Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Sunday, 23 March 2014

திருமண வாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக அமைய 10 ஆலோசனைகள்...!



திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் தாம் தெளிவாக இருப்பதுபோல காட்டிக் கொள்வதற்காக ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மண வாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.

இன்று பல தம்பதியர் குடும்ப வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்காக சிரித்து வைக்கிறார்களேத் தவிர, உண்மையான – பரிசுத்தமான ஆனந்தத்தில் அவர்கள் புன்னகை பூக்கவில்லை.

பிரம்மச்சாரிகளைவிட குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களே அதிக ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியே செய்து நிரூபித்து இருக்கிறார்கள் என்பதை எல்லா தம்பதியரும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மனிதப் பிறவி ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்குத்தான். சொத்து, பணத்துக்காகவே வாழ்வதற்கும், எதற்கெடுத்தாலும் ‘ஈகோ’வால் கோபப்பட்டு ஆனந்தத்தை தொலைப்பதற்கும் யாரும் பிறவி எடுக்கவில்லை.

முடிந்தவரை எல்லோரும் ஆனந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். தாம்பத்திய வாழ்க்கையில் ஆனந்தமாக இருந்தால், மற்ற எல்லாவித ஆனந்தங்களும் வந்து சேரும். இதையும்கூட ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்து விட்டு ”எனக்கு இவர் வேண்டாம்” என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.

அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டி விடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.

திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.

குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிது படுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.

நண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண ஜோக்குகளும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின் போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன் என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்து விடும்.

மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் `அவர் எனக்காக மாற வேண்டும்` என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும். திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர் தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.

கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம் விட்டு பேசுங்கள்.

இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்து கொண்டு பக்கபலமாக இருந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டு வேலைகளை அதிகம் சுமத்துவது, குறை கூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜவாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.

வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.

திருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கணவன்-மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.

உடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறை வேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினை களுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.

தேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக்கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்து விடாதீர்கள்.

Tuesday, 18 March 2014

பெண்களே சமையலுக்கு எந்த பொடி எப்படி செய்யலாம்..? - இதைப்படிங்க..!

