Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Tuesday, 18 March 2014

உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா...? கவலையை விடுங்க...!

indian foods aid weight loss இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது. 
ஆகவே இதற்காக அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு, ஜிம் சென்று உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும். இப்போது அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று பாருங்களேன்... 


பச்சை மிளகாய் சாப்பிடுங்க!!! உடல் எடை குறையும்!!!

green chillies burn body fat உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.
மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.

எடை குறைய பூண்டை சாப்பிடுங்க!!!

garlic weight loss இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.
ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும். ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுகு எண்ணெயும் உடல் எடையை குறைக்குமாம்!!!


mustard oil lose weight சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்.
அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.

மோர் அதிகம் சாப்பிட பிடிக்குமா? ஈஸியா எடை குறைக்கலாம்...

buttermilk indian drink lose weigh பொதுவாக பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.
மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்.

உடல் பருமன் குறைய கறிவேப்பிலை சிறந்ததாம்!!!

lose weight with curry leaves அனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால் இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.
வேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.

பெண்களே சமையலுக்கு எந்த பொடி எப்படி செய்யலாம்..? - இதைப்படிங்க..!

கூட்டுப் பொடி
இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 100கிராம்(1/2 டம்ளர்), மிளகு - 3 மேசைக்கரண்டி, சீரகம் - 3 மேசைக்கரண்டி, தனியா - 1கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 15. செய்முறை எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். வறுத்த பருப்பு, சீரகம், மிளகாய், மிளகு, தனியா எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும். கூட்டு கொதித்தபின் இறக்குமுன் 1 மேசைக்கரண்டி தூவி கலந்து இறக்கவும். ரசத்திற்கும் இறக்குமுன் 1 தேக்கரண்டி போட்டு இறக்கினால் ரசம் வாசனையாக இருக்கும். ------------------------------------------------------------------------------------------------- ரச பொடி 
தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் - -----------ஒரு கப் தனியா - ----------- 3 கப் துவரம் பருப்பு - --------- 1/2கப் மிளகு --------- அரை கப் சீரகம் - ------------ஒன்றறை கப் கட்டிவிரளி மஞ்சள் - 4 செய்முறை விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். தனியா, துவரம் பருப்பு,மிளகு, சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வறுக்க வேண்டாம் வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும். எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும். ----------------------------------------------------------------------------
வேர்க்கடலை பொடி
தேவையான பொருட்கள் வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப் பொட்டுக்கடலை - 1 கப் வறுத்த எள் (வெள்ளை அல்லது கறுப்பு) - 1/2 கப் பெருங்காயம் - 1 துண்டு வறுத்த கசகசா - 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் வற்றல் - 6 அல்லது 8 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/2 டீஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். மிளகாய் வற்றலை வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை, எள், கசகசா, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், பொட்டுக்கடலை எல்லாவற்றையும் பொடிக்கவும். சூடான சாதத்தில் இந்தப்பொடியைப்போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். ----------------------------------------------------------------------------
சீரகப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் -- 100 கிராம் இஞ்சி -- 50 கிராம் எலுமிச்சம் பழம் -- 15 (அ) 20 ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது) சீனா கல்கண்டு -- 100 கிராம் செய்முறை இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்கவேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும். சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும். இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும். உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். குறிப்பு: வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும். --------------------------------------------------------------------------
சாம்பார் பொடி -- ( 10 பேருக்கு )
தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் -- 10 கிராம் கொத்தமல்லி -- 20 கிராம் வெந்தயம் -- 1 டீஸ்பூன் கடலை பருப்பு -- 1 டீஸ்பூன் பெருங்காயம் -- 1 துண்டு கறிவேப்பிலை -- 2 இனுக்கு தேங்காய் எண்ணைய் -- தே.அ செய்முறை எண்ணையை சூடாக்கி கடலைபருப்பு மற்றும் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறவும். கடலை பருப்பு சிவப்பு நிறமானதும் கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெந்தயம் பொரியும் போது கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கிய பின் தூளாக்கவும். இது உடனடியாக செய்யக்கூடிய சாம்பார் பொடி. நல்ல ருசியான காரமான சாம்பார் பொடி. -----------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள் இளசான கறிவேப்பிலை - 2 கப் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் புளி - சுண்டைக்காய் அளவு. உப்பு - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும் ------------------------------------------------------------------
எள்ளு பொடி - 2
தேவையான பொருட்கள் கருப்பு எள்ளு - 100g காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) - 15 பூண்டு - 10 புளி - நெல்லிக்காய் அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். எள்ளு நன்கு பொரிய வேண்டும். மிளகாயை நன்கு வறுக்க வேண்டும். ஆரியபின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். குறிப்பு: இந்த பொடியை எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம். --------------------------------------------------------------------------
இட்லி / தோசை பொடி --முறை - 2
தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு -- 1 கப் வத்தல் -- 1 கப் பெருங்காயத்தூள் -- 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை -- 2 இனுக்கு உப்பு -- தே.அ வெள்ளை எள் -- 2 ஸ்பூன் (வறுத்தது) செய்முறை வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு போட்டு 1 நிமிடம் வறுக்கவும். பின் வத்தல் , பெருங்காயம் , கறிவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் உப்பு, எள் சேர்த்து அரைக்கவும். காரமான ருசியான இட்லி பொடி ரெடி. ------------------------------------------------------------------
இட்லி பொடி( குழந்தை களுக்கு)
தேவையான பொருட்கள் உளுந்து பருப்பு - அரை கப் கடலை பருப்பு - அரை கப் மிளகு - ஒரு தேக்கரண்டி வேர்கடலை - ஒரு மேசை கரண்டி (வருத்தது) வெள்ளை எள் - ஒரு தேக்கரன்டி (வறுத்தது) கருவேப்பிளை - கால் கப் உப்பு - அரை தேக்காரண்டி (அ) தேவையான அளவு பூண்டு - ஒன்று செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொடுட்களியும் தனித்தனியாக வறுக்கவும். வறுத்து ஆறவைக்கவும். ஆறியது மிக்ஸியில் திரித்து ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்கவும். இட்லிஅயி பொடியாக நருக்கி இந்த பொடியை தூவி நெயை சூடு பண்ணி ஊற்றி கிளறி கொடுக்கவும். உப்புயும் வருக்கனும்.இல்லை எலா பொருளையும் வருத்து விட்டு அந்த சூடு வானலியில் கடைசீயாக போட்டாலும் சரி. குறிப்பு: ஒரே ஒரு இட்லி சாப்பிட்டாலும் இதில் எல்லா சத்தும் அடங்கியுள்ளது. பருப்பு வகைகள், பூண்டு கேஸுக்கு, நெய் ஆகா கம கமக்கும், கருவேப்பிலை தலை முடி சொட்டையாகமல் இருக்கும் சிறுவயதிலிருந்தே சேர்த்து விடுங்கள்.கர கரப்பாக திரியுங்கள் அப்ப தான் சாப்பிடும் போது கடுக்கு மொடுக்கு என்று இருக்கும் ---------------------------------------------------------------------
