Sunday 2 February 2014

சிலைகள் சொல்லும் சேதிகள்..!



சென்னை ஒரு பெரிய நகரமாக ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் உருவானது. ரயில், கப்பல் போக்குவரத்து ஏற்பட்டது. பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் வந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வாணிபம், தொழில், வேலை நிமித்தமாக மக்கள் குடிபெயர்ந்து வந்தார்கள்.ஆங்கிலேய அரசாங்கம், விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், கவர்னர் ஜெனரல் காரன் வாலீஸ், ராணுவ ஜெனரல் நீல் ஆகியோரின் சிலைகளை நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்தது. அப்படி வைக்கப்பட்டதன் நோக்கம், “ஆளும் பரம்பரையினரை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று பொதுமக்களிடம் சொல்வதுதான். அந்த அதிகார வர்க்கத்தினரின் சிலைகள் அரசின் பணத்திலும், அரச விசுவாசிகளான இந்தியர்களின் நன்கொடையிலும் உருவாக்கப்பட்டவையாகும்.

அவை, இங்கிலாந்தில் இருந்த மிகச்சிறந்த சிற்பிகளால் படாடோபமான தோரணையில் உருவாக்கப்பட்டவை. அவை சிலையாக இருப்பவர்களின் ஆத்மாவை பிரதிபலிப்பதை விடவும் கலைஞர்களின் கைவண்ணத்தாலேயே சிறப்புப் பெற்றவையாகும்.

காரன் வாலீஸ் இங்கிலாந்தின் தளபதியாக அமெரிக்கர்களை எதிர்த்து போரிட்டான். ஜார்ஜ் வாஷிங்டனிடம் தோற்றுப் போனான். இங்கிலாந்து திரும்பிய அவனை பத்தாண்டுகள் கழித்து இந்தியாவிற்கு முதல் கவர்னர் ஜெனரலாக அனுப்பி வைத்தார்கள். அவன் திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்தில் தோற்கடித்தான். பணத்திற்காக திப்புவின் இரண்டு மகன்களையும் பிடித்து வைத்துக் கொண்டான். அவன் சிலையில் திப்புவின் மகன்களை தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

1857ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களை ராணுவத்தளபதி ஜெனரல் நீல் பீரங்கி முன்னால் நிறுத்தி சுட்டுக் கொன்றான். இவர்கள் இருவருக்கும் சென்னையில் வைக்கப்பட்ருந்த சிலைகளை பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அகற்றப்பட்டு கோட்டை மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சிலை சர் தாமஸ் மன்றோவின் சிலை. அது முழுக்க முழுக்க பொதுமக்கள் நன்கொடையாக கொடுத்த பணத்திலிருந்து இங்கிலாந்தின் பிரான்சிஸ் லக்கெட் சாண்ட்ரி என்னும் சிற்பியால் உருவாக்கப்பட்டது.

சென்னை ராஜதானியின் கவர்னராக இருந்த தாமஸ் மன்றோ ஒரு தையற்கலைஞரின் பேரன். இவர் சென்னை ராஜதானியின் கவர்னராகி மக்கள் அன்புக்கு உரியவராக இருந்தார். ரயத்துவாரி என்ற நிலசீர்திருத்தம் செய்தார். அதனால் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் சுதேசி மக்களை சவுக்கால் அடிப்பதைப் பார்த்த மன்றோ “யார் உங்களுக்கு இந்த உரிமையைக் கொடுத்தது’ என்று கண்டித்தார். காலரா நோயால் பாதிக்கப்பட்டு 1827இல் இறந்துபோன சர் தாமஸ் மன்றோ, சேனம் இல்லாத குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். 1839ஆம் ஆண்டில் இந்த சிலை வைக்கப்பட்டது.

உயர்ந்தவர்களுக்கு சிலை வைத்து சிறப்பு செய்வது நெடுங்காலமாகவே மக்கள் மரபாக இருக்கிறது. அது ஒரு பண்பாட்டுச் செயல். தங்கள் நாட்டையும், தங்கள் முன்னோர்களையும் நிலைநாட்டும் முறை. அதன் வழியாக தங்களை பெருமைப்படுத்திக் கொள்வது.