கூட்டுப் பொடி
இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 100கிராம்(1/2 டம்ளர்), மிளகு - 3 மேசைக்கரண்டி, சீரகம் - 3 மேசைக்கரண்டி, தனியா - 1கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 15. செய்முறை எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். வறுத்த பருப்பு, சீரகம், மிளகாய், மிளகு, தனியா எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும். கூட்டு கொதித்தபின் இறக்குமுன் 1 மேசைக்கரண்டி தூவி கலந்து இறக்கவும். ரசத்திற்கும் இறக்குமுன் 1 தேக்கரண்டி போட்டு இறக்கினால் ரசம் வாசனையாக இருக்கும். ------------------------------------------------------------------------------------------------- ரச பொடி 
தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் - -----------ஒரு கப் தனியா - ----------- 3 கப் துவரம் பருப்பு - --------- 1/2கப் மிளகு --------- அரை கப் சீரகம் - ------------ஒன்றறை கப் கட்டிவிரளி மஞ்சள் - 4 செய்முறை விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். தனியா, துவரம் பருப்பு,மிளகு, சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வறுக்க வேண்டாம் வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும். எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும். ----------------------------------------------------------------------------
வேர்க்கடலை பொடி
தேவையான பொருட்கள் வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப் பொட்டுக்கடலை - 1 கப் வறுத்த எள் (வெள்ளை அல்லது கறுப்பு) - 1/2 கப் பெருங்காயம் - 1 துண்டு வறுத்த கசகசா - 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் வற்றல் - 6 அல்லது 8 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/2 டீஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். மிளகாய் வற்றலை வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை, எள், கசகசா, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், பொட்டுக்கடலை எல்லாவற்றையும் பொடிக்கவும். சூடான சாதத்தில் இந்தப்பொடியைப்போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். ----------------------------------------------------------------------------
சீரகப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் -- 100 கிராம் இஞ்சி -- 50 கிராம் எலுமிச்சம் பழம் -- 15 (அ) 20 ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது) சீனா கல்கண்டு -- 100 கிராம் செய்முறை இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்கவேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும். சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும். இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும். உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். குறிப்பு: வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும். --------------------------------------------------------------------------
சாம்பார் பொடி -- ( 10 பேருக்கு )
தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் -- 10 கிராம் கொத்தமல்லி -- 20 கிராம் வெந்தயம் -- 1 டீஸ்பூன் கடலை பருப்பு -- 1 டீஸ்பூன் பெருங்காயம் -- 1 துண்டு கறிவேப்பிலை -- 2 இனுக்கு தேங்காய் எண்ணைய் -- தே.அ செய்முறை எண்ணையை சூடாக்கி கடலைபருப்பு மற்றும் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறவும். கடலை பருப்பு சிவப்பு நிறமானதும் கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெந்தயம் பொரியும் போது கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கிய பின் தூளாக்கவும். இது உடனடியாக செய்யக்கூடிய சாம்பார் பொடி. நல்ல ருசியான காரமான சாம்பார் பொடி. -----------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள் இளசான கறிவேப்பிலை - 2 கப் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் புளி - சுண்டைக்காய் அளவு. உப்பு - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும் ------------------------------------------------------------------
எள்ளு பொடி - 2
தேவையான பொருட்கள் கருப்பு எள்ளு - 100g காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) - 15 பூண்டு - 10 புளி - நெல்லிக்காய் அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். எள்ளு நன்கு பொரிய வேண்டும். மிளகாயை நன்கு வறுக்க வேண்டும். ஆரியபின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். குறிப்பு: இந்த பொடியை எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம். --------------------------------------------------------------------------
இட்லி / தோசை பொடி --முறை - 2
தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு -- 1 கப் வத்தல் -- 1 கப் பெருங்காயத்தூள் -- 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை -- 2 இனுக்கு உப்பு -- தே.அ வெள்ளை எள் -- 2 ஸ்பூன் (வறுத்தது) செய்முறை வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு போட்டு 1 நிமிடம் வறுக்கவும். பின் வத்தல் , பெருங்காயம் , கறிவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் உப்பு, எள் சேர்த்து அரைக்கவும். காரமான ருசியான இட்லி பொடி ரெடி. ------------------------------------------------------------------
இட்லி பொடி( குழந்தை களுக்கு)
தேவையான பொருட்கள் உளுந்து பருப்பு - அரை கப் கடலை பருப்பு - அரை கப் மிளகு - ஒரு தேக்கரண்டி வேர்கடலை - ஒரு மேசை கரண்டி (வருத்தது) வெள்ளை எள் - ஒரு தேக்கரன்டி (வறுத்தது) கருவேப்பிளை - கால் கப் உப்பு - அரை தேக்காரண்டி (அ) தேவையான அளவு பூண்டு - ஒன்று செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொடுட்களியும் தனித்தனியாக வறுக்கவும். வறுத்து ஆறவைக்கவும். ஆறியது மிக்ஸியில் திரித்து ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்கவும். இட்லிஅயி பொடியாக நருக்கி இந்த பொடியை தூவி நெயை சூடு பண்ணி ஊற்றி கிளறி கொடுக்கவும். உப்புயும் வருக்கனும்.இல்லை எலா பொருளையும் வருத்து விட்டு அந்த சூடு வானலியில் கடைசீயாக போட்டாலும் சரி. குறிப்பு: ஒரே ஒரு இட்லி சாப்பிட்டாலும் இதில் எல்லா சத்தும் அடங்கியுள்ளது. பருப்பு வகைகள், பூண்டு கேஸுக்கு, நெய் ஆகா கம கமக்கும், கருவேப்பிலை தலை முடி சொட்டையாகமல் இருக்கும் சிறுவயதிலிருந்தே சேர்த்து விடுங்கள்.கர கரப்பாக திரியுங்கள் அப்ப தான் சாப்பிடும் போது கடுக்கு மொடுக்கு என்று இருக்கும் ---------------------------------------------------------------------
கறிப் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் ------------------------------------------------------------------
வேர்க்கடலைப் பொடி
தேவையான பொருட்கள் வறுத்த வேர்க்கடலை-நூறு கிராம் கடலைப்பருப்பு-அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு-அரை ஆழாக்கு சிவப்பு மிளகாய்-எட்டு (அவரவர் காரத்தைப் பொறுத்து கூட/குறைய) பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு உப்பு, வறுக்க எண்ணெய் செய்முறை வேர்க்ககடலையை தோல் நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தைப் பொரிக்கவும். அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவறைப் போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும். பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியில் வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை பிசைந்து சாப்பிடலாம். குறிப்பு: வேர்க்கடலை சேர்த்து அதிகமாக அரைக்கக்கூடாது. கரகரப்பாக இருக்க வேண்டும். --------------------------------------------------------------------------
கொள்ளு பொடி -1
இந்த பொடியினை சாப்பிட உடல் எடை குறையும். தேவையான பொருட்கள் கொள்ளு - 1 கப் காய்ந்த மிளகாய் - 6 பூண்டு - 2 பல் தோலுடன்(விரும்பினால்) பெருங்காயம் தூள் - 1/4 தே.கரண்டி உப்பு - 1 தே.கரண்டி செய்முறை ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். பின் கொள்ளினை போட்டு நன்றாக வறுக்கவும். சிறிது நேரம் ஆறவைத்த பிறகு கொள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும். கடைசியில் பூண்டு , பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான கொள்ளு பொடி ரெடி. இதனை இட்லி, தோசை, சாத்த்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் ----------------------------------------------------------------
கொள்ளு பொடி -2
தேவையான பொருட்கள் கொள்ளு - கால் கப் காஞ்ச மிளகாய் - நன்கு பெருங்கய்ம் - ஒரு பின்ச் உப்பு - ஒரு பின்ச். செய்முறை எல்லா பொருட்களையும் எண்ணையில்லாமல் வெரும் வானலியில் வருத்து ஆறவைத்து கரகரப்பாக திரிக்கவும் குறிப்பு: உடல் மெலிய விருப்புவர்கள் இநத கொள்ளை வாங்கி வேகவைத்து அதேல்லாம் பெரிய வேலை, அதற்கு பதில் இந்தமாதிரி திரித்து வைத்து கொன்டால் சாத்தைல் போட்டு பிசைந்து கொண்டு மேலே என்ன குழம்போ அதுவும் சேர்த்து சாப்பிடுங்கள்.கொள்ளு ரொம்ப சூடு பார்த்து சாபிடுங்கள் -------------------------------------------------------------------
பிஸி பேளா பாத் பொடி
தேவையான பொருட்கள் பொடி தயாரிக்க கொப்பரை தேஙகாய் துருவல் - இரண்டு கப் பொட்டு கடலை - முக்கால் கப் கடலை பருப்பு - முக்கால் கப் தனியா - முக்கால் கப் பெருங்காயம் - இரண்டு துண்டு காஞ்ச மிளகாய் - இருபது கிராம்பு - பத்து பட்டை - நான்கு இரன்டு அங்குல துண்டு வெந்தயம் - ஒரு தேக்கரண்டி கசகசா - ஒரு தேக்கரண்டி ஏலகாய் - பத்து செய்முறை அனைத்தையும் வருத்து பொடித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மாதத்திற்கு கெடாது. குறிப்பு: இதில் கச கசா, ஏலம் சில பேர் சேர்க்கமாட்டார்கள் தேவையில்லை என்றால் சேர்க்கவேண்டாம் ---------------------------------------------------------------
ஜலீலா'ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் கடலை பருப்பு - ஒரு டம்ளர் உளுத்தம் பருப்பு - ஒரு டம்ளர் காஞ்ச மிளகாய் - கால் கப் எள் - இரண்டு மேசை கரண்டி வருத்த வேர்கடலை - கால் கப் கருவேப்பிலை - கைக்கு ஒரு பிடி உப்பு - ஒரு தேக்கரண்டி பெருங்காய பொடி - கால் தேக்கரண்டி (அ) ஒரு சிறிய துண்டு செய்முறை முதலில் கடலை பருப்பு ,உலுத்தம் பருப்பு சிவற வருக்கனும். பிரகு காஞ்சமிளகாயை போட்டு வருக்கனும் இரு நிமிடம் வருத்தால் போதும். (இப்போது ஹச் ஹச் தும்மல வரும் தளிக்கா) பிறகு வேர்கடலை,எள் உப்பு, கருவேப்பிலை ஆய்ந்து கழிவு தண்ணீர்வடித்து தனியாக வானலியில் வதக்கி தண்ணிர் முழுவதும் வற்றியதும் கடலை பருப்பு கலவையுடன் சேர்த்து ஒரு முறை வருக்கனும். காலையில் செய்தால் அப்ப்டியே ஆறவிடனும். ஆறியதும் மிக்சியில் முதலில் மேலோடு உள்ள காஞ்ச மிளகாய் போட்டு கொஞ்ச பருப்பு போட்டு நல்ல திரிக்கனும், கொஞ்ச விட்டு விட்டு திரிக்கனும். பாதியை மையாகவும். பாதி பருப்பை கொர கொரப்பாகவும் திரித்து இரன்டையும் ஒன்றாக கலக்கனும். பிறகு சூடாக இருக்கும் நல்ல ஆறவிடனும். குறிப்பு: பிறகு நல்ல காய்ந்த டப்பாவில் போட்டு வைக்கவும். எத்தனை நாள் ஆனாலும் கொடாது எடுக்கும் போது ஈரக்கை போடக்கூடாது. --------------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி. ---------------------------------------------------------------------------
கரம் மசாலா பொடி
தேவையான பொருட்கள் பட்டை - ஐம்பது கிராம் லவங்கம் - இருபத்தைந்து கிராம் ஏலக்காய் - இருபத்தைந்து கிராமில் பாதி செய்முறை எல்லா வற்றையும் மிக்சியில் பொடித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். மட்டன் பிரை,சிக்கன் பிரை மற்றும் பல அயிட்டங்களுக்கு இதை கால் தேக்கரண்டி சேர்த்து கொண்டால் நல்ல வாசமாக இருக்கும். ----------------------------------------------------------------------
சத்துமாவு பொடி (குழந்தைகளுக்கு)
ஏர் உழும் விவசாயி வெரும் ஒரு கப் கேப்ப கஞ்சி குடித்துவிட்டு தான் நிலத்தை உழுகிறான். அவ்வளவு பெரிய நிலத்தை உழவே அது ஒரு சத்தான பாணமாக இருக்கு, ஆனால் நீங்கள் இதில் இத்தனை பொருள் சேர்ப்பதால் இன்னும் கூடுதல் தெம்பு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதை குடிக்கலாம்.வேலைக்கு போகிறவர்கள் இது நல்ல கட்டியா காய்ச்சி இரண்டு கப் குடித்து விட்டு போகலாம்.நல்ல பசி தாங்கும். தேவையான பொருட்கள் கேழ்வரகு - அரை கிலோ சம்பா கோதுமை - ஐம்பது கிராம் புழுங்கல் அரிசி - ஐம்பது கிராம் பாதம் - ஐம்பது கிராம் ஜவ்வரிசி - இருபத்தைந்து கிராம் உடைத்த கடலை - இருபத்தைந்து கிராம் செய்முறை கேழ்வரகு,கோதுமை,அரிசி,உடைத்த கடலை,ஜவ்வரிசி,எல்லாம் தனிதனியாக லேச கை பொருக்கும் அளவுக்கு வருத்து ஆறவைக்க வேண்டும். ஆறியதும் மிஷினில் கொடுத்து திரித்து மறுபடியும் ஆறவைத்து ஒரு நல்ல ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைக்கவேண்டும். குறிப்பு: டெய்லி ஒரு ஒரு மேசைகரண்டி எடுத்து ஒன்னறை கப் பால் + தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சி சக்கரை ஒரு சொட்டு நெய் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும் நல்ல சத்தான பாணம். இத்துடன் நீங்கள் வேறு ஏதும் சத்தான அயிட்டம் சேர்ப்பதாக இருந்தால் கூட சேர்க்கலாம் ---------------------------------------------------------------------- ரசப்பொடி (மிளகாய் இல்லாமல்) தேவையான பொருட்கள் 1. மிளகு - 100 கிராம் 2. சீரகம் - 100 கிராம் 3. தனியா - 6 தேக்கரண்டி 4. உளுந்து - 3 தேக்கரண்டி 5. கடலை பருப்பு - 3 தேக்கரண்டி செய்முறை அனைத்தையும் வெய்யிலில் காய வைத்து எடுக்கவும். கடாயில் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து எடுக்கவும். ஆர வைத்து ஈரம் இல்லாத மிக்ஸி ஜாடியில் போட்டு திரித்து வைக்கவும் ------------------------------------------------------------------------
புளியோதிரை கலவை
இந்த புளியோதரை கலவை ஆபிஸ் போகும் பெண்களுக்கு காலை நேர அவசரத்திற்கு மதியவேளை சாப்பாட்டுக்கு தயாரிக்க ஈஸி, வாரத்தில் ஒரு நாள் இந்த புளியோதரை ரைஸ் நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் கல் நீக்கிய எள்(கருப்பு) - 50 கிராம் உளுத்தம்பருப்பு - 50 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் வேர்கடலை - 50 கிராம் மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன் புளி - 3 எலுமிச்சைபழத்தின் அளவு[பழைய புளி உபயோகபடுத்தினால் நல்லது] கடுகு - 1டீஸ் ஸ்பூன் வெந்தயம் - 1டீஸ் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ் ஸ்பூன் நல்லமிளகு - 1 டீஸ் ஸ்பூன் (முழு மிளகு) பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் கறிவேப்பிலை - 3 கீற்று நல்லெண்ணெய் - 3/4 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எள், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து பொடிசெய்து வைக்கவும். வேர்கடலையையும் லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 கப் சுடுநீர் ஊற்றி ஊற வைக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், நல்லமிளகு, இவற்றை போட்டு தாளிக்கவும்,பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு கிண்டி, எள், உ.பருப்பு, க.பருப்பு பொடியினை போட்டு கிண்டி விடவும் அடுத்து வேர்கடலை, பெருங்காய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் தேவையான அளவு உப்பு இட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், பச்சை வாசம் போய் கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும். கலவை ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும் , தேவையான நேரம் சூடான சோற்றில் போட்டு கிளறி சாப்பிடவும். --------------------------------------------------------------------------------