கறிப் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் ------------------------------------------------------------------
வேர்க்கடலைப் பொடி
தேவையான பொருட்கள் வறுத்த வேர்க்கடலை-நூறு கிராம் கடலைப்பருப்பு-அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு-அரை ஆழாக்கு சிவப்பு மிளகாய்-எட்டு (அவரவர் காரத்தைப் பொறுத்து கூட/குறைய) பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு உப்பு, வறுக்க எண்ணெய் செய்முறை வேர்க்ககடலையை தோல் நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தைப் பொரிக்கவும். அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவறைப் போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும். பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியில் வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை பிசைந்து சாப்பிடலாம். குறிப்பு: வேர்க்கடலை சேர்த்து அதிகமாக அரைக்கக்கூடாது. கரகரப்பாக இருக்க வேண்டும். --------------------------------------------------------------------------
கொள்ளு பொடி -1
இந்த பொடியினை சாப்பிட உடல் எடை குறையும். தேவையான பொருட்கள் கொள்ளு - 1 கப் காய்ந்த மிளகாய் - 6 பூண்டு - 2 பல் தோலுடன்(விரும்பினால்) பெருங்காயம் தூள் - 1/4 தே.கரண்டி உப்பு - 1 தே.கரண்டி செய்முறை ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். பின் கொள்ளினை போட்டு நன்றாக வறுக்கவும். சிறிது நேரம் ஆறவைத்த பிறகு கொள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும். கடைசியில் பூண்டு , பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான கொள்ளு பொடி ரெடி. இதனை இட்லி, தோசை, சாத்த்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் ----------------------------------------------------------------
கொள்ளு பொடி -2
தேவையான பொருட்கள் கொள்ளு - கால் கப் காஞ்ச மிளகாய் - நன்கு பெருங்கய்ம் - ஒரு பின்ச் உப்பு - ஒரு பின்ச். செய்முறை எல்லா பொருட்களையும் எண்ணையில்லாமல் வெரும் வானலியில் வருத்து ஆறவைத்து கரகரப்பாக திரிக்கவும் குறிப்பு: உடல் மெலிய விருப்புவர்கள் இநத கொள்ளை வாங்கி வேகவைத்து அதேல்லாம் பெரிய வேலை, அதற்கு பதில் இந்தமாதிரி திரித்து வைத்து கொன்டால் சாத்தைல் போட்டு பிசைந்து கொண்டு மேலே என்ன குழம்போ அதுவும் சேர்த்து சாப்பிடுங்கள்.கொள்ளு ரொம்ப சூடு பார்த்து சாபிடுங்கள் -------------------------------------------------------------------
பிஸி பேளா பாத் பொடி
தேவையான பொருட்கள் பொடி தயாரிக்க கொப்பரை தேஙகாய் துருவல் - இரண்டு கப் பொட்டு கடலை - முக்கால் கப் கடலை பருப்பு - முக்கால் கப் தனியா - முக்கால் கப் பெருங்காயம் - இரண்டு துண்டு காஞ்ச மிளகாய் - இருபது கிராம்பு - பத்து பட்டை - நான்கு இரன்டு அங்குல துண்டு வெந்தயம் - ஒரு தேக்கரண்டி கசகசா - ஒரு தேக்கரண்டி ஏலகாய் - பத்து செய்முறை அனைத்தையும் வருத்து பொடித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மாதத்திற்கு கெடாது. குறிப்பு: இதில் கச கசா, ஏலம் சில பேர் சேர்க்கமாட்டார்கள் தேவையில்லை என்றால் சேர்க்கவேண்டாம் ---------------------------------------------------------------
ஜலீலா'ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் கடலை பருப்பு - ஒரு டம்ளர் உளுத்தம் பருப்பு - ஒரு டம்ளர் காஞ்ச மிளகாய் - கால் கப் எள் - இரண்டு மேசை கரண்டி வருத்த வேர்கடலை - கால் கப் கருவேப்பிலை - கைக்கு ஒரு பிடி உப்பு - ஒரு தேக்கரண்டி பெருங்காய பொடி - கால் தேக்கரண்டி (அ) ஒரு சிறிய துண்டு செய்முறை முதலில் கடலை பருப்பு ,உலுத்தம் பருப்பு சிவற வருக்கனும். பிரகு காஞ்சமிளகாயை போட்டு வருக்கனும் இரு நிமிடம் வருத்தால் போதும். (இப்போது ஹச் ஹச் தும்மல வரும் தளிக்கா) பிறகு வேர்கடலை,எள் உப்பு, கருவேப்பிலை ஆய்ந்து கழிவு தண்ணீர்வடித்து தனியாக வானலியில் வதக்கி தண்ணிர் முழுவதும் வற்றியதும் கடலை பருப்பு கலவையுடன் சேர்த்து ஒரு முறை வருக்கனும். காலையில் செய்தால் அப்ப்டியே ஆறவிடனும். ஆறியதும் மிக்சியில் முதலில் மேலோடு உள்ள காஞ்ச மிளகாய் போட்டு கொஞ்ச பருப்பு போட்டு நல்ல திரிக்கனும், கொஞ்ச விட்டு விட்டு திரிக்கனும். பாதியை மையாகவும். பாதி பருப்பை கொர கொரப்பாகவும் திரித்து இரன்டையும் ஒன்றாக கலக்கனும். பிறகு சூடாக இருக்கும் நல்ல ஆறவிடனும். குறிப்பு: பிறகு நல்ல காய்ந்த டப்பாவில் போட்டு வைக்கவும். எத்தனை நாள் ஆனாலும் கொடாது எடுக்கும் போது ஈரக்கை போடக்கூடாது. --------------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி. ---------------------------------------------------------------------------
கரம் மசாலா பொடி
தேவையான பொருட்கள் பட்டை - ஐம்பது கிராம் லவங்கம் - இருபத்தைந்து கிராம் ஏலக்காய் - இருபத்தைந்து கிராமில் பாதி செய்முறை எல்லா வற்றையும் மிக்சியில் பொடித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். மட்டன் பிரை,சிக்கன் பிரை மற்றும் பல அயிட்டங்களுக்கு இதை கால் தேக்கரண்டி சேர்த்து கொண்டால் நல்ல வாசமாக இருக்கும். ----------------------------------------------------------------------
சத்துமாவு பொடி (குழந்தைகளுக்கு)
ஏர் உழும் விவசாயி வெரும் ஒரு கப் கேப்ப கஞ்சி குடித்துவிட்டு தான் நிலத்தை உழுகிறான். அவ்வளவு பெரிய நிலத்தை உழவே அது ஒரு சத்தான பாணமாக இருக்கு, ஆனால் நீங்கள் இதில் இத்தனை பொருள் சேர்ப்பதால் இன்னும் கூடுதல் தெம்பு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதை குடிக்கலாம்.வேலைக்கு போகிறவர்கள் இது நல்ல கட்டியா காய்ச்சி இரண்டு கப் குடித்து விட்டு போகலாம்.நல்ல பசி தாங்கும். தேவையான பொருட்கள் கேழ்வரகு - அரை கிலோ சம்பா கோதுமை - ஐம்பது கிராம் புழுங்கல் அரிசி - ஐம்பது கிராம் பாதம் - ஐம்பது கிராம் ஜவ்வரிசி - இருபத்தைந்து கிராம் உடைத்த கடலை - இருபத்தைந்து கிராம் செய்முறை கேழ்வரகு,கோதுமை,அரிசி,உடைத்த கடலை,ஜவ்வரிசி,எல்லாம் தனிதனியாக லேச கை பொருக்கும் அளவுக்கு வருத்து ஆறவைக்க வேண்டும். ஆறியதும் மிஷினில் கொடுத்து திரித்து மறுபடியும் ஆறவைத்து ஒரு நல்ல ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைக்கவேண்டும். குறிப்பு: டெய்லி ஒரு ஒரு மேசைகரண்டி எடுத்து ஒன்னறை கப் பால் + தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சி சக்கரை ஒரு சொட்டு நெய் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும் நல்ல சத்தான பாணம். இத்துடன் நீங்கள் வேறு ஏதும் சத்தான அயிட்டம் சேர்ப்பதாக இருந்தால் கூட சேர்க்கலாம் ---------------------------------------------------------------------- ரசப்பொடி (மிளகாய் இல்லாமல்) தேவையான பொருட்கள் 1. மிளகு - 100 கிராம் 2. சீரகம் - 100 கிராம் 3. தனியா - 6 தேக்கரண்டி 4. உளுந்து - 3 தேக்கரண்டி 5. கடலை பருப்பு - 3 தேக்கரண்டி செய்முறை அனைத்தையும் வெய்யிலில் காய வைத்து எடுக்கவும். கடாயில் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து எடுக்கவும். ஆர வைத்து ஈரம் இல்லாத மிக்ஸி ஜாடியில் போட்டு திரித்து வைக்கவும் ------------------------------------------------------------------------
புளியோதிரை கலவை
