்கள். எனவே அவர்களை ஒரு விஷயம் செய்யதே என்று சொல்வதாக இருந்தால், அந்த விஷயத்தை செய்வதால் ஏற்படும் தீமைகளை விரிவாக சொல்லுங்கள். இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதனை செய்யவேமாட்டார்கள்.

உங்கள் குழந்தை ஏதேனும் சிறு விஷயத்தை வெற்றிகரமாக முடித்தாலும், மிகுந்த சந்தோஷப்பட்டு அவர்களை வாழ்த்த மறக்க வேண்டாம். இப்படி வாழ்த்துவதன் மூலம், அவர்களுக்கு உங்கள் அன்பு வெளிப்பட்டு, உங்கள் மீது பிரியம் அதிகரித்து, உங்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள்.

பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கும் நம் மூளைக்கு எட்டாத ஒருசில விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆகவே அவர்களது பேச்சுக்கும் மதிப்பு கொடுத்து கேட்டால், அவர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடப்பார்கள்.

Friday, 21 February 2014

மைதா உணவுகளால் ஏற்படும் விளைவுகள் - எச்சரிக்கை..!



உணவுதான் நம்மை உருவாக்கிருக்கிறது.நீங்கள் யார் என்று கேட்டால் அது உணவுதான்.உண்மையில் நலவாழ்வு உணவைச்சார்ந்து இருக்கிறது.அது நோய்களைத்தீர்மானிக்கிறது.கிருமிகளை எதிர்க்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை.உடலின் சீரான வளர்சிதை மாற்றத்தை நம்முடைய சாப்பாடுதான் முடிவு செய்கிறது.இன்று மருந்துக்கடைகளில் குவியும் மக்களை அங்கே அனுப்பி வைக்கக் காரணம் உணவுமுறைதான்.


ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் இருக்கிறார்கள்.ஆனால் முக்கியமாக உணவியல் நிபுணர்கள்தான் தேவை. நீரிழிவு நோயாளிக்கான உணவு, இதய நோயாளிக்கான உணவு என்று ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு கூடுதலான கலோரி தேவை.ஒல்லியாக இருப்பவர்களுக்கும்,உடல் பருமன் உள்ளவர்களுக்கும் தனித்தனி உணவுப்பட்டியல் வேண்டும்.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை இன்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர் இருந்தவரை பப்பாளி,கொய்யா,வாழை,அகத்தி,நெல்லி போன்றவை வாய்க்கால் ஓரமாகவே கிடைத்துவிடும்.இன்றைய நிலை அப்படி இல்லை.நம்முடைய உணவில் தேவையான உயிர்ச்சத்துக்கள் இருக்கிறதா? என்பது நமக்குத்தெரியாது.

அன்றாட உணவில் ஏ வைட்டமின் எவ்வளவு இருக்கவேண்டும் என்று எத்தனை பேருக்குத்தெரியும்? இன்றைய நம் உணவில் எந்தெந்த உணவு மூலம் அந்த அளவைப்பெற்றிருக்கிறோம்? போதுமான அளவு நார்ச்சத்தை சாப்பிட்டோமா? ஒரு நாள் சரியாக காலைக்கடன் கழிக்காவிட்டால் மனநலனில் கூட மாற்றம் ஏற்படுகிறது.மலச்சிக்கல் வந்தவனைப்போல இருக்கிறான் என்று சொல்கிறோம்.

வெளியில் சாப்பிடுவதே அவ்வளவு ஆரோக்கியமில்லை என்று சொல்கிறோம்.ஆனால் இரண்டு பேரும் வேலைக்குச்செல்லும் சூழலில் வீட்டுக்கு பார்சல் வாங்குவது அதிகரித்திருக்கிறது.உணவகங்கள் அதிகரிக்கின்றன.குழந்தைகளுக்கான தின்பண்டங்களும் பொட்டலங்களை நம்பி இருக்கின்றன.சென்ற ஆண்டு ஒரு பேக்கரி இருந்த வீதியில் இன்று ஐந்து இருக்கின்றன.அத்தனையும் வியாபாரம் கொழித்துக்கொண்டிருக்கின்றன.