இஞ்சி பூண்டு பேஸ்ட்
இது சமையல் காரர்கள் பிரியாணி மற்றும் பகாறா காணாவிற்கு மற்றும் பல இஸ்லாமிய அயிட்டங்களுக்கு செய்யும் போது அரைக்கும் இஞ்சி பூண்டின் அளவு தேவையான பொருட்கள் இஞ்சி - ஒரு கிலோ பூண்டு - அரை கிலோ எண்ணை (அ) வினிகர் (அ) உப்பு - ஒரு மேசை கரண்டி செய்முறை முதலில் பூண்டை ஒரு கவரில் போட்டு சுத்தி அல்லது சின குழவியால் இடித்து கொள்ளுங்கள்.பிறகு குப்பை கொட்டும் இடத்தில் வைத்து லேசா புடைத்தால் அவ்வளவு பூண்டு குப்பையும் அதில் போய் விடும் இல்லை என்றால் வீடு முழுவது பூண்டு குப்பைதான்.. இஞ்சி தோலை சீவி விட்டு பிறகு மண் போக கழுவி பிறகு பொடியாக வெட்டனும். பூண்டையும் அரிந்து கழுவி கொள்ளுங்கள். இப்போது இரண்டையும் கொஞ்ச கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைத்தெடுத்து அதில் உப்பு அல்லது வினிகர் அல்லது எண்ணை கலந்து (நல்ல கலக்கி)பாதியை ஒரு கண்டெயினரில் போட்டு பீரீஜரில் வைத்து விடுங்கள். பீரிஜரில் வைக்கும் போது முழுவது அடைத்து வைக்காதீர்கள்.வெடித்து வெளியே வந்துவிடும். மீதியை கிழே பிரிட்ஜில் வைத்து தினமும் தேவைக்கு பயன் படுத்தலாம். குறிப்பு: சில பேர் இஞ்சி பூண்டு உரிக்க சோம்பல் பட்டே நிறைய அயிட்டம் செய்யமட்டார்கள். இது டீவி பார்த்து கொண்டே செய்தால் சிரமம் இருக்காது உடனே கையை நல்ல சோப்பு போட்டு தேய்த்து கழுவி விடுங்கள் இல்லை என்றால் அவ்வளவு தான் ---------------------------------------------------------------
ரசப்பொடி
இது நான் திரிக்கும் ஸ்பெஷல் ரசப்பொடி. தேவையான பொருட்கள் தனியா - முன்று மேசை கரண்டி துவரம் பருப்பு - ஒரு மேசை கரண்டி மிளகு - ஒரு மேசை கரண்டி சீரகம் - இரண்டு மேசை கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி பெருக்காயம் - கால் தேகரண்டி (அ) ஒரு சிறிய துண்டு கருவேப்பிலை - கால் கைபிடி காஞ்ச மிளகாய் - நாலு செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெயிலி காய வைக்கனும் அதற்கு டைம் கிடையாது லேசா இரும்பு கிடாயில் வறத்து ஆற வைத்து விடுவேன். பிறகு காய்ந்த மிக்ஸியில் பர பரன்னு திரித்து வைத்து கொள்வேன். இது ஒரு சிறிய கண்டெய்ணரில் போட்டு வைத்தால் நாலைந்து முறை செய்ய வரும். இது கருவேப்பிலையையும் தேடி பிடிக்க தேவையில்லை. வெரும் நெய் கடுகு தாளித்து இதை போட்டு புளி தண்ணீ கரைத்து ஊற்றினால் போதுமானது. -----------------------------------------------------------------
திடீர் பூண்டு இட்லி பொடி
இட்லி பொடி இல்லாத நேரத்தில் இந்த பொடி நமக்கு கை கொடுக்கும். தேவையான பொருட்கள் பூண்டு - 10 பல் தோலுடன் காய்ந்த மிளகாய் - 5 உப்பு - 1 தே.கரண்டி செய்முறை பூண்டு , காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது பூண்டு பொடி ரெடி .இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ------------------------------------------------------------
கிட்ஸ் இட்லி பொடி
தேவையான பொருட்கள் பொட்டு கடலை ( ஓடைத்த் கடலை) - 1 கப் பூண்டு -3 பல் தோலுடன் உப்பு - 1/2 தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயம் தூள் - ¼ தே.கரண்டி செய்முறை தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் பொட்டு கடலை,பூண்டு,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் தூள் , உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான ,எளிதில் தயாரிக்க கூடிய கிட்ஸ் இட்லி பொடி ரெடி. இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். -------------------------------------------------------------
சாட் மாசாலா மிக்ஸ்
தேவையான பொருட்கள் கொத்தமல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன் சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் ஓமம் - 1 டீஸ் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 கரம் மசாலா - 2 டீஸ் ஸ்பூன் நல்லமிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன் ட்ரை மாங்காய் பவுடர் (ஆம்சூர்) - 1 டேபிள் ஸ்பூன் கல்உப்பு - 1 - 2 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1/2 டீஸ் ஸ்பூன் செய்முறை கொத்தமல்லி விதை, சோம்பு, ஓமம், காய்ந்தமிளகாய் இவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும் அதில் கல் உப்பையும் சேர்த்து பொடிக்கவும் கரம்மசாலாத்தூள், நல்லமிளகாய்த்தூள், ஆம்சூர் பொடி இவற்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து வினிகரையும் சேர்த்து அரைத்த பொடியுடன் சேர்க்கவும்.எல்லா பொடியினையும் கலந்து உப்புச் சரிப்பார்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும் ---------------------------------------------------------------------
மசாலா டீ பொடி
குளிர் காலத்துக்கு ஏற்ற டீ. தேவையான பொருட்கள் 1. மிளகு - 16 2. பட்டை - 1 இன்ச் 3. லவங்கம் - 4 4. ஏலக்காய் - 4 5. சுக்கு பொடி - 1 தேக்கரண்டி செய்முறை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைக்கவும். இதை காய்ந்த பாட்டில் ஒன்றில் போட்டு வைத்து கொண்டு, தேவையான போது வழக்கமாக டீ போடும்போது, டீ தூளோடு சேர்த்து இந்த தூள் 1/2 தேக்கரண்டி (அல்லது உங்கள் ருசிக்கு) சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். ------------------------------------------------------------
திடீர் இட்லி மிளகாய் பொடி
இது அவசரத்துக்கு கை குடுக்கும், மிகவும் வாசமாக, சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் 1. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 2. மல்லி தூள் - 1 தேக்கரண்டி 3. பூண்டு - 3 பல் 4. உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி 5. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 6. கறிவேப்பிலை - கொஞ்சம் 7. நல்லெண்ணெய் - 7 தேக்கரண்டி 8. உப்பு செய்முறை எண்ணெய் சிறிது விட்டு அதில் கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவக்க வறுத்து வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும். பின் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு கலந்து வைக்கவும். இதில் வறுத்த பருப்பு, பூண்டு, எண்ணெய் எல்லாம் கலந்தால் பொடி தயார். குறிப்பு: இது இட்லி, தோசை'கு பொருத்தமாக இருக்கும். ---------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கும் கண்ணிற்கும் மிகவும் நல்லது. இந்த அளவில் பொடித்தால் ஒருவாரம் வரை வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது புதிதாக பொடித்துக் கொண்டால் தான் வாசனையாக இருக்கும். தேவையான பொருட்கள் இளம் கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிது, எண்ணெய் - 1 தேக்கரண்டி, உப்பு - அரை தேக்கரண்டி. செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுத்து கொள்ளவும். அதே வாணலியில் மற்ற பொருட்களையும் வறுத்தெடுக்கவும். ஆறியதும், எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். குறிப்பு: இந்த பொடியை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும். --------------------------------------------------------------
குழம்புப் பொடி
மயிலாடுதுறை சிதம்பரம், கடலூர் பக்கங்களில் பொதுவாக இந்தப் பொடியை குழம்பில் உபயோகப்படுத்துவார்கள். சாம்பார், புளிக்குழம்பு என்று எல்லாவற்றுக்கும் இந்தப் பொடி தான். ஊருக்கு ஊர் பொருள்களின் விகிதங்கள் மாறுபட்டிருக்கும். தேவையான பொருட்கள் தனியா- ஒன்றரை கிலோ வற்றல் மிளகாய்- அரை கிலோ துவரம்பருப்பு- கால் கிலோ கடலைப் பருப்பு- 100 கிராம் மிளகு-50 கிராம் சீரகம்- 50 கிராம் வெந்தயம்- 1 மேசைக்கரண்டி அரிசி- 1 மேசைக்கரண்டி சோம்பு- 1 மேசைக்கரண்டி செய்முறை அனைத்துப்பொருள்களையும் தனித்தனியே பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும் -------------------------------------------------------------------------
ரசம் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் துவரம் பருப்பு - ½ கப் காய்ந்த மிளகாய் - 10 மிளகு - 15 சீரகம் - 1/4 கப் கருவேப்பில்லை - 10 இலை பெருங்காயம் தூள் - 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி வெந்தயம் - ½ தே.கரண்டி செய்முறை முதலில் தனியாவை கடாயில் போட்டு வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம் போட்டு தனி தனியாக வறுத்து எடுக்கவும். கருவேப்பில்லையை கழுவி பேப்பர் டவலில் காயவைத்து சுடாக உள்ள வறுத்து வைத்துள்ள பொருட்கள் மீது போடவும். இப்பொழுது மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சீரகம், வெருங்காயம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது ரசப்பொடி ரெடி. ரசம் வைக்கும் பொழுது இந்த பொடியினை கடைசியில் தூவி தட்டு போட்டு முடி அடுப்பினை நிறுத்தி விடவும். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். -------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி. ------------------------------------------------------------------------
கறிப் பொடி
தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் -------------------------------------------------------------------------------------
திடீர் சம்பார் பொடி
தேவையான பொருட்கள் தேவையானப் பொருட்கள் 1) காய்ந்த மிளகாய் - 25 2) தனியா - 1 கப் 3) வெந்தயம் - ஒரு மேசைகரண்டி 4) பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு செய்முறை ஒரு வெறும் வானலியில் காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், பெருங்காயம் வறுக்கவும். சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அறைக்கவும். இதை போட்டு சாம்பார் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். -------------------------------------------------------------------------
இன்ஸ்டன்ட் மசாலா டீ
வடிகட்டும் வேலை இல்லாமல், காபி போல் மசாலா டீ இன்ஸ்டன்ட் 'ஆ தயாரிக்க இது உதவும். தேவையான பொருட்கள் 1. பால் பவுடர் - 2 கப் 2. சர்க்கரை - 2 1/2 கப் 3. இன்ஸ்டன்ட் டீ தூள் - 1 1/2 கப் [Tetley or any other brand - Instant Tea Granules] 4. சுக்கு தூள் - 2 தேக்கரண்டி 5. பட்டை பொடி - 2 தேக்கரண்டி 6. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 7. ஜாதிக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி செய்முறை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது 1 மேஜைக்கரண்டி தூள், 100 (அ) 150 மில்லி கொதிக்கும் நீர் சேர்த்தால் டீ தயார். ஒரு கப் செய்து பார்த்து ருசிக்கு தகுந்த மாதிரி பால் பவுடர், சர்க்கரை அளவுகள் மாற்றவும். ---------------------------------------------------------
இட்லி பொடி (கருப்பு உளுத்தம் பருப்பு)
இந்த பொடி மிகவும் சுவையாக இருக்கும். தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பில் செய்வதால் சுவை அதிகம். தேவையான பொருட்கள் கருப்பு உளுத்தம் பருப்பு (தோலுடன்) - 1 கப் பெருங்காயம் - ½ தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 2 பல்( தோலுடன்) உப்பு - 1 தே.கரண்டி நல்லெண்ணெய் - 1/2 தே.கரண்டி செய்முறை முதலில் கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து தனியே வைக்கவும். அதன் பின் கொடுத்துள்ள 1/2 தே.கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். அனைத்து பொருட்களையும் ஆறவிடவும். பின்னர் மிக்ஸியிம் வறுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு அத்துடன் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து 30 விநாடி (Seconds) திரும்பவும் சேர்த்து அரைக்கவும். இப்பொழுது இட்லி பொடி ரெடி. இதனை நல்லெண்ணெய் உடன் கலந்து இட்லி , தோசையிற்கு கூட சாப்பிட சுவையாக இருக்கும். குறிப்பு: கடைசியில் பூண்டினை சேர்ப்பதால் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த பொடி 2 / 3 மாதங்கள் வரை கொடமால் இருக்கும். ------------------------------------------------------------
நோன்பு கஞ்சி பொடி
தேவையான பொருட்கள் சீரகம் - 50 கிராம் வெந்தயம் - 25 கிராம் சோம்பு - 25 கிராம் பட்டை -10 கிராம் கிராம்பு - 10 கிராம் ஏலக்காய் - 10 கிராம் செய்முறை மேற்கூறிய எல்லாப்பொருட்களையும் சுத்தம் செய்து காய வைத்து மிக்ஸியில் தூள் செய்து எடுக்கவும். ருசியையும் மணத்தையும் தரக்கூடிய நோன்பு கஞ்சிப்பொடி ரெடி.இப்படி திரித்து வைத்துக்கொண்டால் மாதம் முழுவதும் உபயோகிக்கலாம்.சீரகம் மற்றும் அனைத்து பொருட்களும் அரைப்பட்டு விடுவதால் கஞ்சி அருமையாக இருக்கும். குறிப்பு: கஞ்சி போடும் போது இந்த பொடியை நூறு கிராம் அரிசிக்கு 1 டீஸ்பூன் குவியலாக போடவும்.ஊறவைத்த பச்சரிசியுடன்,நான்கு அல்லது ஐந்து மடங்கு தண்ணீர் வைத்து கஞ்சிப்பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது பூண்டு,வெங்காயம்,தக்காளி ,மல்லி இலை,புதினா உப்பு போட்டு வேக வைக்கவும்.வெந்தபின்பு அரை தேங்காய் பால் எடுத்து அதனை சிறிது வெங்காயம் கருவேப்பிலை தாளித்து நுரை கூடி வரவும் சேர்த்தால் சிம்பிளான சுவையான கஞ்சி ரெடி.கொஞ்சம் ஸ்பெஷலாக கஞ்சி என்றால் சிறிது பாசிப்பருப்பு,கடலைபருப்பு,கொத்துக்கறி,கேரட் ,பச்சை பட்டாணி என்று விரும்பிய பொருட்க்களை சேர்த்தும் செய்யலாம். ---------------------------------------------------------------
சத்து மாவு பொடி
தேவையான பொருட்கள் 1. கேழ்வரகு - 250 கிராம் 2. கம்பு - 250 கிராம் 3. சோளம் - 200 கிராம் 4. மக்காச்சோளம் - 200 கிராம் 5. சம்பா கோதுமை - 10 கிராம் 6. பாசி பயிறு - 10 கிராம் 7. ஜவ்வரிசி - 10 கிராம் 8. வேர்கடலை - 10 கிராம் 9. முந்திரி - 10 கிராம் 10. பாதாம் - 10 கிராம் 11. பொரிகடலை - 10 கிராம் 12. சிகப்பரிசி - 10 கிராம் 13. ஏலக்காய் - 5 செய்முறை அனைத்தையும் தனி தனியாக வறுத்து ஆறவைக்கவும். பின் மிஷினில் கொடுத்து பொடியாக்கி ஆறவைத்து கொள்ளவும். இதை 100 மில்லி பாலுக்கு 1 மேஜைக்கரண்டி வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சலாம் --------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள் தனியா 3 கப் துவரம் பருப்பு ஒரு கப் சீரகம் அரை கப் மிளகு கால் கப் காய்ந்த மிளகாய் 10 செய்முறை முதலில் துவரம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மீதி உள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து போட்டு வறுத்த பிறகு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டால் கம கம ரசம் எளிதில் தயார் செய்துவிடலாம். -----------------------------------------------------------------
இட்லி பருப்புபொடி(குழந்தைக்கு)
தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு -1கப் கடலைபருப்பு -1/2கப் துவரம்பருப்பு -1/4கப் காய்ந்தமிளகாய் -3 கறிவேப்பிலை -சிறிது உப்பு -தேவையான அளவு பெருங்காயதூள் -1ஸ்பூன் எண்ணை -1ஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணை ஊற்றி மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வறுத்து அதிலேயே பருப்புகளை போட்டு பொன்னிரமாக வறுக்கவும். உப்பு,பெருங்காயதூள் சேர்த்து வறுத்து இறக்கி ஆறவிடவும். மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். தட்டில் இட்லியுடன் பொடியை வைத்து நல்லெண்ணை ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கவும். குறிப்பு: வறுக்கும்பொழுது அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும் ----------------------------------------------------------------------