இந்த புளியோதரை கலவை ஆபிஸ் போகும் பெண்களுக்கு காலை நேர அவசரத்திற்கு மதியவேளை சாப்பாட்டுக்கு தயாரிக்க ஈஸி, வாரத்தில் ஒரு நாள் இந்த புளியோதரை ரைஸ் நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் கல் நீக்கிய எள்(கருப்பு) - 50 கிராம் உளுத்தம்பருப்பு - 50 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் வேர்கடலை - 50 கிராம் மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன் புளி - 3 எலுமிச்சைபழத்தின் அளவு[பழைய புளி உபயோகபடுத்தினால் நல்லது] கடுகு - 1டீஸ் ஸ்பூன் வெந்தயம் - 1டீஸ் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ் ஸ்பூன் நல்லமிளகு - 1 டீஸ் ஸ்பூன் (முழு மிளகு) பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் கறிவேப்பிலை - 3 கீற்று நல்லெண்ணெய் - 3/4 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எள், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து பொடிசெய்து வைக்கவும். வேர்கடலையையும் லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 கப் சுடுநீர் ஊற்றி ஊற வைக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், நல்லமிளகு, இவற்றை போட்டு தாளிக்கவும்,பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு கிண்டி, எள், உ.பருப்பு, க.பருப்பு பொடியினை போட்டு கிண்டி விடவும் அடுத்து வேர்கடலை, பெருங்காய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் தேவையான அளவு உப்பு இட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், பச்சை வாசம் போய் கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும். கலவை ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும் , தேவையான நேரம் சூடான சோற்றில் போட்டு கிளறி சாப்பிடவும். --------------------------------------------------------------------------------
இஞ்சி பூண்டு பேஸ்ட்
இது சமையல் காரர்கள் பிரியாணி மற்றும் பகாறா காணாவிற்கு மற்றும் பல இஸ்லாமிய அயிட்டங்களுக்கு செய்யும் போது அரைக்கும் இஞ்சி பூண்டின் அளவு தேவையான பொருட்கள் இஞ்சி - ஒரு கிலோ பூண்டு - அரை கிலோ எண்ணை (அ) வினிகர் (அ) உப்பு - ஒரு மேசை கரண்டி செய்முறை முதலில் பூண்டை ஒரு கவரில் போட்டு சுத்தி அல்லது சின குழவியால் இடித்து கொள்ளுங்கள்.பிறகு குப்பை கொட்டும் இடத்தில் வைத்து லேசா புடைத்தால் அவ்வளவு பூண்டு குப்பையும் அதில் போய் விடும் இல்லை என்றால் வீடு முழுவது பூண்டு குப்பைதான்.. இஞ்சி தோலை சீவி விட்டு பிறகு மண் போக கழுவி பிறகு பொடியாக வெட்டனும். பூண்டையும் அரிந்து கழுவி கொள்ளுங்கள். இப்போது இரண்டையும் கொஞ்ச கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைத்தெடுத்து அதில் உப்பு அல்லது வினிகர் அல்லது எண்ணை கலந்து (நல்ல கலக்கி)பாதியை ஒரு கண்டெயினரில் போட்டு பீரீஜரில் வைத்து விடுங்கள். பீரிஜரில் வைக்கும் போது முழுவது அடைத்து வைக்காதீர்கள்.வெடித்து வெளியே வந்துவிடும். மீதியை கிழே பிரிட்ஜில் வைத்து தினமும் தேவைக்கு பயன் படுத்தலாம். குறிப்பு: சில பேர் இஞ்சி பூண்டு உரிக்க சோம்பல் பட்டே நிறைய அயிட்டம் செய்யமட்டார்கள். இது டீவி பார்த்து கொண்டே செய்தால் சிரமம் இருக்காது உடனே கையை நல்ல சோப்பு போட்டு தேய்த்து கழுவி விடுங்கள் இல்லை என்றால் அவ்வளவு தான் ---------------------------------------------------------------
ரசப்பொடி
இது நான் திரிக்கும் ஸ்பெஷல் ரசப்பொடி. தேவையான பொருட்கள் தனியா - முன்று மேசை கரண்டி துவரம் பருப்பு - ஒரு மேசை கரண்டி மிளகு - ஒரு மேசை கரண்டி சீரகம் - இரண்டு மேசை கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி பெருக்காயம் - கால் தேகரண்டி (அ) ஒரு சிறிய துண்டு கருவேப்பிலை - கால் கைபிடி காஞ்ச மிளகாய் - நாலு செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெயிலி காய வைக்கனும் அதற்கு டைம் கிடையாது லேசா இரும்பு கிடாயில் வறத்து ஆற வைத்து விடுவேன். பிறகு காய்ந்த மிக்ஸியில் பர பரன்னு திரித்து வைத்து கொள்வேன். இது ஒரு சிறிய கண்டெய்ணரில் போட்டு வைத்தால் நாலைந்து முறை செய்ய வரும். இது கருவேப்பிலையையும் தேடி பிடிக்க தேவையில்லை. வெரும் நெய் கடுகு தாளித்து இதை போட்டு புளி தண்ணீ கரைத்து ஊற்றினால் போதுமானது. -----------------------------------------------------------------
திடீர் பூண்டு இட்லி பொடி
இட்லி பொடி இல்லாத நேரத்தில் இந்த பொடி நமக்கு கை கொடுக்கும். தேவையான பொருட்கள் பூண்டு - 10 பல் தோலுடன் காய்ந்த மிளகாய் - 5 உப்பு - 1 தே.கரண்டி செய்முறை பூண்டு , காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது பூண்டு பொடி ரெடி .இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ------------------------------------------------------------
கிட்ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் பொட்டு கடலை ( ஓடைத்த் கடலை) - 1 கப் பூண்டு -3 பல் தோலுடன் உப்பு - 1/2 தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயம் தூள் - ¼ தே.கரண்டி செய்முறை தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் பொட்டு கடலை,பூண்டு,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் தூள் , உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான ,எளிதில் தயாரிக்க கூடிய கிட்ஸ் இட்லி பொடி ரெடி. இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். -------------------------------------------------------------
சாட் மாசாலா மிக்ஸ்
தேவையான பொருட்கள் கொத்தமல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன் சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் ஓமம் - 1 டீஸ் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 கரம் மசாலா - 2 டீஸ் ஸ்பூன் நல்லமிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன் ட்ரை மாங்காய் பவுடர் (ஆம்சூர்) - 1 டேபிள் ஸ்பூன் கல்உப்பு - 1 - 2 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1/2 டீஸ் ஸ்பூன் செய்முறை கொத்தமல்லி விதை, சோம்பு, ஓமம், காய்ந்தமிளகாய் இவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும் அதில் கல் உப்பையும் சேர்த்து பொடிக்கவும் கரம்மசாலாத்தூள், நல்லமிளகாய்த்தூள், ஆம்சூர் பொடி இவற்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து வினிகரையும் சேர்த்து அரைத்த பொடியுடன் சேர்க்கவும்.எல்லா பொடியினையும் கலந்து உப்புச் சரிப்பார்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும் ---------------------------------------------------------------------
மசாலா டீ பொடி
குளிர் காலத்துக்கு ஏற்ற டீ. தேவையான பொருட்கள் 1. மிளகு - 16 2. பட்டை - 1 இன்ச் 3. லவங்கம் - 4 4. ஏலக்காய் - 4 5. சுக்கு பொடி - 1 தேக்கரண்டி செய்முறை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைக்கவும். இதை காய்ந்த பாட்டில் ஒன்றில் போட்டு வைத்து கொண்டு, தேவையான போது வழக்கமாக டீ போடும்போது, டீ தூளோடு சேர்த்து இந்த தூள் 1/2 தேக்கரண்டி (அல்லது உங்கள் ருசிக்கு) சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். ------------------------------------------------------------
திடீர் இட்லி மிளகாய் பொடி
இது அவசரத்துக்கு கை குடுக்கும், மிகவும் வாசமாக, சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் 1. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 2. மல்லி தூள் - 1 தேக்கரண்டி 3. பூண்டு - 3 பல் 4. உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி 5. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 6. கறிவேப்பிலை - கொஞ்சம் 7. நல்லெண்ணெய் - 7 தேக்கரண்டி 8. உப்பு செய்முறை எண்ணெய் சிறிது விட்டு அதில் கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவக்க வறுத்து வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும். பின் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு கலந்து வைக்கவும். இதில் வறுத்த பருப்பு, பூண்டு, எண்ணெய் எல்லாம் கலந்தால் பொடி தயார். குறிப்பு: இது இட்லி, தோசை'கு பொருத்தமாக இருக்கும். ---------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கும் கண்ணிற்கும் மிகவும் நல்லது. இந்த அளவில் பொடித்தால் ஒருவாரம் வரை வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது புதிதாக பொடித்துக் கொண்டால் தான் வாசனையாக இருக்கும். தேவையான பொருட்கள் இளம் கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிது, எண்ணெய் - 1 தேக்கரண்டி, உப்பு - அரை தேக்கரண்டி. செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுத்து கொள்ளவும். அதே வாணலியில் மற்ற பொருட்களையும் வறுத்தெடுக்கவும். ஆறியதும், எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். குறிப்பு: இந்த பொடியை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும். --------------------------------------------------------------