வெளியில் வாங்குபவை பெரும்பாலானவை மைதாவால் செய்யப்படும் உணவுகள்தான்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருபதிவில் மைதா நீரிழிவைத்தூண்டுகிறது என்று கேரளாவில் நடைபெறும் போராட்டம் பற்றி சொல்லியிருந்தேன். வலைப்பதிவுகளில் விரிவாக சில பதிவுகள் வந்திருக்கின்றன.இன்று வெகுஜன ஊடகங்களிலும் விவாதமாகிவிட்டது.தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.

புதிதாக வேலைக்காக வெளியூர் வந்த ஒருவர் தினமும் இரவில் பரோட்டா சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.மருத்துவர் ஒருவரது அறிவுரைக்குப்பிறகு அந்தப்பழக்கத்தை விட்டுவிட்டார்.இப்போது  மருத்துவமனைகளில் கூட மைதா உணவுகளைத்தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்படுகிறது.தொற்றுநோயல்லாத நோய்களுக்கான(Non-communicable diseases) திட்டத்தில் முக்கிய தகவல்களாக சொல்லப்படுகின்றன. நார்ச்சத்து,எண்ணெய் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


நீரிழிவு அச்சுறுத்தும் விதத்தில் அதிகரித்துவருகிறது.இன்று சமூகப்பிரச்சினையாக கவனம் கொள்ளக்கூடிய நலக்குறைவு அது.உழைப்பு நாட்களை வீணடிப்பது ஒருபுறம்,மருத்துவச்செலவினங்கள் அதிகரிப்பது இன்னொருபக்கம் என்று நெருக்குகிறது.எப்போதாவதுதானே சாப்பிடுகிறோம் என்பது சூழல் காரணமாக அடிக்கடி என்று மாறிவருகிறது.குழந்தைகளுக்கும் இவற்றையே பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

நம்மைப்போன்ற வளரும் நாடுகளில் உணவுகளைப்பரிந்துரைக்கும்போது கவனம் தேவை.அவை ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை போக்குவதாக இருக்கவேண்டும்.அன்றாடத்தேவையான உயிர்ச்சத்துக்களையும், தாதுக்களையும் வழங்கவேண்டும். உணவுப்பொருள் ஒன்றை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் கவனத்தில் கொள்ளவேண்டியவை இவைதான்.சுவைக்காக மட்டும் ஒரு உணவைப் பரிந்துரைப்பது தனிமனிதனுக்கும்,தேசத்துக்கும் இழப்பை ஏற்படுத்தும்.


1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு பற்றி....!



1 முதல் 3 வயது வரை குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கலோரி, 1.2 கிராம் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளின் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிற பழங்களைக் கொடுக்க வேண்டும். தக்காளி, ஆரஞ்சு தரலாம். கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இவற்றிலிருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.

கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக்கு நல்லது. காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக் கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் தரலாம்.

இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை தரலாம். மதிய உணவில் ஒரு முட்டை/மீன்/மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும். வெண்ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.

Thursday, 20 February 2014

குழந்தைகளுக்கான உணவில் கொஞ்சம் கவனம் தேவை..!



குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் செலுத்த வேண்டிய சிறப்பு கவனம் குறித்து விளக்குகிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள் “குழந்தைகளுக்கு பெரும்பாலும் நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் மூளைக்காய்ச்சல் போன்ற அபாயங்களைத் தவிர்க்க முடியும். மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.

அது வரை வேறு உணவுகள் தரத் தேவையில்லை. குழந்தை பருவத்தில் அறிகுறி இல்லாமல் காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் என்பது நேரடியான நோய் கிடையாது. உடலில் உள்ள வேறு ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். எனவே காய்ச்சலுக்கு சரியான காரணம் கண்டறிந்து மருந்து அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த சமயத்தில் ஆரம்ப அறிகுறியை மருத்துவரிடம் காட்டி மூக்கடைப்பு, சளித் தொல்லைகளுக்கான மருந்துகளை உபயோகிக்கவும்.

