Monday 10 March 2014

ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் அசத்தும் இந்திய வம்சாவளி மாணவன்..!



அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் நடந்த, ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரிக்கும் (ஸ்பெல்லிங்) போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் குஷ் ஷர்மா (13) வெற்றி பெற்றான்.

 நடந்த அனைத்து சுற்றிலும் குஷ் சர்மா தடுமாற்றம் அடையாமல் கடுமையான வார்த்தைகளுக்கான ஸ்பெல்லிங்கை சொல்லி சாதனை படைத்துள்ளான்.ஸ்பெல்லிங் மட்டுமல்லாது அந்த வார்த்தை தோன்றிய விதம் வார்த்தைக்கான பொருள் என அனைத்தையும் கூறி நடுவர்களை ஆச்சரியப்படுத்தினான்

மிசௌரி மாநிலத்தின் ஜாக்ஸன் கவுன்டி ஸ்பெல்லிங் போட்டி கான்சாஸ் நகர மத்திய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இறுதியாக குஷ் ஷர்மாவும் ஷோபியா ஹாப்மேன் (11) என்ற மாணவியும் மோதினர்.

இருவரும் சளைக்காமல் பதில் அளித்து வந்ததால் இப்போட்டி இதுவரை இல்லாத அளவு 29 சுற்றுகள் வரை நடந்தது. இறுதியில் definition என்ற வார்த்தையை சரியாக எழுத்துக்கூட்டி உச்சரித்து குஷ் ஷர்மா வெற்றி வெற்றார்.

இதன் மூலம் வாஷிங்டனில் மே மாதம் நடைபெறும் ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளான்.

இதற்கு முந்தைய சுற்று கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடந்தபோது, குஷ் ஷர்மாவும் ஷோபியாவும் 66 சுற்றுகள் வரை மோதினர். ஒருகட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தைகள் கிடைக்காமல் நடுவர்களே திணறினர்.

பிறகு அகராதி மூலம் நிலைமையை சமாளித்தனர். எனினும் போட்டி முடிவுக்கு வராததால் மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.இப்படி தன்ரடித்த குஷ் ஷர்மா 7-ம் வகுப்பும், ஷோபியா 5-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

அவர்கள் இப்போட்டியில் 260க்கும் மேற்பட்ட வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரித்துள்ளனர். இதற்கு முன் நடைபெற்ற சுற்றுகளில் 23 மாணவர்களை இவர்கள் போட்டியில் இருந்து விலகச் செய்துள்ளனர்.

பறக்கும் படை அதிரடி தொடர்கிறது தேர்தல் ‘வேட்டை’யில் 30 லட்சம் சிக்கியது...!



தர்மபுரி:தர்மபுரி, நாமக்கல், கோவையில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.30 லட்சம் சிக்கியது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 5ம் தேதி முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

நடத்தை விதிகளின் ஒருபகுதியாக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் மற்றும் பொருட்களை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இன்று காலை தொப்பூர் டோல்கேட் பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது, உரிய ஆவணம் இன்றி ரூ.2 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. காரில் வந்த பெங்களூரைச் சேர்ந்த ராம்குமார் (39) என்பவரிடம் விசாரித்த போது, பெங்களூரில் ஜவுளி கடை வைத்துள்ளதாகவும், பனியன் வாங்குவதற்காக திருப்பூருக்கு பணம் கொண்டு சென்றதாகவும் கூறினார். உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 இதேபோல் மற்றொரு காரில் ரூ.3.5 லட்சத்துடன் வந்த பெங்களூர் ஜவுளிக்கடை அதிபர் உதயகுமாரை நிறுத்தி சோதனை நடத்தினர். உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்கோடு பைபாஸ் ரோட்டில் வேனில் சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.96 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி ஏரிகரையில் இன்று அதிகாலை பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து நாமக்கல் செல்வதற்காக சொகுசு ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அதிகாரிகள் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

பஸ்சில் வந்த சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த பயணி நெல்சன் (22) பையை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 800 இருப்பதை கண்டுபிடித்தனர். முறையான ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் இன்று காலை காந்திபுரம் பஸ் நிலையம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். பஸ் நிலையம் அருகே கையில் டிராவல்ஸ் பேக்குடன் நடந்து வந்த ஒருவரிடம் சோதனை மேற்கொண்டனர். அவரிடம் இருந்த டிராவல்ஸ் பேக்கில் 1000 ரூபாய் கட்டுகளாக ரூ.15 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளாடையில் 500 ரூபாய் கட்டுகளாக ரூ.5 லட்சத்தை மறைத்து வைத்திருந்தார். இவற்றை கைப்பற்றி நடத்திய விசாரணையில், அவர் ராஜஸ்தானை சேர்ந்த விகாஷ் (32) என்பது தெரியவந்தது. துணி வியாபாரத்துக்காக பெங்களூரில் இருந்து பணத்தை கொண்டு வந்ததாக போலீசாரிடம் கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரஜினியின் அட்வைஸால் ஷாக்கான சௌந்தர்யா...!



மகளுக்கு ரஜினியின் அறிவுரை! சௌந்தர்யா ரியாக்‌ஷன்?

கோச்சடையான் திரைப்படத்தின் இசைவெளியீடு ரஜினிகாந்த், ஷாருக்கான், ஷங்கர், மணிரத்னம், கே.எஸ்.ரவிகுமார், தீபிகா படுகோனே, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரம்மாண்டங்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.


கோச்சடையான் திரைப்படத்தின் இசைவெளியீடு பலருக்கும் இனிமையாய் அமைந்தாலும், கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வினுக்கு அவ்வளவாய் இனிக்கவில்லை.


இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி “என் மகள்கள் சிறந்த இயக்குனர்கள் என்று பேர் வாங்குவதைவிட சிறந்த குடும்பத் தலைவிகளாக இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. குழந்தைகளை  பெற்று வளர்த்து அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க பெண்களால் மட்டுமே முடியும்.


அதனால் குழந்தைகள் ஆளான பிறகு சினிமாவுக்கு வரலாம். இன்று  சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது என்று நினைத்தால், குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாமல் போய்விடும்" என்று கூறினார்.

இசைவெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய சௌந்தர்யா அஷ்வின் “இந்த மாதிரி ஒரு மேடையில் அப்பா இந்த அறிவுரையை சொல்லிவிட்டார்.


கோச்சடையான் எனது நீண்டகால விருப்பம். எனது முதல் காதல் அனிமேஷனின் மீது தான். திருமணமானதற்கு பிறகு என் கணவர் என் விருப்பத்தை நிறவேற்றுவதற்கான ஆதரவைக் கொடுத்தார். எனது முதல் குழந்தை கோச்சடையான் தான். எனவே இனி அப்பா கூறிய அறிவுரையின்படி குடும்பத்தை கவனிக்க வேண்டும்” என்று கூறினார்.
 
நண்பேன்டா