ரசப்பொடி
இந்த அளவுப்படி அரைத்தால் இரண்டு பேருக்கு சுமார் இரண்டு மாதத்திற்கு வரும். தேவையான பொருட்கள் தனியா - 2 ஆழாக்கு (250 கிராம்), துவரம் பருப்பு - 1 ஆழாக்கு, கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் - 2 ஆழாக்கு, சீரகம் - கால் ஆழாக்கு, மிளகு - 1 ஆழாக்கு, காய்ந்த கறிவேப்பிலை - 1 ஆழாக்கு. செய்முறை எல்லா சாமான்களையும் வெய்யிலில் நன்கு காய வைத்து நறநறப்பாக அரைக்க வேண்டும். நைசாக அரைத்தால் ரசம் கொழகொழப்பாக போய்விடும் ----------------------------------------------------------------
எள்ளு பொடி
தேவையான பொருட்கள் எள் - 3 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிது, உப்பு - அரை தேக்கரண்டி. செய்முறை வெறும் வாணலியில் எள்ளை வறுத்தெடுத்து கொள்ளவும். சிறிது எண்ணெய் விட்டு, மற்ற பொருட்களையும் வறுத்தெடுக்கவும். ஆறியதும், எள் தவிர மற்றெல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். கடைசியாக எள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். -------------------------------------------------------------
வேர்க்கடலை பொடி
இந்த பொடியினை பொரியல் வகைகள் செய்யும் பொழுது கடைசியில் தூவி கிளற மிகவும் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் வேர்க்கடலை - 1 கப் காய்ந்த மிளகாய் - 6 உப்பு - ½ தே.கரண்டி செய்முறை வேர்க்கடலையினை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். அதன் பின் காய்ந்த மிளகாயினை போட்டு சிறிது வறுத்து வைக்கவும். வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவைக்கவும். வேர்க்கடலையின் தோலினை கையினால் தேய்த்தால் வந்துவிடும். வேர்க்கடலையின் தோலினை நீக்கிவிடவும். பின்னர் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இப்பொழுது வேர்க்கடலை பொடி ரெடி. ----------------------------------------------------
கறி மசாலா பேஸ்ட்
ரெடிமேடாக வாங்காமல் நாம் வீட்டிலேயே செய்து வைத்து உபயோகிக்கலாம்.அவசரத்திற்கு கொஞ்சம் போட்டால் நல்ல ருசியைத்தரும். தேவையான பொருட்கள் மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டேபிள்ஸ்பூன் ஒயிட் வினிகர் - 100 -150 மில்லி எண்ணெய் - 250 மில்லி (1 கப்) மல்லி விதை - 50 கிராம் சீரகம் - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன் கருவேப்பிலை - 2 இணுக்கு தண்ணீர் - 50 - 75 மில்லி செய்முறை முதலில் மல்லி,சீரகம்,சோம்பு,வெந்தயம்,கருவேப்பிலை லேசாக வெதுப்பி பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன்,மிளகாய்த்தூள்,மஞ்சல் தூல்,வினிகர்,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு பேனில் 200 மில்லி எண்ணெய் காயவைத்து தயார் செய்த கறி மசாலா பேஸ்ட்டை பொட்டு 10 நிமிடம் கிளரவும்.தண்ணீர் வற்றி எண்ணெய் தெளிந்து மேலே வரும்.இறக்கி ஆற வைக்கவும். சுத்தம் செய்த கண்ணாடி ஜாரில் காய்ந்த ஸ்பூனால் எடுத்து போட்டு வைக்கவும்.மீதி உள்ள 50 மில்லி எண்ணெயை காய வைத்து மசாலா உள்ள ஜாரில் விடவும்.இது விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க உதவும்.இப்படி செய்வதால் பூஞ்சனம் வைக்காது.ஒரு துளி கூட ஜாரில்,ஸ்பூனில் தண்ணீர் படாதவாறு உபயோகிக்க வேண்டும்.விருப்பப்பட்டால் உப்பு சேர்க்கலாம். சுலபமாக கறி மசாலா பேஸ்ட் வீட்டிலேயே ரெடி.இதனை குழம்பு,குருமா,கறி,மசாலா வகைகளுக்கு உபயோகிக்கலாம். குறிப்பு: தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்கலாம்.அவசரத்திற்கு மொத்தமாக போடுவதற்கு வசதியாக இருக்கும்.ஒரு மாறுதலுக்கு இப்படி செய்து வைத்து உபயோகிக்கலாம்.இது பேச்சுலர்ஸ்க்கு மிகவும் உதவியாக இருக்கும். ------------------------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள் இளசான கறிவேப்பிலை - 2 கப் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் புளி - சுண்டைக்காய் அளவு. உப்பு - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். -----------------------------------------------------------------------
சாம்பார் பொடி - 3
தேவையான பொருட்கள் தனியா - 3 ஆழாக்கு துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு மிளகு - ஒரு ஆழாக்கு கடலைப்பருப்பு - ஒரு ஆழாக்கு விரளி மஞ்சள் - 6 மிளகாய்வற்றல் - 5 வெந்தயம் - கால் ஆழாக்கு கடுகு - கால் ஆழாக்கு செய்முறை எல்லா சாமான்களையும் வெயிலில் தனித்தனியாக காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். காயவைத்த சாமான்களை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த வகை பொடி எல்லா விதமான சாம்பார் வகைகளுக்கும் பயன்படுத்தலாம் ---------------------------------------------------------------------
இட்லி மிளகாய்ப் பொடி - 2
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் - 100 கிராம் உளுத்தம் பருப்பு - 100 மில்லி கடலைப்பருப்பு - 100 மில்லி பெருங்காயம் - புளியாங்கெட்டை அளவு எள்ளு - ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைகேற்ப செய்முறை வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை வறுத்து எடுத்து விட்டு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது வாணலியில் எண்ணெய் விடாமல் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, எள்ளு முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் மிளகாய், பருப்பு வகைகளை முதலில் பொடித்து விட்டு இறுதியில் உப்பு கலந்து பொடித்து எடுக்கவும். கறிவேப்பிலையை வாணலியில் தண்ணீர் சுண்ட வறுத்துத் தூள் செய்து தேவையானால் கலந்து கொள்ளவும். ----------------------------------------------------------------------
சாம்பார் பொடி - 1
தேவையான பொருட்கள் குண்டு மிளகாய் - 1/4 கிலோ, தனியா - 3/4 கிலோ, சீரகம் - 100 கிராம், மிளகு - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், விரளி மஞ்சள் - 100 கிராம், பச்சரிசி - 50 கிராம், செய்முறை எல்லாவற்றையும் நன்றாக வெய்யிலில் காய வைத்து மெஷினில் நைசாக அரைக்கவும் ----------------------------------------------------------------------------
கறிவேப்பிலைப் பொடி - 1
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - 50 கிராம் உளுத்தம்பருப்பு - 20 கிராம் மிளகாய் வற்றல் - 10 எண்ணெய் - சிறிதளவு செய்முறை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் இவற்றினை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். மிக்ஸியில் முதலில் மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு இரண்டையும் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதனுடன் வறுத்த கறிவேப்பிலையைச் சேர்த்து பொடி செய்யவும். விருப்பம் உள்ளவர்கள் சிறிதளவு உப்பும், பெருங்காயப் பொடியும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். சூடான சாதத்திற்கு பொடியுடன் நல்லெண்ணெய்விட்டு சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும் -------------------------------------------------------------------------------
ரசப்பொடி - 1
தேவையான பொருட்கள் மிளகாய் - 100 கிராம் மல்லி விதை - 300 கிராம் மிளகு - 50 கிராம் சீரகம் - 50 கிராம் மஞ்சள் - 10 கிராம் துவரம் பருப்பு - 250 கிராம் செய்முறை வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்துக் கொள்ளவும். மிளகாயை தனியாக இடித்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். மற்ற பொருட்களை தனியாக இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும். பிறகு இரண்டையும் கலந்து தகுந்த ஜாடியில் அல்லது பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதனை ஒரு மாத காலத்திற்கு உபயோகப்படுத்தலாம். நாட்கள் அதிகமாக, மணமும் ருசியும் குறையும். -----------------------------------------------------------------------
கரம் மசாலா
தேவையான பொருட்கள் மிளகாய் - 200 கிராம் தனியா - 200 கிராம் சீரகம் - 100 கிராம் கிராம்பு - 25 கிராம் பட்டை - 5 கிராம் கசகசா - 200 கிராம் செய்முறை எல்லா சாமான்களையும் தனியாக வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். புலவு வகைகள், மசாலா கறிவகைகள் செய்யும் போது இதில் கொஞ்சம் சேர்த்தால் வாசனையாக இருக்கும். --------------------------------------------------------------------------------
கரம் மசாலாப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் - 400 மில்லி சோம்பு - 250 மில்லி மிளகு - 150 மில்லி பட்டை - 2 இஞ்ச் அளவுள்ள 7துண்டுகள் கிராம்பு - 80 பீஸ் ஏலக்காய் - 80 பீஸ் செய்முறை இவை அனைத்தையும் வெயிலில் சுமார் 1 மணி நேரம் காயவைத்து, பிறகு ஆலையில் கொடுத்து அரைத்து, சூடு ஆறியவுடன் காற்றுப் புகாத ஒரு பாட்டிலில்போட்டு மூடிவைத்துக்கொள்ளலாம். குறிப்பு: ஆலையில் அரைக்கும் வசதி கிடைக்காவிட்டால், ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு சூடேறும்வரை மட்டும் லேசாக வறுத்துவிட்டு, பிறகு ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கலாம்.ஆனால், நன்றாக மாவு போன்று பொடிபண்ணவேண்டும். -----------------------------------------------------------------------
சாம்பார் பொடி (4)
தேவையான பொருட்கள் வரமிளகாய் -அரை கிலோ மல்லி விதை -அறுநூற்றைம்பது கிராம் துவரம் பருப்பு - நூறு கிராம் கடலைப் பருப்பு - நூறு கிராம் வெந்தயம் - பத்து கிராம் மிளகு - பத்து கிராம் கட்டி பெருங்காயம் - இருபது கிராம் விரலி மஞ்சள் - இருபது கிராம் செய்முறை மஞ்சள், பெருங்கயத்தை சிறிய கட்டிகளாகத் தட்டி வைக்கவும். (பொடித்து விட வேண்டாம்) மிளகாயை காம்பு நீக்கி வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து முதலில் பெருங்காயத்தைப் போட்டு பொரியும் வரை வறுக்கவும். பிறகு அதிலேயே மஞ்சள், மிளகு, வெந்தயம், பருப்புகள் எல்லாவற்றையும் போட்டு நிறம் மாற ஆரம்பிக்கும் வரை வறுத்து இறக்கவும். (அதிகம் சிவக்க வேண்டாம்) மல்லியை இளம் சூட்டில் நான்கு நிமிடம் வறுக்கவும். மிள்காயைப் போட்டு இளம் சூட்டில் ஐந்து நிமிடம் வறுக்கவும். எல்லாவற்றையும் சூடு ஆறும்வரை ஆற வைத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும். குறிப்பு: பொடி அரைக்கும் முன்னும் பின்னும் சூடு ஆறும் வரை காய வைத்தால் போதுமானது. அதிக நேரம் பரப்பி ஆற வைத்தால் வாசனை கம்மியாக உள்ளது போல் இருக்கும். கட்டிப் பெருங்காயம் சாம்பார் பொடிக்கு மிகவும் உகந்தது. இந்தப் பொடி பெருங்காயம் சேர்ப்பதால் சாம்பர், வத்தல் குழம்பு, காரக் குழம்புகளுக்கு மட்டுமே பயன் படுத்த முடியும். பொதுவாக சாம்பார் செய்து இறக்கும் முன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவலுடன் கால் டீ ஸ்பூன் மல்லி விதை (பச்சையாக) சேர்த்து அரைத்து ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி கடுகு, உளுந்து, தட்டிய இரண்டு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து மேலே மல்லி இலை தூவி இறுக மூடி ஐந்து நிமிடம் கழித்து திறந்து உபயோகப் படுத்திப் பாருங்கள். சுவை அலாதியாக இருக்கும். --------------------------------------------------------------------
வேப்பம்பூ பொடி
தேவையான பொருட்கள் வேப்பம்பூ - ஒரு டம்ளர் மல்லிவிதை - அரை டம்ளர் மிளகு - ஒரு தேக்கரண்டி மிளகாய் - 4 பெருங்காயம் - பட்டாணி அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை வேப்பம்பூவை வெறும் வாணலியில் இட்டு, மிதமான சூட்டில் இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும். பிறகு மல்லிவிதை, மிளகு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றையும் போட்டு சிவக்க வறுக்கவும். இறக்குவதற்கு முன்பு கல் உப்பையும் சேர்த்து சிறிது வறுத்து இறக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளவும். சாதத்துடன் எண்ணெய் விட்டுக் கலந்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் --------------------------------------------------------------------------
கறிக்குழம்பு கரம்மசாலா
தேவையான பொருட்கள் கசகசா - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு மேஜைக்கரண்டி தனியா - இரண்டு மேஜைக்கரண்டி சோம்பு - இரண்டு தேக்கரண்டி கிராம்பு - 4 பட்டை - 4 செய்முறை இவையனைத்தையும் தனிதனியாக வறுத்து ஒன்றாக பொடித்துவைத்துகொள்ளவும். கறிக்குழம்பு செய்யும் போது கடைசியில் ஆறு பல் பூண்டை நசுக்கி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி இந்த கரம் மசாலா பொடியை சேர்த்து செய்தால் குழம்பின் வாசம் மற்றும் ருசி நன்றாக இருக்கும். --------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை (இட்லி) பொடி
இது இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானதும் கூட! தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - 40 கொத்து கடலைப்பருப்பு - 100 மில்லி தோல் நீக்கிய உலுந்து - 100 மில்லி காய்ந்த மிளகாய் - 15 எண்ணெய் - 100 மில்லி உப்பு - 2 ஸ்பூன் செய்முறை கடலைப்பருப்பு, உலுந்து இரண்டையும் தனித்தனியாக லேசான பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை சுத்தம் செய்து எண்ணெயில் நான்கைந்து கொத்துகளாக போட்டு பொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் காய்ந்த மிளகாயையும் தீயாமல் வறுத்தெடுக்கவும். அனைத்தையும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து காற்றுப்புகாத பாட்டிலில் போட்டுவைக்கவும். -------------------------------------------------------------------------
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள் வற்றல் - 200கிராம் கொத்தமல்லி - 50 கிராம் சீரகம் - 25 கிராம் உளுந்தம்பருப்பு - 10 கிராம் கடலை பருப்பு - 25 கிராம் துவரம் பருப்பு - 10 கிராம் புழுங்கல் அரிசி - 10 கிராம் மிளகு - 10 கிராம் வெந்தயம் - 1 தேக்கரண்டி காயம் - நெல்லிக்காய் கறிவேப்பிலை - ஒரு கொத்து மஞ்சள் - 2ஸ்பூன் உப்பு - 1 மேஜை கரண்டி செய்முறை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்னிரமாக வறுத்துமிசினில் அல்லது மிக்சியில் அரைத்து கொள்ளவும். குறிப்பு: சாம்பார் பொடியை குறைந்தது 5 மாதம் வரை உபயோகப்படுத்தலாம் ----------------------------------------------------------------------------
கரம் மசாலாப் பொடி
தேவையான பொருட்கள் கிராம்பு - 20 கிராம் பட்டை - 20 கிராம் ஏலம் - 20 கிராம் ஜாதிக்காய் - ஒன்று சீரகம் - 20 கிராம் மிளகு - 20 கிராம் தனியா - 40 கிராம் சுக்கு - 40 கிராம் செய்முறை இவையனைத்தையும் வெய்யிலில் காய வைத்து, பொடித்துக் கொள்ளவும் ------------------------------------------------------------------------------
சீரகப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் -- 100 கிராம் இஞ்சி -- 50 கிராம் எலுமிச்சம் பழம் -- 15 (அ) 20 ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது) சீனா கல்கண்டு -- 100 கிராம் செய்முறை இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்கவேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும். சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும். இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும். உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். குறிப்பு: வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும். --------------------------------------------------------------------------------