அதேபோல் சத்தான உணவுகள் தருவதன் மூலமும் குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்கலாம். குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் துணியை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதிலும் கவனம் தேவை. தாய்ப்பால் குறைவாக இருந்தால் புட்டிப் பால் கொடுக்கப்படுகிறது.

இது போன்ற சமயத்தில் கவனமின்மையால் நோய்த் தொற்று பரவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் காய்கறிகள், கீரை வகைகளை கல் உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி சமைக்க வேண்டும். தண்ணீரின் வழியாக அதிகளவில் நோய்கள் பரவுவதால் காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தாமல் விடும் போது குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவுகள், பழச்சாறுகள் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தை வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது.குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.

சாதாரண சளித் தொல்லை ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும். குழந்தை அழும் போது அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும் எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள்
முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.

சரியான சத்தான உணவு முறை மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாது. சின்ன பிரச்னை வந்தாலும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து தரலாம். மருந்துக் கடைகளில் மருந்து வாங்கித் தருவது மற்றும் மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தைப் பயன்படுத்துவதும் தவறு. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை மிக்கது. அந்தக் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் பொறுப்பு.

ரெசிபி

நவதானியக் கஞ்சி: முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து தனித்தனியாக வறுத்து அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்க தேவையில்லை. காய்ச்சிய பாலில் இந்த தானிய மாவைக் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். வழக்கமாக தாய்ப்பாலை அடுத்து புட்டிபால் கொடுக்கும் போது இந்த உணவை துவங்கலாம்.

வெஜ்ரைஸ்: கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி ஆகியவற்றை ஒன்றாக குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி சாதம் குழைய வேக விடவும். வெளியில் எடுத்து சாதத்தை லேசாகக் கடைந்து நெய் சேர்த்து ஊட்டலாம்.

ஸ்வீட் ஆப்பிள்: ஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு ஆவியில் அல்லது நேரடியாக தண்ணீரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் தோலை சீவி விட்டு ஆப்பிளை மசித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். தினமும் இப்படிக் கொடுப்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். விரும்பி சாப்பிடும். போதுமான
சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.

டயட்

குழந்தை பிறந்து 5 மாதங்கள் வரை தாய்ப்பால் தான் சிறந்த உணவு. இந்தக் காலகட்டத்தில் சத்துள்ள உணவுகளை தாய் உட்கொள்ள வேண்டும். பிரசவ காலத்தில் தாயின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறுவதால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாயும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நான்கு, ஐந்து மாதங்கள் ஆகும் போது, கலப்புணவு கொடுக்க வேண்டும்.

 கஞ்சி, சூப் போன்ற திரவ உணவுகளில் துவங்கலாம். பழச்சாறுகள் ஐஸ் சேர்க்காமல் கொடுக்கலாம். குழந்தைக்கு பல்வேறு சுவைகளையும் இவ்வாறு அறிமுகம் செய்யலாம்.

கலப்புணவு கொடுக்கும் போது சாதத்துடன் துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து கொடுக்கலாம். இதன் அடுத்தகட்டமாக காய்கறிகள் சேர்த்து வேகவைத்து தரலாம். வேக வைத்த முட்டையும் சாப்பிட தரலாம். குழந்தைக்கு எட்டு மாதங்கள் ஆனதும் இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம் கொடுத்து பழக்கலாம். குழந்தைக்கு ஊட்டும் உணவு மிருதுவாகவும், எளிதில் ஜீரணம் ஆகும் வகையிலும் இருக்க வேண்டியது அவசியம். வளரும் குழந்தைக்கு இரண்டு கப் பால் அவசியம். தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம் ஆகியவையும் தரலாம். இனிப்பு குறைவான சாக்லேட், பிஸ்கெட் தரலாம். குழந்தைகள் பசித்தால் அழுவார்கள். அவர்களை வற்புறுத்திக் கொடுக்கவேண்டியதில்லை என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

சுத்தமான தேங்காய் எண்ணெயை சுட வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் விடவும். அது கொதித்து அடங்கியதும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து இறக்கவும். ஒரு வயது வரை குழந்தையின் உடலில் இந்த எண்ணெய் தேய்த்து பின்னர் பாசி பயறு மாவு தேய்த்து குளிக்க வைப்பதன் மூலம் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.

ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு அரை ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்து குழந்தையின் தலையில் தேய்த்து ஊற விட்டு குளிக்க வைத்தால் சூடு தணிக்கும். கிருமித் தொற்றில் இருந்து தடுக்கும். மாதம் ஒரு முறை மட்டுமே இப்படிக் குளிக்கலாம். கடுக்காய்த் தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் குளிப்பாட்டினால் குழந்தைக்கு ஜலதோஷம் வராமல் தடுக்கலாம்.

முற்றிய தேங்காயில் இருந்து எடுத்த கெட்டியான பாலைக் காய்ச்சி எண்ணெய் எடுக்க வேண்டும். அந்த எண்ணெயை வடிகட்டி குழந்தைக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு குடிக்கக் கொடுத்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

6 மாதக் குழந்தைக்கு வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் வராது.

கொய்யா இலையை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் பேதி நின்று விடும்.

கேழ்வரகை முதல் நாள் ஊற வைத்து அதை அரைத்து துணியில் போட்டு வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வும். இத்துடன் பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். 6 மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு ரசம் சேர்த்தும் கொடுக்கலாம்

Wednesday, 19 February 2014

'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய மருத்துவ தகவல்கள்..!



பிறந்த குழந்தையால் தனக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் பற்றி சொல்ல முடியாது. அதனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை பெற்றோர்களால் எளிதில் கண்டு பிடிக்கவே முடியாது. ஆனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை குழந்தை மலம் கழிப்பது வைத்து கண்டறியலாம். இது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், இது தான் உண்மை.

ஏனெனில் குழந்தைக்கு உள்ள பிரச்சனையை குழந்தையின் மலத்தைக் கொண்டு கண்டறியலாம். அதே சமயம், மலத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் குழந்தை சாதாரணமாகத் தான் உள்ளது என்றும் வெளிப்படுத்தும். என்ன புரியவில்லையா? பொதுவாக குழந்தை வளர வளர, அவர்களின் குடலியக்கமும் மாறுபடும். அப்போது குடலியக்கத்தின் மாறுபாட்டினால் ஒருசில வித்தியாசமான சில மாற்றங்களும் ஏற்படும்.

அப்படி ஏற்படும் மாற்றத்தில் ஒன்று தான் மலத்தின் நிறம் மற்றும் அமைப்பு. இங்கு குழந்தை மலம் கழிப்பது பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை புதிதாக பெற்றோர் ஆனவர்கள் படித்தால், அவர்களின் மனதில் உள்ள கேள்விக்கான விடை கிடைக்கும். சரி, இப்போது அவற்றைப் பார்ப்போமா!!!

குழந்தை பிறந்தது முதல் 2 வாரத்திற்கு எந்த மாதிரி மலம் வெளியேறினாலும், அது குழந்தையின் ஆரோக்கியத்தை தான் குறிக்கும். ஒருவேளை குழந்தை மலம் வராமல் இருந்தாலோ அல்லது அவர்களது டயபரில் இரத்தம் இருந்தாலோ, பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம்.

குழந்தைக்கு முதலில் வெளிவரும் மலமானது பச்சை நிறத்தில் தான் வெளிவரும். மேலும் அந்த மலமானது ஓரளவு நீர்மத்துடன் அடர் பச்சை நிறத்தில் இருக்கும். அதுவும் இரண்டு வாரத்திற்கு இருக்கும்.

குழந்தை பிறந்து 2-3 வராத்திற்கு, பச்சை நிற மலமானது மஞ்சள் நிறத்தில் மாறும். இந்த மஞ்சள் நிற மலமானது குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்கும் வரையில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல், சாதாரணமாகத் தான் இருக்கும்.