குழம்புப் பொடி
மயிலாடுதுறை சிதம்பரம், கடலூர் பக்கங்களில் பொதுவாக இந்தப் பொடியை குழம்பில் உபயோகப்படுத்துவார்கள். சாம்பார், புளிக்குழம்பு என்று எல்லாவற்றுக்கும் இந்தப் பொடி தான். ஊருக்கு ஊர் பொருள்களின் விகிதங்கள் மாறுபட்டிருக்கும். தேவையான பொருட்கள் தனியா- ஒன்றரை கிலோ வற்றல் மிளகாய்- அரை கிலோ துவரம்பருப்பு- கால் கிலோ கடலைப் பருப்பு- 100 கிராம் மிளகு-50 கிராம் சீரகம்- 50 கிராம் வெந்தயம்- 1 மேசைக்கரண்டி அரிசி- 1 மேசைக்கரண்டி சோம்பு- 1 மேசைக்கரண்டி செய்முறை அனைத்துப்பொருள்களையும் தனித்தனியே பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும் -------------------------------------------------------------------------
ரசம் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் துவரம் பருப்பு - ½ கப் காய்ந்த மிளகாய் - 10 மிளகு - 15 சீரகம் - 1/4 கப் கருவேப்பில்லை - 10 இலை பெருங்காயம் தூள் - 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி வெந்தயம் - ½ தே.கரண்டி செய்முறை முதலில் தனியாவை கடாயில் போட்டு வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம் போட்டு தனி தனியாக வறுத்து எடுக்கவும். கருவேப்பில்லையை கழுவி பேப்பர் டவலில் காயவைத்து சுடாக உள்ள வறுத்து வைத்துள்ள பொருட்கள் மீது போடவும். இப்பொழுது மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சீரகம், வெருங்காயம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது ரசப்பொடி ரெடி. ரசம் வைக்கும் பொழுது இந்த பொடியினை கடைசியில் தூவி தட்டு போட்டு முடி அடுப்பினை நிறுத்தி விடவும். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். -------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி. ------------------------------------------------------------------------
கறிப் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் -------------------------------------------------------------------------------------
திடீர் சம்பார் பொடி
தேவையான பொருட்கள் தேவையானப் பொருட்கள் 1) காய்ந்த மிளகாய் - 25 2) தனியா - 1 கப் 3) வெந்தயம் - ஒரு மேசைகரண்டி 4) பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு செய்முறை ஒரு வெறும் வானலியில் காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், பெருங்காயம் வறுக்கவும். சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அறைக்கவும். இதை போட்டு சாம்பார் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். -------------------------------------------------------------------------
இன்ஸ்டன்ட் மசாலா டீ
வடிகட்டும் வேலை இல்லாமல், காபி போல் மசாலா டீ இன்ஸ்டன்ட் 'ஆ தயாரிக்க இது உதவும். தேவையான பொருட்கள் 1. பால் பவுடர் - 2 கப் 2. சர்க்கரை - 2 1/2 கப் 3. இன்ஸ்டன்ட் டீ தூள் - 1 1/2 கப் [Tetley or any other brand - Instant Tea Granules] 4. சுக்கு தூள் - 2 தேக்கரண்டி 5. பட்டை பொடி - 2 தேக்கரண்டி 6. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 7. ஜாதிக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி செய்முறை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது 1 மேஜைக்கரண்டி தூள், 100 (அ) 150 மில்லி கொதிக்கும் நீர் சேர்த்தால் டீ தயார். ஒரு கப் செய்து பார்த்து ருசிக்கு தகுந்த மாதிரி பால் பவுடர், சர்க்கரை அளவுகள் மாற்றவும். ---------------------------------------------------------
இட்லி பொடி (கருப்பு உளுத்தம் பருப்பு)
இந்த பொடி மிகவும் சுவையாக இருக்கும். தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பில் செய்வதால் சுவை அதிகம். தேவையான பொருட்கள் கருப்பு உளுத்தம் பருப்பு (தோலுடன்) - 1 கப் பெருங்காயம் - ½ தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 2 பல்( தோலுடன்) உப்பு - 1 தே.கரண்டி நல்லெண்ணெய் - 1/2 தே.கரண்டி செய்முறை முதலில் கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து தனியே வைக்கவும். அதன் பின் கொடுத்துள்ள 1/2 தே.கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். அனைத்து பொருட்களையும் ஆறவிடவும். பின்னர் மிக்ஸியிம் வறுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு அத்துடன் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து 30 விநாடி (Seconds) திரும்பவும் சேர்த்து அரைக்கவும். இப்பொழுது இட்லி பொடி ரெடி. இதனை நல்லெண்ணெய் உடன் கலந்து இட்லி , தோசையிற்கு கூட சாப்பிட சுவையாக இருக்கும். குறிப்பு: கடைசியில் பூண்டினை சேர்ப்பதால் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த பொடி 2 / 3 மாதங்கள் வரை கொடமால் இருக்கும். ------------------------------------------------------------
நோன்பு கஞ்சி பொடி
தேவையான பொருட்கள் சீரகம் - 50 கிராம் வெந்தயம் - 25 கிராம் சோம்பு - 25 கிராம் பட்டை -10 கிராம் கிராம்பு - 10 கிராம் ஏலக்காய் - 10 கிராம் செய்முறை மேற்கூறிய எல்லாப்பொருட்களையும் சுத்தம் செய்து காய வைத்து மிக்ஸியில் தூள் செய்து எடுக்கவும். ருசியையும் மணத்தையும் தரக்கூடிய நோன்பு கஞ்சிப்பொடி ரெடி.இப்படி திரித்து வைத்துக்கொண்டால் மாதம் முழுவதும் உபயோகிக்கலாம்.சீரகம் மற்றும் அனைத்து பொருட்களும் அரைப்பட்டு விடுவதால் கஞ்சி அருமையாக இருக்கும். குறிப்பு: கஞ்சி போடும் போது இந்த பொடியை நூறு கிராம் அரிசிக்கு 1 டீஸ்பூன் குவியலாக போடவும்.ஊறவைத்த பச்சரிசியுடன்,நான்கு அல்லது ஐந்து மடங்கு தண்ணீர் வைத்து கஞ்சிப்பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது பூண்டு,வெங்காயம்,தக்காளி ,மல்லி இலை,புதினா உப்பு போட்டு வேக வைக்கவும்.வெந்தபின்பு அரை தேங்காய் பால் எடுத்து அதனை சிறிது வெங்காயம் கருவேப்பிலை தாளித்து நுரை கூடி வரவும் சேர்த்தால் சிம்பிளான சுவையான கஞ்சி ரெடி.கொஞ்சம் ஸ்பெஷலாக கஞ்சி என்றால் சிறிது பாசிப்பருப்பு,கடலைபருப்பு,கொத்துக்கறி,கேரட் ,பச்சை பட்டாணி என்று விரும்பிய பொருட்க்களை சேர்த்தும் செய்யலாம். ---------------------------------------------------------------
சத்து மாவு பொடி
தேவையான பொருட்கள் 1. கேழ்வரகு - 250 கிராம் 2. கம்பு - 250 கிராம் 3. சோளம் - 200 கிராம் 4. மக்காச்சோளம் - 200 கிராம் 5. சம்பா கோதுமை - 10 கிராம் 6. பாசி பயிறு - 10 கிராம் 7. ஜவ்வரிசி - 10 கிராம் 8. வேர்கடலை - 10 கிராம் 9. முந்திரி - 10 கிராம் 10. பாதாம் - 10 கிராம் 11. பொரிகடலை - 10 கிராம் 12. சிகப்பரிசி - 10 கிராம் 13. ஏலக்காய் - 5 செய்முறை அனைத்தையும் தனி தனியாக வறுத்து ஆறவைக்கவும். பின் மிஷினில் கொடுத்து பொடியாக்கி ஆறவைத்து கொள்ளவும். இதை 100 மில்லி பாலுக்கு 1 மேஜைக்கரண்டி வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சலாம் --------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் தனியா 3 கப் துவரம் பருப்பு ஒரு கப் சீரகம் அரை கப் மிளகு கால் கப் காய்ந்த மிளகாய் 10 செய்முறை முதலில் துவரம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மீதி உள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து போட்டு வறுத்த பிறகு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டால் கம கம ரசம் எளிதில் தயார் செய்துவிடலாம். -----------------------------------------------------------------
இட்லி பருப்புபொடி(குழந்தைக்கு)
தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு -1கப் கடலைபருப்பு -1/2கப் துவரம்பருப்பு -1/4கப் காய்ந்தமிளகாய் -3 கறிவேப்பிலை -சிறிது உப்பு -தேவையான அளவு பெருங்காயதூள் -1ஸ்பூன் எண்ணை -1ஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணை ஊற்றி மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வறுத்து அதிலேயே பருப்புகளை போட்டு பொன்னிரமாக வறுக்கவும். உப்பு,பெருங்காயதூள் சேர்த்து வறுத்து இறக்கி ஆறவிடவும். மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். தட்டில் இட்லியுடன் பொடியை வைத்து நல்லெண்ணை ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கவும். குறிப்பு: வறுக்கும்பொழுது அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும் ----------------------------------------------------------------------
ரசப்பொடி
இந்த அளவுப்படி அரைத்தால் இரண்டு பேருக்கு சுமார் இரண்டு மாதத்திற்கு வரும். தேவையான பொருட்கள் தனியா - 2 ஆழாக்கு (250 கிராம்), துவரம் பருப்பு - 1 ஆழாக்கு, கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் - 2 ஆழாக்கு, சீரகம் - கால் ஆழாக்கு, மிளகு - 1 ஆழாக்கு, காய்ந்த கறிவேப்பிலை - 1 ஆழாக்கு. செய்முறை எல்லா சாமான்களையும் வெய்யிலில் நன்கு காய வைத்து நறநறப்பாக அரைக்க வேண்டும். நைசாக அரைத்தால் ரசம் கொழகொழப்பாக போய்விடும் ----------------------------------------------------------------
எள்ளு பொடி
தேவையான பொருட்கள் எள் - 3 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிது, உப்பு - அரை தேக்கரண்டி. செய்முறை வெறும் வாணலியில் எள்ளை வறுத்தெடுத்து கொள்ளவும். சிறிது எண்ணெய் விட்டு, மற்ற பொருட்களையும் வறுத்தெடுக்கவும். ஆறியதும், எள் தவிர மற்றெல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். கடைசியாக எள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். -------------------------------------------------------------
வேர்க்கடலை பொடி
இந்த பொடியினை பொரியல் வகைகள் செய்யும் பொழுது கடைசியில் தூவி கிளற மிகவும் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் வேர்க்கடலை - 1 கப் காய்ந்த மிளகாய் - 6 உப்பு - ½ தே.கரண்டி செய்முறை வேர்க்கடலையினை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். அதன் பின் காய்ந்த மிளகாயினை போட்டு சிறிது வறுத்து வைக்கவும். வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவைக்கவும். வேர்க்கடலையின் தோலினை கையினால் தேய்த்தால் வந்துவிடும். வேர்க்கடலையின் தோலினை நீக்கிவிடவும். பின்னர் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இப்பொழுது வேர்க்கடலை பொடி ரெடி. ----------------------------------------------------
கறி மசாலா பேஸ்ட்
ரெடிமேடாக வாங்காமல் நாம் வீட்டிலேயே செய்து வைத்து உபயோகிக்கலாம்.அவசரத்திற்கு கொஞ்சம் போட்டால் நல்ல ருசியைத்தரும். தேவையான பொருட்கள் மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டேபிள்ஸ்பூன் ஒயிட் வினிகர் - 100 -150 மில்லி எண்ணெய் - 250 மில்லி (1 கப்) மல்லி விதை - 50 கிராம் சீரகம் - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன் கருவேப்பிலை - 2 இணுக்கு தண்ணீர் - 50 - 75 மில்லி செய்முறை முதலில் மல்லி,சீரகம்,சோம்பு,வெந்தயம்,கருவேப்பிலை லேசாக வெதுப்பி பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன்,மிளகாய்த்தூள்,மஞ்சல் தூல்,வினிகர்,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு பேனில் 200 மில்லி எண்ணெய் காயவைத்து தயார் செய்த கறி மசாலா பேஸ்ட்டை பொட்டு 10 நிமிடம் கிளரவும்.தண்ணீர் வற்றி எண்ணெய் தெளிந்து மேலே வரும்.இறக்கி ஆற வைக்கவும். சுத்தம் செய்த கண்ணாடி ஜாரில் காய்ந்த ஸ்பூனால் எடுத்து போட்டு வைக்கவும்.மீதி உள்ள 50 மில்லி எண்ணெயை காய வைத்து மசாலா உள்ள ஜாரில் விடவும்.இது விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க உதவும்.இப்படி செய்வதால் பூஞ்சனம் வைக்காது.ஒரு துளி கூட ஜாரில்,ஸ்பூனில் தண்ணீர் படாதவாறு உபயோகிக்க வேண்டும்.விருப்பப்பட்டால் உப்பு சேர்க்கலாம். சுலபமாக கறி மசாலா பேஸ்ட் வீட்டிலேயே ரெடி.இதனை குழம்பு,குருமா,கறி,மசாலா வகைகளுக்கு உபயோகிக்கலாம். குறிப்பு: தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்கலாம்.அவசரத்திற்கு மொத்தமாக போடுவதற்கு வசதியாக இருக்கும்.ஒரு மாறுதலுக்கு இப்படி செய்து வைத்து உபயோகிக்கலாம்.இது பேச்சுலர்ஸ்க்கு மிகவும் உதவியாக இருக்கும். ------------------------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள் இளசான கறிவேப்பிலை - 2 கப் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் புளி - சுண்டைக்காய் அளவு. உப்பு - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். -----------------------------------------------------------------------
சாம்பார் பொடி - 3
தேவையான பொருட்கள் தனியா - 3 ஆழாக்கு துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு மிளகு - ஒரு ஆழாக்கு கடலைப்பருப்பு - ஒரு ஆழாக்கு விரளி மஞ்சள் - 6 மிளகாய்வற்றல் - 5 வெந்தயம் - கால் ஆழாக்கு கடுகு - கால் ஆழாக்கு செய்முறை எல்லா சாமான்களையும் வெயிலில் தனித்தனியாக காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். காயவைத்த சாமான்களை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த வகை பொடி எல்லா விதமான சாம்பார் வகைகளுக்கும் பயன்படுத்தலாம் ---------------------------------------------------------------------
இட்லி மிளகாய்ப் பொடி - 2
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் - 100 கிராம் உளுத்தம் பருப்பு - 100 மில்லி கடலைப்பருப்பு - 100 மில்லி பெருங்காயம் - புளியாங்கெட்டை அளவு எள்ளு - ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைகேற்ப செய்முறை வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை வறுத்து எடுத்து விட்டு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது வாணலியில் எண்ணெய் விடாமல் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, எள்ளு முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் மிளகாய், பருப்பு வகைகளை முதலில் பொடித்து விட்டு இறுதியில் உப்பு கலந்து பொடித்து எடுக்கவும். கறிவேப்பிலையை வாணலியில் தண்ணீர் சுண்ட வறுத்துத் தூள் செய்து தேவையானால் கலந்து கொள்ளவும். ----------------------------------------------------------------------
சாம்பார் பொடி - 1
தேவையான பொருட்கள் குண்டு மிளகாய் - 1/4 கிலோ, தனியா - 3/4 கிலோ, சீரகம் - 100 கிராம், மிளகு - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், விரளி மஞ்சள் - 100 கிராம், பச்சரிசி - 50 கிராம், செய்முறை எல்லாவற்றையும் நன்றாக வெய்யிலில் காய வைத்து மெஷினில் நைசாக அரைக்கவும் ----------------------------------------------------------------------------
கறிவேப்பிலைப் பொடி - 1
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - 50 கிராம் உளுத்தம்பருப்பு - 20 கிராம் மிளகாய் வற்றல் - 10 எண்ணெய் - சிறிதளவு செய்முறை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் இவற்றினை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். மிக்ஸியில் முதலில் மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு இரண்டையும் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதனுடன் வறுத்த கறிவேப்பிலையைச் சேர்த்து பொடி செய்யவும். விருப்பம் உள்ளவர்கள் சிறிதளவு உப்பும், பெருங்காயப் பொடியும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். சூடான சாதத்திற்கு பொடியுடன் நல்லெண்ணெய்விட்டு சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும் -------------------------------------------------------------------------------
ரசப்பொடி - 1