Monday, 17 March 2014

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..!



1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

Husband and wife2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர்.

9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது. நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

ஹோட்டல்ல சாப்பிடுவீங்களா..?



  வாரத்துக்கு ஒருநாளேனும் வெளியில் சென்று சாப்பிடும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது.குடும்பத்தில் இருவரும் வேலையில் இருப்பவர்கள் என்றால் எல்லா நாளும் சமைப்பது சிரமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.இன்னொன்று சுவைக்காக ஒரு சேஞ்சுக்காக சாப்பிடுவது.எப்படியோ இந்தப்பழக்கம் அதிகரித்து வருகிறது.

 நடுத்தரமான ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்த தந்தையிடம் அவரது குழந்தை " அப்பா கையெல்லாம் கருப்பாயிடுச்சி" என்றான் சாதாரணமாக! அப்பாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை."வீட்டில் போய் கழுவிக்கொள்ளலாம் வாடா" என்றார் .

 பையன் கையெல்லாம் கருப்பாக காரணம் அவன் துடைத்த நியுஸ் பேப்பர்.அதில் உள்ள ஆபத்து தந்தைக்கு தெரியவில்லை.கையில் உள்ள காரீயம் மூளை வளர்ச்சியிலிருந்து ,நரம்பு மண்டலம்,உடலியக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கடுமையாக பாதிக்கக்கூடியது.

 பெரும்பாலான உணவகங்களிலும் பழைய நியூஸ் பேப்பர்களை கையைத்துடைக்க கிழித்து வைத்திருக்கிறார்கள்.அதில் துடப்பவர்களே அதிகம்.சாப்பிட்டுவிட்டு கையை கழுவியவுடன் ஈரக்கையில் துடைப்பதால் வேதிப்பொருட்கள் உடலுக்கு செல்வதை தவிர்க்க முடியாது.

 உணவகங்களில் கையத்துடைக்கத்தான் என்றில்லை.சாலையோரங்களில் ,பலகார கடைகளில் வடை,பஜ்ஜி,போண்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் பழைய செய்தித்தாள்களையும், சஞ்சிகைகளையுமே பயன்படுத்துகிறார்கள்.எண்ணையுடன் சூடாக இருப்பதால் அதிக காரீயத்தை உறிஞ்சி நம் உடலுக்குள் சேர்க்கிறது.

 போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் இப்படி ஏராளமான பழக்கங்கள் நம்மிடம் இருக்கின்றன.கையைக்கழுவி விட்டு துடைக்காமல் உலர்த்துவதே சரியான முறை.

பொதுமக்கள் நலன் கருதி அச்சிட்ட தாள்களை உணவு வைத்து வழங்கவும்,கையைத்துடைக்க உணவகங்களில் வைக்கவும் சுகாதாரத்துறை தடை செய்ய வேண்டும்.பல்வேறு உடல் நல பிரச்சினைகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.

தற்போது மாம்பழ சீசன் .மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதை கண்டறிந்து டன் டன்னாக ஆங்காங்கே கொட்டி அழிக்கப்படுகிறது.விரைவாக பழுக்க வைத்து விற்று பணம் பார்ப்பதற்காக வியாபாரிகள் மக்கள் நலனை மறந்து விடுகிறார்கள்.

கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்கள் வயிற்றுப் பிரச்சினையை உடனடியாக கொண்டு வரும்.குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.பழங்கள் வாங்குபவர்கள் பழக்கப்பட்ட கடையிலேயே வாங்குவது நல்லது.

இயற்கையாக பழுத்த பழங்களில் சீராக மஞ்சள் நிறம் இருக்காது.பலத்தின் சில பகுதிகள் பச்சை நிறத்தில் இருக்கும்.கல் வைத்து பழுக்க வைத்தால் இயல்பான ருசி இருக்காது.தெரியாத இடத்தில் வாங்கினால் முடிந்தவரை தோலை தவிர்த்து விடவும்.

கணவன் மனைவி ஜோக் ஒன்று.மனைவி கேட்டார் ,"டியர் இன்று என்னுடைய பிறந்த நாள் !நான் இதுவரை பார்க்காத இடத்துக்கு என்னை அழைத்துச்செல்லுங்கள் "

கணவர்:வா டியர் நாம கிச்சனுக்கு போகலாம்.



Sunday, 16 March 2014

குலம் தழைக்க அருள்புரியும் சப்த கன்னியர் கோவில் - ஒரு சிறப்பு பார்வை..!



ஸ்தல வரலாறு:

நம் தமிழ் நாட்டுக் கிராமங்களில் விநாயகர் கோவிலும், மாரியம்மன் கோவிலும் நீக்கமற நிறைந்திருப்பது கண்கூடான நிஜம். திருச்சி திருவானைக்காவலை அடுத்த கீழகொண்டையான் பேட்டை (தலைகிராமம்) கீழ் விபூதி பிரகாரத்தில் அன்னை அருள்மிகு  மகா மாரியம்மன் என்ற திரு நாமத்தில் அருள்பாலிக்கிறாள்.

திருவானைக்காவல் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர்  கிழக்கே இந்த ஆலயம் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் முகப்பைத் தாண்டி மகா மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் அன்னை மகாமாரியம்மன் மூலவராய் அருள்பாலிக்கிறாள்.

கருவறையில் அன்னை நான்கு கரங்களுடன் சாந்த சொரூபியாய் அருள் பொழியும் இன்முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அழகே அழகு. அன்னையின் மேல் இரு கரங்களில் உடுக்கையும் வேலும் இருக்க, கீழ் இரு கரங்களில் குங்குமக் கிண்ணமும், கத்தியும் காட்சி  தருகின்றன. அன்னை பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள்.

ஆலயத் திருச்சுற்றில் தென் மேற்கில் தலவிருட்சமான வேம்பு தழைத் தோங்கி நிற்கிறது. தல விருட்சத்தின் அடியில் ராகு தன்  துனைவியுடன் நாகர்களும் அருள் பாலிக்கின்றனர். ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில், ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் தோஷத்தின் கடுமை குறைவதுடன், பெருமளவில் நிவர்த்தி பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இங்கு பெண்களின் கூட்டம் அதிகமாக இருப்பது இயற்கை. திருச்சுற்றின் வடமேற்கு திசையில் சப்த கன்னியார்களின் திருமேனிகள் உள்ளன. ஒரே கல்லில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திருமேனிகளைப் பார்க்கும் போது நாம் வியக்காமல் இருக்க முடியாது.