குழந்தை பிறந்த பின்னர், குழந்தையின் பெருங்குடலானது உருவாகும் வரையில், குழந்தைகளுக்கு இடைக்கால வயிற்றுப்போக்கு ஏற்படும். அதிலும் ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுத்தப் பின்னரும், கொடுக்கும் போதும் மலம் கழிப்பார்கள்.

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை, அவர்களின் மலமானது மென்மையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது சற்று கடினமாக இருக்கும்.

பொதுவாக சில குழந்தைகள் பிறந்து சில நாட்களுக்கு மலம் கழிக்காமல் இருப்பார்கள். அதிலும் இந்த நிலையானது தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தான். ஒருவேளை குழந்தையின் உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிட்டால், பின் குழந்தைகள் லேசாக மலம் கழிக்க ஆரம்பிப்பார்கள்.

ஒருவேளை குழந்தை நீர்ம நிலையிலோ, பிசுபிசுப்பாகவோ மலத்தை கழித்தால், குழந்தைக்கு வயிற்றில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். அப்போது மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தை 2 நாட்களுக்கு தொடர்ந்து, அதிலும் பிறந்து 4 மாதம் ஆனப் பின்னர் மலம் கழிக்காமல் இருந்தால், குழந்தைக்கு மலச்சிக்கல் என்று அர்த்தம்.

குழந்தைக்கு பச்சை நிறத்தில் மலம் வெளிவந்தால், குழந்தைக்கு கபம் உள்ளது என்று அர்த்தம். மேலும் குழந்தைகளால் அதனை தும்மி வெளியேற்ற முடியாது, மாறாக மலத்தின் மூலம் வெளியேற்றுவார்கள்.

உங்கள் குழந்தை மலம் கழிக்கும் போது, அதிகம் வாயுவை வெளியேற்றினால், தாய்ப்பால் கொடுக்கும் நிலை சரியில்லை என்று அர்த்தம். ஏனெனில் தவறான நிலையில் தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைகள் பால் குடிக்கும் போது காற்றினை அதிகம் விழுங்கிவிடுகின்றனர். எனவே அப்போது தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தாய்மார்கள் மாற்ற வேண்டும்.

குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கும் போது, குழந்தையின் மலமானது கருப்பு நிறத்தில் வெளிவரும். மேலும் இந்த கருப்பு நிற மலமானது ஒன்று உணவின் காரணமாகவும் வெளிவரலாம் அல்லது மலச்சிக்கல் என்றாலும் வெளிவரும். எனவே அப்படி குழந்தைகளுக்கு அதிகமாக கருப்பு நிறத்தில் மலம் வெளிவந்தால், உடனே பரிசோனை செய்வது நல்லது.

பொதுவாக குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது, அவர்களது மலத்தின் வாசனையானது சற்று இனிமையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது துர்நாற்றம் வீசும்.


Tuesday, 18 February 2014

'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!



பிறந்த குழந்தையால் தனக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் பற்றி சொல்ல முடியாது.

அதனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை பெற்றோர்களால் எளிதில் கண்டு பிடிக்கவே முடியாது. ஆனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை குழந்தை மலம் கழிப்பது வைத்து கண்டறியலாம்.

 இது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், இது தான் உண்மை.

 ஏனெனில் குழந்தைக்கு உள்ள பிரச்சனையை குழந்தையின் மலத்தைக் கொண்டு கண்டறியலாம்.

அதே சமயம், மலத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் குழந்தை சாதாரணமாகத் தான் உள்ளது என்றும் வெளிப்படுத்தும்.

 என்ன புரியவில்லையா?

பொதுவாக குழந்தை வளர வளர, அவர்களின் குடலியக்கமும் மாறுபடும். அப்போது குடலியக்கத்தின் மாறுபாட்டினால் ஒருசில வித்தியாசமான சில மாற்றங்களும் ஏற்படும்.

அப்படி ஏற்படும் மாற்றத்தில் ஒன்று தான் மலத்தின் நிறம் மற்றும் அமைப்பு.

இங்கு குழந்தை மலம் கழிப்பது பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை புதிதாக பெற்றோர் ஆனவர்கள் படித்தால், அவர்களின் மனதில் உள்ள கேள்விக்கான விடை கிடைக்கும். சரி, இப்போது

 அவற்றைப் பார்ப்போமா!!!