தேவையான பொருட்கள் மிளகாய் - 100 கிராம் மல்லி விதை - 300 கிராம் மிளகு - 50 கிராம் சீரகம் - 50 கிராம் மஞ்சள் - 10 கிராம் துவரம் பருப்பு - 250 கிராம் செய்முறை வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்துக் கொள்ளவும். மிளகாயை தனியாக இடித்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். மற்ற பொருட்களை தனியாக இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும். பிறகு இரண்டையும் கலந்து தகுந்த ஜாடியில் அல்லது பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதனை ஒரு மாத காலத்திற்கு உபயோகப்படுத்தலாம். நாட்கள் அதிகமாக, மணமும் ருசியும் குறையும். -----------------------------------------------------------------------
கரம் மசாலா
தேவையான பொருட்கள் மிளகாய் - 200 கிராம் தனியா - 200 கிராம் சீரகம் - 100 கிராம் கிராம்பு - 25 கிராம் பட்டை - 5 கிராம் கசகசா - 200 கிராம் செய்முறை எல்லா சாமான்களையும் தனியாக வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். புலவு வகைகள், மசாலா கறிவகைகள் செய்யும் போது இதில் கொஞ்சம் சேர்த்தால் வாசனையாக இருக்கும். --------------------------------------------------------------------------------
கரம் மசாலாப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் - 400 மில்லி சோம்பு - 250 மில்லி மிளகு - 150 மில்லி பட்டை - 2 இஞ்ச் அளவுள்ள 7துண்டுகள் கிராம்பு - 80 பீஸ் ஏலக்காய் - 80 பீஸ் செய்முறை இவை அனைத்தையும் வெயிலில் சுமார் 1 மணி நேரம் காயவைத்து, பிறகு ஆலையில் கொடுத்து அரைத்து, சூடு ஆறியவுடன் காற்றுப் புகாத ஒரு பாட்டிலில்போட்டு மூடிவைத்துக்கொள்ளலாம். குறிப்பு: ஆலையில் அரைக்கும் வசதி கிடைக்காவிட்டால், ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு சூடேறும்வரை மட்டும் லேசாக வறுத்துவிட்டு, பிறகு ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கலாம்.ஆனால், நன்றாக மாவு போன்று பொடிபண்ணவேண்டும். -----------------------------------------------------------------------
சாம்பார் பொடி (4)
தேவையான பொருட்கள் வரமிளகாய் -அரை கிலோ மல்லி விதை -அறுநூற்றைம்பது கிராம் துவரம் பருப்பு - நூறு கிராம் கடலைப் பருப்பு - நூறு கிராம் வெந்தயம் - பத்து கிராம் மிளகு - பத்து கிராம் கட்டி பெருங்காயம் - இருபது கிராம் விரலி மஞ்சள் - இருபது கிராம் செய்முறை மஞ்சள், பெருங்கயத்தை சிறிய கட்டிகளாகத் தட்டி வைக்கவும். (பொடித்து விட வேண்டாம்) மிளகாயை காம்பு நீக்கி வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து முதலில் பெருங்காயத்தைப் போட்டு பொரியும் வரை வறுக்கவும். பிறகு அதிலேயே மஞ்சள், மிளகு, வெந்தயம், பருப்புகள் எல்லாவற்றையும் போட்டு நிறம் மாற ஆரம்பிக்கும் வரை வறுத்து இறக்கவும். (அதிகம் சிவக்க வேண்டாம்) மல்லியை இளம் சூட்டில் நான்கு நிமிடம் வறுக்கவும். மிள்காயைப் போட்டு இளம் சூட்டில் ஐந்து நிமிடம் வறுக்கவும். எல்லாவற்றையும் சூடு ஆறும்வரை ஆற வைத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும். குறிப்பு: பொடி அரைக்கும் முன்னும் பின்னும் சூடு ஆறும் வரை காய வைத்தால் போதுமானது. அதிக நேரம் பரப்பி ஆற வைத்தால் வாசனை கம்மியாக உள்ளது போல் இருக்கும். கட்டிப் பெருங்காயம் சாம்பார் பொடிக்கு மிகவும் உகந்தது. இந்தப் பொடி பெருங்காயம் சேர்ப்பதால் சாம்பர், வத்தல் குழம்பு, காரக் குழம்புகளுக்கு மட்டுமே பயன் படுத்த முடியும். பொதுவாக சாம்பார் செய்து இறக்கும் முன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவலுடன் கால் டீ ஸ்பூன் மல்லி விதை (பச்சையாக) சேர்த்து அரைத்து ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி கடுகு, உளுந்து, தட்டிய இரண்டு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து மேலே மல்லி இலை தூவி இறுக மூடி ஐந்து நிமிடம் கழித்து திறந்து உபயோகப் படுத்திப் பாருங்கள். சுவை அலாதியாக இருக்கும். --------------------------------------------------------------------
வேப்பம்பூ பொடி
தேவையான பொருட்கள் வேப்பம்பூ - ஒரு டம்ளர் மல்லிவிதை - அரை டம்ளர் மிளகு - ஒரு தேக்கரண்டி மிளகாய் - 4 பெருங்காயம் - பட்டாணி அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை வேப்பம்பூவை வெறும் வாணலியில் இட்டு, மிதமான சூட்டில் இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும். பிறகு மல்லிவிதை, மிளகு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றையும் போட்டு சிவக்க வறுக்கவும். இறக்குவதற்கு முன்பு கல் உப்பையும் சேர்த்து சிறிது வறுத்து இறக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளவும். சாதத்துடன் எண்ணெய் விட்டுக் கலந்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் --------------------------------------------------------------------------
கறிக்குழம்பு கரம்மசாலா
தேவையான பொருட்கள் கசகசா - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு மேஜைக்கரண்டி தனியா - இரண்டு மேஜைக்கரண்டி சோம்பு - இரண்டு தேக்கரண்டி கிராம்பு - 4 பட்டை - 4 செய்முறை இவையனைத்தையும் தனிதனியாக வறுத்து ஒன்றாக பொடித்துவைத்துகொள்ளவும். கறிக்குழம்பு செய்யும் போது கடைசியில் ஆறு பல் பூண்டை நசுக்கி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி இந்த கரம் மசாலா பொடியை சேர்த்து செய்தால் குழம்பின் வாசம் மற்றும் ருசி நன்றாக இருக்கும். --------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை (இட்லி) பொடி
இது இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானதும் கூட! தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - 40 கொத்து கடலைப்பருப்பு - 100 மில்லி தோல் நீக்கிய உலுந்து - 100 மில்லி காய்ந்த மிளகாய் - 15 எண்ணெய் - 100 மில்லி உப்பு - 2 ஸ்பூன் செய்முறை கடலைப்பருப்பு, உலுந்து இரண்டையும் தனித்தனியாக லேசான பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை சுத்தம் செய்து எண்ணெயில் நான்கைந்து கொத்துகளாக போட்டு பொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் காய்ந்த மிளகாயையும் தீயாமல் வறுத்தெடுக்கவும். அனைத்தையும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து காற்றுப்புகாத பாட்டிலில் போட்டுவைக்கவும். -------------------------------------------------------------------------
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள் வற்றல் - 200கிராம் கொத்தமல்லி - 50 கிராம் சீரகம் - 25 கிராம் உளுந்தம்பருப்பு - 10 கிராம் கடலை பருப்பு - 25 கிராம் துவரம் பருப்பு - 10 கிராம் புழுங்கல் அரிசி - 10 கிராம் மிளகு - 10 கிராம் வெந்தயம் - 1 தேக்கரண்டி காயம் - நெல்லிக்காய் கறிவேப்பிலை - ஒரு கொத்து மஞ்சள் - 2ஸ்பூன் உப்பு - 1 மேஜை கரண்டி செய்முறை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்னிரமாக வறுத்துமிசினில் அல்லது மிக்சியில் அரைத்து கொள்ளவும். குறிப்பு: சாம்பார் பொடியை குறைந்தது 5 மாதம் வரை உபயோகப்படுத்தலாம் ----------------------------------------------------------------------------
கரம் மசாலாப் பொடி
தேவையான பொருட்கள் கிராம்பு - 20 கிராம் பட்டை - 20 கிராம் ஏலம் - 20 கிராம் ஜாதிக்காய் - ஒன்று சீரகம் - 20 கிராம் மிளகு - 20 கிராம் தனியா - 40 கிராம் சுக்கு - 40 கிராம் செய்முறை இவையனைத்தையும் வெய்யிலில் காய வைத்து, பொடித்துக் கொள்ளவும் ------------------------------------------------------------------------------
சீரகப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் -- 100 கிராம் இஞ்சி -- 50 கிராம் எலுமிச்சம் பழம் -- 15 (அ) 20 ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது) சீனா கல்கண்டு -- 100 கிராம் செய்முறை இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்கவேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும். சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும். இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும். உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். குறிப்பு: வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும். --------------------------------------------------------------------------------