இந்த சப்த கன்னியார்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்கின்றனர் பக்தர்கள். நாடெங்கிலும் உள்ள பல நூறு குடும்பங்களுக்கு இந்த  சப்த கன்னியர்கள் குலதெய்வமாய் விளங்குகின்றனர். தங்களது குலதெய்வத்தை தரிசிக்க வரும் குடும்பத்தினர் சப்த கன்னியருக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து,  மலர்மாலை சூட்டி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

சப்த கன்னியருக்கு பிடித்தமானது விரலி மஞ்சள். எனவே, வரும் பக்தர்கள் விரலி மஞ்சளை அரைத்து எடுத்து வருகின்றனர்.  பின்னர், அந்த அரைத்த மஞ்சளை சப்த கன்னியருக்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த சப்த கன்னியர்கள் சன்னதியின் மேல்புறம் மூடப்படாமல் திறந்தே உள்ளது. மழையோ, வெய்யிலோ இவர்கள் மேல்படுவதை தவிர்க்க இலயாது.

திருச்சியில் உள்ள அன்னை வெக்காளி அம்மனைப் போலவே இங்கு இந்த சப்த கன்னியர்கள் கூரையின்றி மேலே திறந்த  நிலையில் அருள்பாலிப்பது போல் வேறெங்கும் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சப்தமி திதியில் சப்த கன்னியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

அன்று பக்தர்கள் நிறைய அளவில் வந்து  சப்த கன்னியரை தரிசித்து பயன்பெறுகின்றனர். மூலவரான அன்னை மகா மாரியம்மனின் காவல் தெய்வமான சங்கிலி ஆண்டவர் ஆலயத்தின் அருகேயே உள்ளார். அன்னை மகா மாரியம்மனுக்கு தினசரி இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.

ஆலயம் காலை 6 மணி முதல் 9 மணி வரையி லும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அன்னைக்கு ஆண்டுதோறும் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை திருவிழா நாளாகும். அதற்கு முந்தின புதன்கிழமை முகூர்த்த கால் நட்டு காப்பு  கட்டுவார்கள்.

அன்று நல்ல நாள், நல்ல நேரம் என்று எதையும் பார்ப்பதில்லை. சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பான பிறையில் ஆலயத்தில் யாகம் நடைபெறும். ஞாயிறு காலை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சுமார் 200 காவடிகள் ஆலயத்திலிருந்து புறப்படும், சங்கிலி ஆண்டவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, அவரிடம் உள்ள  வேல் மற்றும் அரிவாளை எடுத்துக்கொண்டு கொள்ளிடம் நதியை நோக்கிச் செல்வர். அங்கும் பலர் காத்திருப்பார்கள்.

பால் காவடி, அலகு காவடி, தீர்த்த காவடி, கட்டை காவடி, அக்னி சட்டி இவைகளுடன் சுமார்  300 பேர் கொள்ளிடத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் அன்னையின் ஆலயம் வந்து சேருவார்கள். அவர்கள் கொண்டு வரும் பாலால் அன்னைக்கு குளிரக் குளிர அபிஷேகம் செய்வார்கள்.

பின்னர் காவடி எடுத்த பக்தர்களுக்கும், கூடி நிற்கும் பக்தர்களுக்கும் அன்னதானமாக கேழ்வரகு கூழ் தருவார்கள். அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுமார் 150 பெண்கள் பங்குபெறும் இந்த பூந்தேர் முழுவதும் பூக்களாலேயே  அலங்கரிக்கப்பட்டிருக்கும், இத்தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து ஆலயம் சேர மறுநாள் காலை 9 மணி ஆகிவிடும்.

பின்னர் அன்னைக்கு பல திரவியங்களாலும், பழங்களாலும் அபிஷேகம் நடைபெறும். மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை விடையாற்றியுடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். பின்னர், அன்று மதியம் நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் பங்குபெற்று பயன் பெறுவர்.

புளிசாதம், தயிர் சாதம், கற்கண்டு பொங்கலுடன் அன்னதானம் அமர்க்களமாக நடைபெறும். வேண்டியதை அருளும் அன்னை மகாமாரியம்மனையும், குலம் தழைக்க அருள்புரியும் சப்த கன்னியரையும் தரிசிக்க ஒருமுறை  இந்த ஆலயம் வந்து போகலாமே!

Saturday, 15 March 2014

அடிக்கடி ஆர்கஸம் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது..!



இந்த தலைப்பு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும். இதில் கூட நன்மை உள்ளதா என்று கூட பலருக்கு தோன்றும். ஆனால் இதைப் பற்றி பலர் வெளிப்படையாக பேச வெட்கப்படுவோம். உண்மையில் நடப்பதைப் பற்றி வெளிப்படையாக மற்றவர்களிடம் பேச முடியாமல் போகலாம். ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.

பலருக்கு ஆர்கஸம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். ஆர்கஸம் என்பது பெண்கள் உறவில் உச்சக்கட்டத்தை அடைவதைத் தான் அப்படி சொல்வார்கள். சில பெண்கள் இத்தகைய ஆர்கஸத்தை அடைய கஷ்டப்படுவார்கள். அத்தகையவர்கள் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது. ஆனால் சிலரோ ஒருநாளைக்கு பலமுறை ஆர்கஸத்தை அடைவார்கள்.

இப்படி ஆர்கஸத்தை அடிக்கடி அடைவதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ என்று பலர் பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் ஆர்கஸத்தை அடைவது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எப்படியெனில் ஆர்கஸத்தை அடையும் போது மூளையில் இருந்து வெளிவரும் காதல் ஹார்மோனானது, உடல் மற்றும் மனதில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இங்கு ஆர்கஸத்தை அடைவதால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

ஆர்கஸத்தை அடைந்த பின்னர் நல்ல தூக்கம் வரும். எனவே பல நாட்கள் நல்ல தூக்கத்தைப் பெறாதவர்கள் ஆர்கஸத்தை அடையும் போது, எண்டோர்பின்கள் வெளிப்பட்டு, அது உடல் மற்றும் மூளையை அமைதி அடையச் செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆம், ஆர்கஸம் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். எப்படியெனில் ஆர்கஸத்தை அடையும் போது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் கெமிக்கலான DHEA வெளியிடப்படுவதோடு, அந்த கெமிக்கல் எலும்புகளை வலுவோடும் வைத்துக் கொள்ளும்.

கடுமையான தலைவலியால் அவஸ்தைப்படும் போது, ஆர்கஸத்தை அடைந்தால், அப்போது வெளிவரும் காதல் ஹார்மோன் ஆக்ஸிடோசின் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

பெண்கள் கொண்டு சோதிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் ஆர்கஸத்தை உணர்ந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு ஒன்றில், பெண்ணின் உடலில் ஆர்கஸத்தை அடையும் போது வாஸோபிரஸின் மற்றும் ஆக்ஸிடோசின் என்னும் இரண்டு ஹார்மோன்கள் வெளிவரும். அதிலும் வாரத்திற்கு இரண்டு முறை அடைந்தால், இந்த ஹார்மோன்கள் இரண்டும் பெண்களின் வாழ்நாளை நீட்டிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

டென்சனாக இருகும் போது, அதில் இருந்து முற்றிலும் வெளிவர ஆர்கஸம் உதவி புரியும். ஏனெனில் ஆர்கஸத்தின் போது வெளிவரும் ஹார்மோன்கள் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வதுடன், நரம்பு மண்டலத்தை அமைதி அடையச் செய்யும். எனவே டென்சனாக இருக்கும் போது உங்கள் துணையுடன் உறவு கொள்ளுங்கள். இதனால் டென்சன் நீங்குவது மட்டுமின்றி, புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

ஆம், சிலருக்கு உணவுகளின் மீது அளவுக்கு அதிகமான ஆசை இருக்கும். இதனால் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இத்தகைய ஆவலை ஆர்கஸம் கட்டுப்படுத்தும். ஏனெனில் இதனால் உடலில் வெளிவரும் கெமிக்கலானது எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் எண்ணத்தைத் தடுத்து, சரியான நேரத்தில் சரியான அளவில் சாப்பிட உதவி புரியும்.

பெண்களுக்கு எப்போதுமே பிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆகவே நன்கு பிட்டாகவும் சரியான உடல் எடையுடனும் இருக்க வேண்டுமானால், ஆர்கஸம் உதவி புரியும். மேலும் ஆய்வு ஒன்றில் வாரத்திற்கு இரண்டு முறை ஆர்கஸம் அடைந்தால் 1000 கலோரிகள் எரிக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதற்கு சமம் என்றும் ஆய்வில் சொல்லப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் இருக்க செய்ய வேண்டியவைகள்..!



இதுவரை சருமத்தை அழகாக பராமரித்து வந்த பெண்கள், கர்ப்பமாக இருக்கும் போது வருத்தப்படும் ஒன்று தான் வயிறு பெரிதாகும் போது ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவது.

பெண்களின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் தான் மிகவும் சந்தோஷமான ஒன்று. மேலும் எவ்வளவு தான் குழந்தையின் வளர்ச்சியை நினைக்கும் போது சந்தோஷம் இருந்தாலும், வயிற்றில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் பார்க்கும் போது சிறிது வருத்தமும் ஏற்படும்.

ஆனால் இப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் இருக்க, ஒருசில செயல்களை பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் ஆய்வு ஒன்றிலும், கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் தண்ணீர் அதிகம் குடித்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுப்போன்று நிறைய உள்ளன. இங்கு அவற்றில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க்குள் வராமல் தடுக்கலாம்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக அளவு தண்ணீர் குடித்து வந்தால், உடல் வறட்சி நீங்குவதுடன், சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம். ஏனெனில் சருமத்தில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருக்கும் போது, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் அதிகரிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான அளவு தண்ணீரை குடித்து வாருங்கள்.

சருமத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படும் போது, அரிப்புகள் ஏற்படும். அப்படி அரிப்புகள் ஏற்படும் போது, மறந்தும் சொறிய வேண்டாம். இதனால் கீறல்கள் ஏற்பட்டு தழும்புகள் ஏற்படுவதுடன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் தடுக்க தினமும் வயிற்றில் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். ஏனெனில் ஆலிவ் ஆயில் மசாஜ் ஸ்ட்ரெட்ச் மார்க்கை தடுக்க ஒரு சிறந்த வழியாகும்.

உடற்பயிற்சியை கர்ப்பிணிகள் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமத்தின் மீள்தன்மை அதிகரிக்கும். எனவே தினமும் லேசான உடற்பயிற்சியை செய்து வாருங்கள்.

ஆலிவ் ஆயில் போன்றே, வைட்டமின் ஈ சத்தும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்கும். இத்தகைய வைட்டமின் ஈ ஷியா வெண்ணெயில் அதிகம் உள்ளது. எனவே இவற்றைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து வந்தாலும், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வருவது தடுக்கப்படும்.

முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலமும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை தடுக்கலாம்.

கற்றாழையின் ஜெல்லின் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளது. ஆகவே இந்த கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க் வருவது போன்று உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

குறிப்பாக கர்ப்பிணிகள் தங்களது உடல் எடையை பராமரிக்க வேண்டும். எடை அதிகமாக இருந்தால், பிரசவம் கஷ்டமாக இருப்பதுடன், அதுவே அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை ஏற்படுத்தும்.

காதலர்களுக்கு ஏன் பசிக்க மாட்டேங்குது தெரியுமா...?



 முத்தத்தால் பசியின்மையை சரி செய்ய இயலும் என பிரிட்டிஷ் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

முத்தம் தொடர்பாக தொடர்ந்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி, முத்தம் என்பது அன்பை பரிமாற்றம் செய்ய மட்டுமல்ல, அதனால் வேறு பல நன்மைகளும் உடலுக்குக் கிடைக்கின்றன என விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

 இது தொடர்பாக பிரிட்டிஷ் மற்றும் கொரிய விஞ்ஞானிகள் 31 பசியின்மை நோயாளிகளிடம் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையின் முடிவாக முத்தம் உடலுக்குள் புதிய ரத்தத்தைப் பாய்ச்சி பசியின்மை நோயை போக்குவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். தங்கள் ஆய்வின் முடிவுகளாக விஞ்ஞானிகள் கூறியதாவது:-

முத்தம் முதலில் கொடுக்கும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும்.

ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஹார்மோன்கள் சுரக்கபட்டு அவர்களின் பசியை போக்கிவிடும்.

பசியால் பாதிக்கபட்டவர்களிடம் இது போன்ற ஆராய்ச்சியை நடத்திய போது அவர்களது பாதிப்படைந்த உறுப்புகளில் ரத்தம் பாய்ந்து பசியின்மையை போக்கி உள்ளது.

இது போன்ற ரசாயனங்களை வைத்து உணவை சரியாத உட்கொள்ளாதா நோயாளிகளை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவர்களை குணபடுத்தி விடலாம்.

அன்பு முத்தம் கொடுப்பதால் மனித மூளைக்கு நன்மை கிடைக்கிறது. அன்பு முத்ததால் கோபம் மறைகிறது மகிச்சியை அதிகரிக்கிறது. வெறுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

பிரிட்டிஷ் மற்றும் தென் கொரிய விஞ்ஞானிகள் உடல் உறவின் போதும், மற்றும் பிரவசத்தின் போதும் இந்த ஆக்சிடோசின் சோதனை மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது.

பசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வாயைக் கவனிங்க இல்லைனா...?



உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தால் நோய்கள் அண்டாது என்பதை, 'வாயைக் கட்டினால் வைத்தியமில்லை' என்பார்கள். மேலும் சில விஷயங்களிலும் வாயைக் கவனித்தால் நல்லது. அவை...

ஈறுகளில் ரத்தம் வடிதல் பாதிப்பு:

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கலாம். ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

என்ன செய்வது:

தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட 'மவுத் வாஷ்' கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் பாதிப்பு:

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமான மனஅழுத்தத்தாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் போலிக் ஆசிட்டின் குறைவு, இரும்புச்சத்து அல்லது வைட்டமின் தி பி 12-ன் குறைவாலும் இப்படி ஏற்படுகிறது.

என்ன செய்வது:

'மல்டி வைட்டமின்' மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் நோய் தொற்று குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது பாதிப்பு:

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக் கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த 'டீஹை டிரேஷன்' ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

என்ன செய்வது:

நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ, பழச்சாறோ அருந்துவதும் நல்ல பலன் தரும்.

திருமணமான தம்பதியர்கள் ஃபேஸ்புக்கில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியவைகள்..!



ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் மெய் மறக்கச் செய்கின்றன. உங்களுடைய இதயம் மறக்க இயலாத விஷயங்களை இந்த வலைத் தளங்களில் பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். தனியாக இருக்கும் போது இந்த விஷயங்களை செய்வதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லையென்றாலும், நீங்கள் ஒரு உறவுக்குள் வந்த பின்னர் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும். ஃபேஸ்புக்குகளில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் ஒரு மகிழ்ச்சியான இணையாக இருந்தாலோ மற்றும் காலம் முழுவதும் இவ்வாறே இணைந்திருக்க விரும்பினாலோ, இங்கே தரப்பட்டுள்ள குறிப்புகளை படித்து, பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

போலி அடையாளங்களை பயன்படுத்த வேண்டாம்

தங்களுடைய நண்பர்களுடைய பட்டியலை வைத்திருக்கும் உண்மையான கணக்கை ப்ரெஷ்சாகவும் மற்றும் சுத்தமாகவும் வைத்திருக்கும் பொருட்டாகவும், சில பேர் போலியான அடையாளங்களை கொண்டு கணக்குகளை தொடங்குவார்கள். இன்னும் சில பேர் தவறான காரணங்களுக்காக போலியான அடையாளம் கொண்ட கணக்குகளை பயன்படுத்துவார்கள். நீங்கள் இவ்வாறு போலி கணக்குகளை பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருந்தால், உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த வகை கணக்கை அழித்து விட்டு, உங்களுடைய துணைவருக்கு உண்மையானவராக நடந்து கொள்ளுங்கள். இந்த வகையான போலி அடையாளங்களை உங்களுடைய துணைவர் கண்டறிய மாட்டார் என்று நினைப்பது, நெடுநாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை.

சில நண்பர்கள் தேவையில்லை

உங்களுடைய இனிமையான மண வாழ்க்கை அல்லது உறவை தொந்தரவுக்குள்ளாக்கும் சில நண்பர்களை முகநூல் நட்பிலிருந்து வெளியேற்றுவது நல்லது. இந்த வகை நண்பர்களிடம் தொடர்பில் இருப்பதை விட, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கூட தொடர்பு கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுடைய ஆண் நணர்பகளாக இருந்தவர்கள், இப்போதைய மண வாழ்க்கையை சூறையாடும் பகைவர்களாக மாறி விட வாய்ப்புகள் உண்டு. இது ஒரு புத்திசாலித்தனமான அட்வைஸாக இருப்பதற்கு காரணம், பல கணவர்களும், மனைவிகளும் பிரிந்திருக்க காரணமாக இருப்பது வருத்தத்திற்குரிய இந்த வiயான நட்புகளே. ஆரம்பத்தில், நண்பருடனான பிரிவு உங்களை வருத்தினாலும், பின்நாட்களில் திருமண உறபை பாதுகாத்ததற்காக நீங்கள் பெருமைப்படுவீர்கள்.

இரகசியம் தேவையில்லை

ஆரோக்கியமான உறவு என்பது துணைவருடன் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வது தான். நீங்கள் வெகு விரையில் திருமணம் புரிந்து கொள்வீர்கள் என்றால், உங்களுக்கான அறிவுரை அதீதமாக இரகசியம் காக்க தேவையில்லை என்பது தான். நீங்கள் அளவுக்கு அதிகமாக இரகசியம் காத்து நின்றால், உங்களுடைய துணைவரிடம் இருந்து எதையோ மறைக்க முயலுகிறீர்கள் என்பதை அவரும் உணர்ந்து கொள்வார். எனவே, உங்களுக்கு 'ஓகே' என்றால் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கூட துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே போல, சில படங்கள் மற்றும் போஸ்ட்-களையும் உங்களுடைய துணைவரிடம் இருந்து மறைப்பதால், தேவையில்லாத சந்தேகங்களை வரவழைத்து, உறவை கெடுத்துக் கொள்வீர்கள். எனவே கவனம் தேவை இக்கனம்!

உறவில் நிலையை மறைக்க வேண்டாம்

 உங்களுடைய உறவில் நிலையை அனைவருக்கும் தெரியும் வகையில் நீங்கள் காட்டினால், அதாவது உங்களுடைய துணைவருடன் நிச்சயிக்கப்பட்டு விட்டீர்கள் அல்லது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக காட்டுவதால் நம்பிக்கை கூடுமே தவிர, வேறெந்த ஆபத்துகளும் வருவதில்லை. எனவே, நாம் ஏன் இதனை மறைக்க வேண்டும்? நம்முடைய உறவை வெளிப்படுத்தி, பெருமை கொள்வோம்!

உங்களுடைய படங்களை பதிவேற்றம் செய்தல்

 உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை ஃபேஸ்புக் முழுமையும் பதிவேற்றம் செய்யலாம் என்று நான் அட்வைஸ் கொடுக்க விரும்புகிறேன். எனினும், சில படங்களை இவ்வாறு போடுவதால் எந்தவித பிரச்னைகளும் வரப்போவதில்லை. இவ்வாறு பொதுவான தளங்களில் படங்களை போடுவதன் மூலம், அவருடன் நீங்கள் இருப்பதை விரும்புகிறீர்கள் என்றும், அதற்காக வெட்கப்படவில்லை என்றும் உலகுக்கும், துணைவருக்கும் உணர்த்திடவும் முடியும். எனினும், நெருக்கமான அல்லது தனிப்பட்ட படங்களை நீங்கள் பதிவிடும் போது கவனமாக இருக்கவும், பின் நாட்களில் உங்களுடைய துணைவரை தர்மசங்கடமான நிலைக்கு இந்த படங்கள் தள்ளி விடும். இவ்வாறு வித்தியாசமான படங்களை நீங்கள் பதிவிடும் முன்னர், துணைவருடன் ஒருமுறை கலந்து பேசி விடுவது நலம்.

உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்யுங்கள்

 ஃபேஸ்புக்கில் உள்ள 'டைம்லைன்' பகுதியை வழங்கிய காரணத்திற்காக மார்க் ஸுக்கர்பெர்க்-ற்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இந்த டைம்லைன் மூலம் உங்களுடைய துணைவர் உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அவராகவே அறிந்து கொள்வார். இந்த டைம்லைனில், உங்களுடைய முன்னாள் காதலர்கள், குறும்புத்தனமான கமெண்ட்கள் அல்லது முன்னாள் காதலருடன் எடுத்துக் கொண்ட சில வெளிப்படையான படங்கள் என பல விஷயங்களையும் காண முடியும். நீங்கள் மணம் செய்து கொள்ளப் போகும் நபர், இந்த படங்களையும், கமெண்ட்களையும் பார்க்க முடியும், இவ்வாறு பார்க்கும் பொது உறவுக்கு அழிவு தரும் என்று நினைக்கும் போஸ்ட்கள், கமெண்ட்கள் மற்றும் படங்களை உடனடியாக அழித்து உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்வது நல்லது. இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ஃபுரோபைல் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்று காட்ட வேண்டுமே தவிர, நீங்கள் யாராக இருந்தீர்கள் என்று காட்டத் தேவையில்லை.

கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!



கர்ப்ப காலத்தின் போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சோதனைகளை நீங்கள் செய்தாக வேண்டியிருக்கும். இவையனைத்தும் தாய் மற்றும் சேயின் நலனிற்காக செய்யப்படும் சோதனைகளாகும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்பது கர்ப்ப காலத்தில் முக்கிய அங்கமாக வகிக்கிறது.

பிறவிக்குறை, கர்ப்பகாலத்தின் போது சிசுவின் பிறழ்வான வளர்ச்சி, சிசுவின் இயல்பான உடல் வளர்ச்சி போன்றவைகளை கண்டறிந்து கண்காணிக்கவே இவ்வகை ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் இந்த 9 மாதத்தில் உங்கள் வயிற்றை குறைந்தது நான்கு முறையாவது ஸ்கேன் செய்ய வேண்டி வரும்.

இதனால் உங்கள் குழந்தையை, கருப்பு வெள்ளை நிழல் போன்ற உருவத்தில் திரையில் நீங்கள் கண்டு களிக்கவும் செய்யலாம். குழந்தையின் நலனை ஒரு அலாரம் போல் உங்களுக்கு காட்டவும் அல்ட்ரா சவுண்ட் உதவுகிறது.

கர்ப்ப காலத்தின் போது அல்ட்ரா சவுண்ட்டின் முக்கியத்துவம்: 

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு கட்டத்தில் எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், உங்கள் குழந்தையின் உடல்நலம் மற்றும் அதன் வளர்ச்சிகளை உங்களுக்கு எடுத்துரைக்கும். கர்ப்ப காலத்தின் போது கீழ்கூறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் செய்யப்படும்:

 வியபிளிடி ஸ்கேன் (Viability Scan) 

கர்ப்ப காலத்தின் 6 மற்றும் 10 ஆவது வாரத்தில் எடுக்கப்படும் இந்த ஸ்கேன், கர்ப்பத்தின் வளர்வீத முறை, குழந்தையின் இதய துடிப்பு மற்றும் தாயின் வயிற்றில் உள்ள சிசுவின் எண்ணிக்கையை கூறும்.