குழந்தை பிறந்தது முதல் 2 வாரத்திற்கு எந்த மாதிரி மலம் வெளியேறினாலும், அது குழந்தையின் ஆரோக்கியத்தை தான் குறிக்கும். ஒருவேளை குழந்தை மலம் வராமல் இருந்தாலோ அல்லது அவர்களது டயபரில் இரத்தம் இருந்தாலோ, பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம்.

குழந்தைக்கு முதலில் வெளிவரும் மலமானது பச்சை நிறத்தில் தான் வெளிவரும். மேலும் அந்த மலமானது ஓரளவு நீர்மத்துடன் அடர் பச்சை நிறத்தில் இருக்கும். அதுவும் இரண்டு வாரத்திற்கு இருக்கும்.

குழந்தை பிறந்து 2-3 வராத்திற்கு, பச்சை நிற மலமானது மஞ்சள் நிறத்தில் மாறும். இந்த மஞ்சள் நிற மலமானது குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்கும் வரையில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல், சாதாரணமாகத் தான் இருக்கும்.

குழந்தை பிறந்த பின்னர், குழந்தையின் பெருங்குடலானது உருவாகும் வரையில், குழந்தைகளுக்கு இடைக்கால வயிற்றுப்போக்கு ஏற்படும். அதிலும் ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுத்தப் பின்னரும், கொடுக்கும் போதும் மலம் கழிப்பார்கள்.

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை, அவர்களின் மலமானது மென்மையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது சற்று கடினமாக இருக்கும்.

பொதுவாக சில குழந்தைகள் பிறந்து சில நாட்களுக்கு மலம் கழிக்காமல் இருப்பார்கள். அதிலும் இந்த நிலையானது தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தான். ஒருவேளை குழந்தையின் உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிட்டால், பின் குழந்தைகள் லேசாக மலம் கழிக்க ஆரம்பிப்பார்கள்.

ஒருவேளை குழந்தை நீர்ம நிலையிலோ, பிசுபிசுப்பாகவோ மலத்தை கழித்தால், குழந்தைக்கு வயிற்றில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். அப்போது மருத்துவரை அணுக வேண்டும்

குழந்தை 2 நாட்களுக்கு தொடர்ந்து, அதிலும் பிறந்து 4 மாதம் ஆனப் பின்னர் மலம் கழிக்காமல் இருந்தால், குழந்தைக்கு மலச்சிக்கல் என்று அர்த்தம்.

குழந்தைக்கு பச்சை நிறத்தில் மலம் வெளிவந்தால், குழந்தைக்கு கபம் உள்ளது என்று அர்த்தம். மேலும் குழந்தைகளால் அதனை தும்மி வெளியேற்ற முடியாது, மாறாக மலத்தின் மூலம் வெளியேற்றுவார்கள்.

உங்கள் குழந்தை மலம் கழிக்கும் போது, அதிகம் வாயுவை வெளியேற்றினால், தாய்ப்பால் கொடுக்கும் நிலை சரியில்லை என்று அர்த்தம். ஏனெனில் தவறான நிலையில் தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைகள் பால் குடிக்கும் போது காற்றினை அதிகம் விழுங்கிவிடுகின்றனர். எனவே அப்போது தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தாய்மார்கள் மாற்ற வேண்டும்.

குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கும் போது, குழந்தையின் மலமானது கருப்பு நிறத்தில் வெளிவரும். மேலும் இந்த கருப்பு நிற மலமானது ஒன்று உணவின் காரணமாகவும் வெளிவரலாம் அல்லது மலச்சிக்கல் என்றாலும் வெளிவரும். எனவே அப்படி குழந்தைகளுக்கு அதிகமாக கருப்பு நிறத்தில் மலம் வெளிவந்தால், உடனே பரிசோனை செய்வது நல்லது.

பொதுவாக குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது, அவர்களது மலத்தின் வாசனையானது சற்று இனிமையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது துர்நாற்றம் வீசும்.
 
நண்பேன்டா