Monday, 17 March 2014

ஹோட்டல்ல சாப்பிடுவீங்களா..?



  வாரத்துக்கு ஒருநாளேனும் வெளியில் சென்று சாப்பிடும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது.குடும்பத்தில் இருவரும் வேலையில் இருப்பவர்கள் என்றால் எல்லா நாளும் சமைப்பது சிரமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.இன்னொன்று சுவைக்காக ஒரு சேஞ்சுக்காக சாப்பிடுவது.எப்படியோ இந்தப்பழக்கம் அதிகரித்து வருகிறது.

 நடுத்தரமான ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்த தந்தையிடம் அவரது குழந்தை " அப்பா கையெல்லாம் கருப்பாயிடுச்சி" என்றான் சாதாரணமாக! அப்பாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை."வீட்டில் போய் கழுவிக்கொள்ளலாம் வாடா" என்றார் .

 பையன் கையெல்லாம் கருப்பாக காரணம் அவன் துடைத்த நியுஸ் பேப்பர்.அதில் உள்ள ஆபத்து தந்தைக்கு தெரியவில்லை.கையில் உள்ள காரீயம் மூளை வளர்ச்சியிலிருந்து ,நரம்பு மண்டலம்,உடலியக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கடுமையாக பாதிக்கக்கூடியது.

 பெரும்பாலான உணவகங்களிலும் பழைய நியூஸ் பேப்பர்களை கையைத்துடைக்க கிழித்து வைத்திருக்கிறார்கள்.அதில் துடப்பவர்களே அதிகம்.சாப்பிட்டுவிட்டு கையை கழுவியவுடன் ஈரக்கையில் துடைப்பதால் வேதிப்பொருட்கள் உடலுக்கு செல்வதை தவிர்க்க முடியாது.

 உணவகங்களில் கையத்துடைக்கத்தான் என்றில்லை.சாலையோரங்களில் ,பலகார கடைகளில் வடை,பஜ்ஜி,போண்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் பழைய செய்தித்தாள்களையும், சஞ்சிகைகளையுமே பயன்படுத்துகிறார்கள்.எண்ணையுடன் சூடாக இருப்பதால் அதிக காரீயத்தை உறிஞ்சி நம் உடலுக்குள் சேர்க்கிறது.

 போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் இப்படி ஏராளமான பழக்கங்கள் நம்மிடம் இருக்கின்றன.கையைக்கழுவி விட்டு துடைக்காமல் உலர்த்துவதே சரியான முறை.

பொதுமக்கள் நலன் கருதி அச்சிட்ட தாள்களை உணவு வைத்து வழங்கவும்,கையைத்துடைக்க உணவகங்களில் வைக்கவும் சுகாதாரத்துறை தடை செய்ய வேண்டும்.பல்வேறு உடல் நல பிரச்சினைகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.

தற்போது மாம்பழ சீசன் .மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதை கண்டறிந்து டன் டன்னாக ஆங்காங்கே கொட்டி அழிக்கப்படுகிறது.விரைவாக பழுக்க வைத்து விற்று பணம் பார்ப்பதற்காக வியாபாரிகள் மக்கள் நலனை மறந்து விடுகிறார்கள்.

கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்கள் வயிற்றுப் பிரச்சினையை உடனடியாக கொண்டு வரும்.குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.பழங்கள் வாங்குபவர்கள் பழக்கப்பட்ட கடையிலேயே வாங்குவது நல்லது.

இயற்கையாக பழுத்த பழங்களில் சீராக மஞ்சள் நிறம் இருக்காது.பலத்தின் சில பகுதிகள் பச்சை நிறத்தில் இருக்கும்.கல் வைத்து பழுக்க வைத்தால் இயல்பான ருசி இருக்காது.தெரியாத இடத்தில் வாங்கினால் முடிந்தவரை தோலை தவிர்த்து விடவும்.

கணவன் மனைவி ஜோக் ஒன்று.மனைவி கேட்டார் ,"டியர் இன்று என்னுடைய பிறந்த நாள் !நான் இதுவரை பார்க்காத இடத்துக்கு என்னை அழைத்துச்செல்லுங்கள் "

கணவர்:வா டியர் நாம கிச்சனுக்கு போகலாம்.



Tuesday, 4 March 2014

ஜலதோஷத்திற்கு ஜீராமிளகு ரஸம் சிறந்த நிவாரணி...!



ஜீராமிளகு ரஸம்.

வேண்டியவைகள்

தனியா——இரண்டு டீஸ்பூன்

மிளகு—–ஒரு டீஸ்பூன்

சீரகம்——ஒரு டீஸ்பூன்

துவரம்பருப்பு–இரண்டு டீஸ்பூன்

பெரிய தக்காளிப் பழம்—–ஒன்று

புளி—–சின்ன எலுமிச்சம்பழ அளவு

பூண்டு——7 அல்லது 8 இதழ்கள்

நெய்—-2 டீஸ்பூன்

ருசிக்கு உப்பு

தாளிக்க—சிறிது கடுகு,      பெருங்காயம்,கறிவேப்பிலை

ஒரு துளி மஞ்சட் பொடி

மிளகாய்——சிறியதாக  ஒன்று

செய்முறை—-புளியை ஊறவைத்து நன்றாகக் கரைத்து

இரண்டு கப் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும்.

உப்பு, மஞ்சட்பொடி சேர்க்கவும்.

சிறிது    நெய்யில்    பருப்பு, மிளகு, மிளகாய்,  தனியாவை

சிவக்க வறுத்துக் கொண்டு பூண்டையும் சேர்த்து

கறுகாமல் வதக்கி, நறுக்கிய தக்காளியையும்,

சேர்த்து லேசாக வதக்கவும்.

ஆறியவுடன்      சீரகம்       சேர்த்து    மிக்ஸியிலிட்டு

சிறிது ஜலம்  தெளித்து விழுதாக அரைக்கவும்.

உப்பு சேர்த்த  புளிக்கரைசலை    பாத்திரத்திலிட்டு

நிதானமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும்.

புளி வாஸனை போகக் கொதித்தவுடன், அரைத்த

விழுதை இரண்டரை கப் நீரில் கரைத்து சேர்க்கவும்.

நுறைத்துப் பொங்கும் அளவு கொதிக்கவிட்டு

இறக்கி  நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து

கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி உபயோகிக்கவும்.

சுலபமாகச்  செய்யக்கூடிய மருத்துவ குணமுள்ள

ரஸமிது.  


  ஜலதோஷம்.  ஜுரம் போன்றவைகளின் போது

இம்மாதிரி ரஸம் மிகவும் நல்லது.  

துணைக்கு

பருப்புத் துவையல்.  சுட்ட அப்பளாம்.

Sunday, 2 March 2014

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி உங்களுக்கு வேணுமா..?




தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கிலோ

மட்டன் - 1/2 கிலோ

நெய் 250 கிராம்

தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)

பூண்டு - 100 கிராம்

இஞ்சி - 75 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்

பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 50 கிராம்

எலுமிச்சை - 1

பொதினா, கொத்தமல்லிதழை - கையளவு

கேசரிப்பவுடர் - சிறிதளவு

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்பு விபரம்:

செய்வது: எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA

தயாராகும் நேரம்: 15 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

முன்னேற்பாடுகள்:

1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்

3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.


செய்முறை:

1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்

2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்

3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்

6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்

8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்

9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்

10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்

11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.


பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

Friday, 28 February 2014

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான 25 வழிகள்..!



இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.


  • தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-
காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.
  • உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-
சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.
  • அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.
  • அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-
ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.
  • சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். 

  • அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-
 உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.

  • பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-
பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.
  • சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-
சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
  • நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-
குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

  • மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.
  • க்ரீன் டீ பருகுங்கள்:-
தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.
  • யோகாவை தேர்ந்தெடுங்கள்:-
யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
  • வீட்டில் உண்ணுங்கள்:-
வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

  • உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-
சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.
  • வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-
நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.
  • உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-
உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.
  • உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-
வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.
  • உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.
  • உணவிற்கு முன் பழங்கள்:-
உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

  • தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-
கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.
  • மாமிசத்தை குறைக்கவும்:
அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
  • 100 கலோரிகளை எரிக்கவும்:-
தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.
  • இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-
இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.
  • உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-
தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.
  • கொண்டாட்டம்:-
சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

ஈரல் சாப்பிடலாமா..? கூடாதா..?

ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி அறுத்தால் ஒரு துண்டு ஈரல் கிடைக்கும்.சிலர் சுட்டு தின்பார்கள்.குழம்பில் போட்டால் தனியாக மிதக்கும். கறி  வெந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து போட .வேண்டும்.
 

ஆட்டு ஈரல் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும்.இப்போது சிக்கன் கடைகள் முளைத்தபின்பு கோழி ஈரலும் எங்கும் கிடைக்கிறது.நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்,'' கோழி ஈரல் சாப்பிடக்கூடாது பாஸ் " ஆட்டு ஈரல் சாப்பிடலாம் என்றார்.ஆனால் அவரால்  காரணத்தைச்  சொல்லி விளக்க  முடியவில்லை. 

வீதிதோறும் அசைவக் கடைகள் பரவிவிட்ட நிலையில் இப்போது ஈரல் கிடைப்பது  சுலபம்.ஆனால் நண்பர் சொன்னது போல பலருக்கு குழப்பம் இருப்பதை கவனித்திருக்கிறேன்.உயிர்ச்சத்துக்களை சேமித்து வைத்து தேவையானபோது வழங்குவது ஈரலின் முக்கிய பணி.முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது ஈரல்.