 நியூக்கல் ட்ரான்ஸ்லூசென்சி ஸ்கேன் (Nuchal Translucency Scan) 

கர்ப்ப காலத்தின் 12 ஆவது வாரத்தில் எடுக்கப்படும் இந்த ஸ்கேன் மூலம் சிசுவின் உடல்நலத்தை கண்டறியலாம். மேலும் ஏதேனும் க்ரோமோசல் பிறழ்வுகள் மற்றும் டவுன் சிண்ட்ரோம்களால் சிசு பாதிக்கப்பட்டிருந்தால் அதனையும் கண்டுபிடித்து விடலாம். சிசுவிற்கு ஏற்படும் பிரச்சனைகளை வெகு விரைவிலேயே கண்டு பிடித்து விடுவதால், அதனை குணப்படுத்தி விடலாம். இதனால் இது ஒரு முக்கியமான ஸ்கேனாக பார்க்கப்படுகிறது.

 அனாமலி ஸ்கேன் (Anomaly Scan)

 18 மற்றும் 20 ஆம் வாரத்தில் எடுக்கப்படும் இந்த ஸ்கேன், சிசுவின் உடல் கூறு மற்றும் நஞ்சுக்கொடியின் அமைப்பு போன்றவைகளை பற்றி விவரமாக தெரிவிக்கும். மூளை, முகம், முதுகெலும்பு, இதயம், வயிறு, கிட்னி, கை கால்கள் மற்றும் உடலின் இதர அங்கங்களின் வளர்ச்சியை பற்றிய விவரத்தையும் அளிக்கும். பனிக்குட நீரின் அளவை தெரிந்து கொள்ளவும் இது உதவும். குழந்தையின் வளர்ச்சி வேகத்தையும் தெரியப்படுத்தும்.

ஃபீடல் எக்கோகார்டியோகிராஃபி (Fetal Echocardiography)

 சிசுவின் இதயம் மற்றும் அதன் கலன்களை பற்றி விவரமான சோதித்தல் 20 மற்றும் 22 ஆம் வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கும். அனாமலி ஸ்கேனில் குழந்தையின் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை கண்டறியப்பட்டால், இந்த ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்படுவார்கள்.

 பீடல் வெல்பீயிங் (Fetal Wellbeing)

 28 முதல் 39 வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஸ்கேன் எடுக்கப்படும். இதன் பெயர் சொல்வதை போல், குழந்தையின் உடல் நலத்தை சோதிப்பதற்காகவே இந்த ஸ்கேன் எடுக்கப்படுகிறது. மேலும் சிசுவின் இருக்கை நிலையை தெரிந்து கொள்ளவும் இந்த ஸ்கேன் உதவி புரியும். கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் எப்படி எடுக்கப்படுகிறது? கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில், அனைத்து அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களும் வயிற்றுச் சுவர் வழியாக மட்டுமே எடுக்கப்படும். ஆனால் கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில், யானிவழியாக சோதனை மேற்கொள்ளப்படும்.

 வயிற்றுச் சுவர் வழியாக எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் (Transabdominal Ultrasounds)

 இவ்வகை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களில், ஜெல் போன்ற ஒன்றை உங்கள் வயிற்றின் மீது மருத்துவர் தடவுவார். பின் கையில் வைத்திருக்கும் ட்ரான்ஸ்ட்யூசர் கருவியை கொண்டு, வயிற்றில் மெதுவாக நகர்த்தி, குழந்தையின் அசைவுகளை கண்காணிக்கலாம். அங்கே வைக்கப்பட்டிருக்கும் திரையில், நடக்கும் அனைத்தையும் நீங்கள் காணலாம். இது உங்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தாததால் இவ்வகை ஸ்கேன்கள் மிகவும் பாதுகாப்பானதாகும்.

யானிவழி ஸ்கேன்கள் (Transvaginal Ultrasounds) 

இவ்வகை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களில், நீண்ட குறுகிய ட்ரான்ஸ்ட்யூசர் கருவி உங்கள் பெண்ணுறுப்பில் விடப்படும். பொதுவாக கருத்தடைஉறையால் இது மூடப்பட்டிருக்கும். மேலும் சுலபமாக உள்ளேற ஜெல் தடவ பட்டிருக்கும். இது அவ்வளவு சவுகரியத்தை கொடுப்பதில்லை. ஆனால் ஆரம்பகால குழந்தை மற்றும் அதன் வளர்ச்சியை இதுவே தெளிவாக காட்டும்.

ஸ்கேன் எடுப்பதற்கு எப்படி தயாராக வேண்டும்? 

1. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும் போது, உங்கள் வயிற்று பகுதியை சுலபமாக வெளிகாட்டும் விதமாக அமையும் லூசான ஆடைகளை அணியுங்கள்.

 2. போதுமான அளவிற்கு தண்ணீரை பருகுங்கள். அதனால் உங்கள் கருப்பையின் நீரால் நிறையும். நீர்ப்பை முழுவதுமாக நிறையும் போது, குழந்தையின் உருவம் தெளிவாக தெரியும்.

 3. யானிவழி அல்ட்ரா சவுண்ட் எடுப்பதற்கு நேரெதிரான வழிமுறையை பின்பற்ற வேண்டும். சோதனை மேஜையில் படுக்கும் போது அமைதியுருங்கள். ட்ரான்ஸ்ட்யூசர் கருவியை நுழைக்கும் போது வலி ஏற்படும். உடலின் கீழ் பகுதியை ரிலாக்ஸ் செய்து, கருவி உள்ளேறும் வரை திடமாக இருங்கள். உடலின் கீழ்பகுதியை இறுக்கமாக வைத்திருந்தால் உங்களுக்கும் மருத்துவருக்கும் தொந்தரவாக அமையும். ஆழமாக சுவாசிப்பதால் உங்கள் அசவுகரியம் சற்று குறையும்.

Friday, 14 March 2014

மாதவிடாயின் போது செய்யக்கூடிய 6 சிறந்த உடற்பயிற்சிகள்..!



மாதவிடாய் என்றாலே பெண்கள் முகம் சுழிக்கும் ஒரு காலமாகும். அப்படிப்பட்ட நேரத்தில் ஏற்படும் உடல் வலியும் இரத்த போக்கும் அவர்களை எரிச்சலடைய செய்யும். இதனால் பல பேர் இந்த நேரத்தில் உடலை வருத்தாமல் ஓய்வில் தான் இருப்பார்கள். ஆனால் வேலை செய்து பழக்கப்பட்ட பெண்களும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு இது இடையூறாக இருக்காதா? இருக்கும் என்று தான் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அப்படி இல்லை. இதை காரணமாக காட்டி, உங்கள் அன்றாட பழக்க வழக்கத்தை நீங்கள் தள்ளி போட தேவையில்லை. அதனால் உடற்பயிற்சியிலும் கூட ஈடுபடலாம்.

மாதவிடாயின் போது உடற்பயிற்சியில் ஈடுபடுவதை பற்றி, பல ஆய்வுகள், பல தகவல்களை அளித்துக் கொண்டு தான் வருகிறது. அது நன்மையை விளைவிக்கும் என்று சில ஆய்வுகள் கூறிய போதும், அது தீமையை விளைவிக்கும் என்று இன்னும் சில ஆய்வுகள் கூறுகிறது. அதனால் காயங்களும் உண்டாகும் என்றும் சில ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், மாதவிடாயின் போது, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய உண்மையான விதிமுறை ஒன்று மட்டும் தான்: உங்கள் மனது சொல்வதை கேளுங்கள்.

மாதவிடாயின் போது தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதை எதிர்க்கும் வல்லுனர்கள் கூட, நடை கொடுத்தால் ஆபத்து ஏற்படாது என்பதை ஒத்துக் கொண்டுள்ளனர். அதனால் சன்ஸ்க்ரீன் தடவிக் கொண்டு ரோட்டை நோக்கி நடக்கத் தொடங்குங்கள். வெறுமனே நடை கொடுத்தால் மட்டும் கலோரிகள் குறைவதில்லை. இருப்பினும் உடற்பயிற்சி செய்தோம் என்ற திருப்தியை பெறுவீர்கள். குறிப்பிட்ட அளவிலான கலோரிகள் குறைய வேண்டுமே என்று எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்.

உங்களுக்கு ஜாக்கிங் செய்ய வேண்டும் என்று தோன்றினால் ஓடுங்கள். தீவிர இதய பயிற்சியில் ஈடுபடும் போது உங்கள் உடலில் இருந்து எண்டார்ஃபின்ஸ் சுரக்கும். மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு இது தீர்வாக அமையும். ஓடுவதற்கு முன்பும் பின்னும் அதிகளவில் தண்ணீர் குடித்து நீர்ச்சத்துடன் இருங்கள். மாதவிடாய் காலத்தில் உங்கள் நீர்ச்சத்து எளிதில் குறைந்து விடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது உண்மையோ பொய்யோ, பாதுகாப்பாக இருப்பது நல்லது தானே. அதனால் தண்ணீர் குடியுங்கள்.

யோகா என்பது பல வகைகளை கொண்டுள்ளது. உங்கள் திறன் அளவிற்கு தோதாக அமையும் ஆசனங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மருத்துவ ரீதியாக ஆபத்து இல்லை என்றாலும் கூட, மாதவிடாய் காலத்தில் தலைகீழாக செய்யும் ஆசனங்களை தேர்ந்தெடுக்காதீர்கள். எளிய ஆசனங்கள் போதவில்லை என்றால், கடவுள் அமர்ந்திருக்கும் தோரனையை கொண்ட ஆசனங்களை நீங்கள் செய்யலாம்.

மாதவிடாயின் போது, சில நேரம் பைத்தியகாரத்தனமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். அதில் ஒன்று தான் ஏரோபிக்ஸ் பயிற்சியில் ஈடுபடுவது. அது உங்களை லேசாக வைத்திருக்கும். மேலும் ஏரோபிக்ஸ் வகுப்புகள் குறைந்த அழுத்தம் கொண்ட சுற்றுச் சூழலில் நடைபெறுவது கூடுதல் குஷியை ஏற்படுத்தும்.

நடனம் செய்வது பாரம்பரிய முறைப்படி உடற்பயிற்சி ஆகாது. ஆனால் உங்கள் இதயத் துடிப்பை அதிகரித்து கொஞ்சம் கலோரிகளை எரிக்கும். இது உடற்பயிற்சியை போல் இல்லாததால் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் நடனம் புரிவதற்கு கொஞ்சம் ஊக்கமும் உங்கள் மீது நம்பிக்கையும் இருந்தாலே போதுமானது. சாயந்திர வேளையிலே நடனம் புரிந்தால், உங்களை சந்தோஷத்தை அதிகரித்து மிகச் சிறந்த எண்ணத்தை உண்டாக்கும்.

மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருந்த படியே மனதுக்கு பிடித்த படங்களை பாருங்கள். தொலைகாட்சி பார்க்கும் நேரத்தில், விளம்பர இடைவேளைகளில், பலகையை போல் படுத்துக் கொள்ளுங்கள். தரையில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகள் மற்றும் முழங்கையை நெஞ்சின் கீழ் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலை முழங்கை மற்றும் பாதமுனையின் உதவியை கொண்டு உயர்த்திடுங்கள். இது சற்று தீவிரமான உடற்பயிற்சியே. ஒவ்வொரு விளம்பர இடைவேளையின் போதும் இதனை செய்திடுங்கள். அதே போல் விளம்பர இடைவேளை முடியும் வரையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள்.

உங்கள் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருக்க மாதவிடாயை ஒரு காரணமாக பயன்படுத்தாதீர்கள். இருப்பினும் உங்கள் உடல் சொல்வது கேளுங்கள். அது எவ்வளவு தூரம் ஒத்துழைப்பு தருகிறதோ அந்தளவு உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். மேற்கூறிய பயிற்சிகளை முயற்சி செய்து தான் பாருங்கள்.

 
நண்பேன்டா