அனைத்து உயிர்ச்சத்துக்களும் இதில் உண்டு..குறைந்த அளவில் முழுமையான சத்துக்களை கொடுக்கும் வேறு உணவைக் குறிப்பிட   முடியாது.இரும்பு,செலினியம்,துத்தநாகம் என்று பயனுள்ளவை அதிகம் இருக்கிறது.ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உணவு.போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும்  இதன் சிறப்பு.

அதிக ஏ வைட்டமின் காரணமாக கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.ஆனால் ஊட்டச் சத்து பற்றாக்குறை உள்ள நம் நாட்டில் மிகு விட்டமின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஈரல் சாப்பிடும் அன்று ஏதேனும் காரணங்களுக்காக விட்டமின் மாத்திரை எடுப்பவர்கள் அன்று தவிர்த்துவிடலாம்.


எதிரான விஷயம் என்று பார்த்தால் கொலஸ்ட்ராலை குறிப்பிடலாம்.ஆட்டு  ஈரலில் கொஞ்சம் அதிகம். கொலஸ்ட்ரால்  பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.மற்றவர்களும் ஒரு முழு பூண்டை தட்டி உடன் சேர்த்துக்கொள்ளலாம்.பூண்டு  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

பொதுவாக கலர் பவுடர் தூவப்பட்ட சிக்கன் கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல! சாலையோரக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது.உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட ஈரல் இருக்க வாய்ப்புண்டு.ஈரல் மட்டுமல்ல,அசைவ உணவுகளை வீட்டில் தயாரிப்பதே மிகச் சரி.



Sunday, 23 February 2014

சின்னம்மையைத் தடுக்கும் - வேப்பிலை ரெசிபி..!



கோடைகாலம் ஆரம்பமாகப் போகிறது. இக்காலத்தில் சின்னம்மை அதிகம் வரும் அபாயம் உள்ளதால், அதனை வராமல் தடுக்க முயற்சிக்க வேண்டும்.

 அதிலும் சிலருக்கு சிறுவயதில் இருந்நே வரும்.

அப்படிப்பட்டவர்கள், அதனை வராமல் தடுக்க முயல வேண்டும்.

இங்கு அந்த சின்னம்மையைத் தடுக்கும் ஒரு வேப்பிலை ரெசிபியைக் கொடுத்துள்ளோம்.

அந்த ரெசிபியை படித்து, அதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, சின்னம்மை வருவதைத் தடுக்கலாம்.

சரி, இப்போது சின்னம்மையைத் தடுக்கும் வேப்பிலை ரெசிபியைப் பார்ப்போமா!

 தேவையான பொருட்கள்:

 வேப்பங்கொழுந்து - 1 கட்டு

 உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)

 உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

 முதலில் வேப்பங்கொழுந்தை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வேப்பங்கொழுந்தை போட்டு வதக்க வேண்டும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.

பின் அதனை இறக்கி, அந்த கலவையை மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, கையால் பிசைந்தால், சின்னம்மையை தடுக்கும் வேப்பிலை ரெசிபி ரெடி!

Friday, 21 February 2014

மைதா உணவுகளால் ஏற்படும் விளைவுகள் - எச்சரிக்கை..!



உணவுதான் நம்மை உருவாக்கிருக்கிறது.நீங்கள் யார் என்று கேட்டால் அது உணவுதான்.உண்மையில் நலவாழ்வு உணவைச்சார்ந்து இருக்கிறது.அது நோய்களைத்தீர்மானிக்கிறது.கிருமிகளை எதிர்க்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை.உடலின் சீரான வளர்சிதை மாற்றத்தை நம்முடைய சாப்பாடுதான் முடிவு செய்கிறது.இன்று மருந்துக்கடைகளில் குவியும் மக்களை அங்கே அனுப்பி வைக்கக் காரணம் உணவுமுறைதான்.


ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் இருக்கிறார்கள்.ஆனால் முக்கியமாக உணவியல் நிபுணர்கள்தான் தேவை. நீரிழிவு நோயாளிக்கான உணவு, இதய நோயாளிக்கான உணவு என்று ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு கூடுதலான கலோரி தேவை.ஒல்லியாக இருப்பவர்களுக்கும்,உடல் பருமன் உள்ளவர்களுக்கும் தனித்தனி உணவுப்பட்டியல் வேண்டும்.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை இன்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர் இருந்தவரை பப்பாளி,கொய்யா,வாழை,அகத்தி,நெல்லி போன்றவை வாய்க்கால் ஓரமாகவே கிடைத்துவிடும்.இன்றைய நிலை அப்படி இல்லை.நம்முடைய உணவில் தேவையான உயிர்ச்சத்துக்கள் இருக்கிறதா? என்பது நமக்குத்தெரியாது.

அன்றாட உணவில் ஏ வைட்டமின் எவ்வளவு இருக்கவேண்டும் என்று எத்தனை பேருக்குத்தெரியும்? இன்றைய நம் உணவில் எந்தெந்த உணவு மூலம் அந்த அளவைப்பெற்றிருக்கிறோம்? போதுமான அளவு நார்ச்சத்தை சாப்பிட்டோமா? ஒரு நாள் சரியாக காலைக்கடன் கழிக்காவிட்டால் மனநலனில் கூட மாற்றம் ஏற்படுகிறது.மலச்சிக்கல் வந்தவனைப்போல இருக்கிறான் என்று சொல்கிறோம்.

வெளியில் சாப்பிடுவதே அவ்வளவு ஆரோக்கியமில்லை என்று சொல்கிறோம்.ஆனால் இரண்டு பேரும் வேலைக்குச்செல்லும் சூழலில் வீட்டுக்கு பார்சல் வாங்குவது அதிகரித்திருக்கிறது.உணவகங்கள் அதிகரிக்கின்றன.குழந்தைகளுக்கான தின்பண்டங்களும் பொட்டலங்களை நம்பி இருக்கின்றன.சென்ற ஆண்டு ஒரு பேக்கரி இருந்த வீதியில் இன்று ஐந்து இருக்கின்றன.அத்தனையும் வியாபாரம் கொழித்துக்கொண்டிருக்கின்றன.


வெளியில் வாங்குபவை பெரும்பாலானவை மைதாவால் செய்யப்படும் உணவுகள்தான்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருபதிவில் மைதா நீரிழிவைத்தூண்டுகிறது என்று கேரளாவில் நடைபெறும் போராட்டம் பற்றி சொல்லியிருந்தேன். வலைப்பதிவுகளில் விரிவாக சில பதிவுகள் வந்திருக்கின்றன.இன்று வெகுஜன ஊடகங்களிலும் விவாதமாகிவிட்டது.தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.

புதிதாக வேலைக்காக வெளியூர் வந்த ஒருவர் தினமும் இரவில் பரோட்டா சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.மருத்துவர் ஒருவரது அறிவுரைக்குப்பிறகு அந்தப்பழக்கத்தை விட்டுவிட்டார்.இப்போது  மருத்துவமனைகளில் கூட மைதா உணவுகளைத்தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்படுகிறது.தொற்றுநோயல்லாத நோய்களுக்கான(Non-communicable diseases) திட்டத்தில் முக்கிய தகவல்களாக சொல்லப்படுகின்றன. நார்ச்சத்து,எண்ணெய் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


நீரிழிவு அச்சுறுத்தும் விதத்தில் அதிகரித்துவருகிறது.இன்று சமூகப்பிரச்சினையாக கவனம் கொள்ளக்கூடிய நலக்குறைவு அது.உழைப்பு நாட்களை வீணடிப்பது ஒருபுறம்,மருத்துவச்செலவினங்கள் அதிகரிப்பது இன்னொருபக்கம் என்று நெருக்குகிறது.எப்போதாவதுதானே சாப்பிடுகிறோம் என்பது சூழல் காரணமாக அடிக்கடி என்று மாறிவருகிறது.குழந்தைகளுக்கும் இவற்றையே பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

நம்மைப்போன்ற வளரும் நாடுகளில் உணவுகளைப்பரிந்துரைக்கும்போது கவனம் தேவை.அவை ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை போக்குவதாக இருக்கவேண்டும்.அன்றாடத்தேவையான உயிர்ச்சத்துக்களையும், தாதுக்களையும் வழங்கவேண்டும். உணவுப்பொருள் ஒன்றை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் கவனத்தில் கொள்ளவேண்டியவை இவைதான்.சுவைக்காக மட்டும் ஒரு உணவைப் பரிந்துரைப்பது தனிமனிதனுக்கும்,தேசத்துக்கும் இழப்பை ஏற்படுத்தும்.


 
நண்பேன்டா