கிரேக்க, ரோமானிய, எகிப்து நாடுகளில், கடவுள்களுக்குச் சிலை வைத்ததுபோலவே மன்னர்கள், தத்துவ ஞானிகளுக்கும் சிலை வைத்திருக்கிறார்கள். அங்கு நல்லவர்களுக்கு மட்டுமல்ல கெட்டவர்களுக்கும் சிலை இருக்கிறது. சில சிலைகள் ஆட்சியாளர்களே வைத்துக் கொண்டவை.

தமிழர்கள் நெடுங்காலமாகவே சிலைகள் செய்து வைக்கும் மரபைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கோர் எடுத்துக்காட்டு நடுகல். ஊருக்குள் புலி போன்ற விலங்குகள் புகுந்து விட்டால் அவற்றை எதிர்த்து உயிர் துறந்த வீரனுக்கும் மற்றும் அரசனின் போர்ப் படையில் சேர்ந்து எதிரிகளோடு போரிட்டு உயிர் நீத்த வீரனுக்கும் ஊருக்குள் நடுகல் நட்டார்கள்.

நடுகல்லில் அவன் பெயரும், பீடும் பெருமையும் எழுதி மயிற்தோகை சாற்றி, நறுமண புகை கமழச் செய்து வழிபட்டார்கள் என்று தமிழ்ப் பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெளியூர்களில் இருந்து புதிதாக ஊருக்குள் வருபவர்கள், நடுகல்லாக நிற்கும் வீரனைப் பார்த்து ஐயன் யாரென வினவினார்கள். ஐயன் யார் என்பதே காலப்போக்கில் ஐயனாராகி விட்டது. காக்கும் கடவுளாக ஊரின் எல்லையில் இமைக்காத விழிகளோடும், கரத்தில் பிடித்த கத்தியோடும் இருக்கிறார். இரவில் புரவி மீதேறி வேட்டை நாய் பின் தொடர விடியுமளவு சுற்றிச் சுற்றி வந்து கெட்ட ஆவிகளிடம் இருந்து மக்களைக் காக்கிறார் என்பது ஐதீகம்.

கலையென்பதே ஐதீகமும் நம்பிக்கையும்தான். காக்கும் கடவுளைப் போற்றிக் கொண்டாடுவது போல, உழைக்கும் மக்களை, தொழிலாளிகளை போற்றுவதும் மரபாகவே இருந்து வந்திருக்கிறது. தொழிலாளி என்றால் அறிவும் ஆற்றலும் கொண்டவன். சிறிதும், பெரிதுமான பல கருவிகளைச் செய்து, அவற்றைக் கொண்டு மனித சமூகத்தையே முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவன். அவன் ஆற்றலையும் அதனைப் பயன்படுத்துவதையும் சொல்லும் சிற்பமாக சென்னை கடற்கரையில் இருப்பதுதான் உழைப்பாளர் சிலை. நான்கு தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு பெரும் பாறையை நெம்புகோல் கொண்டு உருட்டிக் கொண்டு போவதுதான் அச்சிலை.

இந்தியாவின் முதல் ஓவிய சிற்பக் கல்லூரியான சென்னை கவின் கலைக்கல்லூரி முதல்வராக, இருபத்தைந்து ஆண்டுகள் இருந்த தேவிபிரசாத் ராய் சௌத்ரியின் கலைப்படைப்பு இந்த உழைப்பாளர் சிலை.

அவரின் மற்றொரு படைப்பு கடற்கரை சாலையில் உள்ள, கையில் பிடித்தத் தடியைத் தரையில் ஊன்றி வேகமாக நடந்து செல்லும் மகாத்மா காந்தியின் சிலை. அந்த சிலை காந்தி மாதிரியே இல்லையென்று அப்போது சிலர் புகார் சொன்னார்கள். பொது இடங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் ஒருவருடைய சிலை அல்லது சிற்பம் அச்சு அசலாக அவரைப்போன்றே முகபாவனையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

ஒரு கலைஞன் படைப்பில் ஆத்மாதான் முக்கியம். சம்பந்தப்பட்டவரின் ஒரு சாயல் வந்தால் போதும். காந்தி எப்பொழுதும் வேகமாக நடப்பவர். அந்த நடையையே காந்தியின் குறியீடாக சிற்பி ராய் சௌத்ரி படைத்துள்ளார்.

பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகள் என்பவை, ஒரு நாட்டின் கலைமரபு, படைப்பாற்றல், தொழில் திறன் போன்ற பலவற்றையும் ஒன்று சேர்த்து கொண்டிருக்கின்றன. அவை அவ்வாறு படைக்கப்பட்டதால், மனிதர்களை பிரமிக்க வைக்கின்றன. “இது மனிதர் படைத்ததுதானா’ என்ற கேள்வியையும் கேட்க வைக்கின்றன.

அவ்வகை சிற்பங்களில் முதலில் இருப்பது, ஒன்பதாம் நூற்றாண்டில் ஐம்பொன்களில் தமிழர்கள் வடித்தெடுத்த ஆடல் வல்லானின் சிற்பம். திருவாலங்காட்டில் ஆடிய ஆடல்வல்லான் என்னும் நடராஜர் கலைப் படைப்பின் உச்சமாகி, வரவேற்பு அறைகளில் முதன்மை இடத்தைப் பெற்றுவிட்டார்.

உயர்ந்தப் படைப்பென்று குறிப்பிட வேண்டிய இன்னொரு படைப்பு அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி. ஒரு பெண்ணின் பூரண அழகும் அமைதியும் கொண்டு மிளிரும் சிற்பம் அது. உலகம் முழுவதற்கும் புத்தொளி வீசுகிறது. பிரஞ்சு நாட்டுப் படைப்பென்றாலும் மனித சமூகம் முழுவதையும் அது வசீகரித்துக் கொண்டிருக்கிறது.

பொது இடங்களில் சிலைகள், சிற்பங்கள் வைப்பது கூடிக்கொண்டே வருகிறது. சர்வாதிகாரிகளில் சிலர் தங்களுக்குப் பெரிய சிலைகள் செய்து முக்கிய இடங்களில் வைத்துக் கொள்கிறார்கள்.

சிலர், தங்களை முன்னேற்றியவர்களுக்கும்கூட சிறியதாக சிலை செய்து வைக்கிறார்கள். ஆனால் அவை கலைப்படைப்புகளாக இல்லாமல் வெறும் உருவ பொம்மைகளாகவே இருக்கின்றன. ஆனாலும் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவர்களின் ஆட்சி மறைந்ததும் அவர்களின் பொம்மைகள் அவசர அவசரமாக அகற்றப்படுகின்றன. சில சிலைகள் உடைத்து நொறுக்கப்படுகின்றன. அது மக்களின் கோபம் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு.

மக்களுக்குப் பிடித்தமான தத்துவ ஞானிகள், சீர்திருத்த செம்மல்கள், கவிஞர்கள், கலைஞர்கள் போன்றோரின் சிலைகள் மதிக்கப்படுகின்றன. சமூகம் எப்படி இருந்தாலும், மக்கள் தங்களின் அசலான சகோதரர்களை, முன்னோடிகளை அறிந்து கொண்டு அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.

தமிழ் மட்டுமே அறிந்த உ.வே. சாமிநாதையர் அவர்களில் ஒருவர். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரின் சீர்மிகுந்த சிலைக்கு ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாளன்று பலரும் வந்து வணக்கம் செலுத்துகிறார்கள்.

சென்னை மெரீனா கடற்கரையில் திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஒளவையார் போன்ற பெருங்கவிஞர்கள் சிலைகளாக நிற்கிறார்கள். அவர்களைக் கண்டு பெருமிதம் கொண்ட புகழ் பெற்ற மலையாள கவிஞர் கே. சச்சிதானந்தன், “என் ஆதி கவிஞகளே’ என்று தொடங்கும் சிறந்த கவிதையொன்றை எழுதி இருக்கிறார்.

நிகழ்காலம், நகரங்களின் சந்தடி மிகுந்த இடங்களில் சிலைகள் வைக்கும் காலமாக மாறி வருகிறது. சிலர் பெரிய சிலை வைக்க, கோடிகணக்கான ரூபாய் செலவிட தயாராக இருக்கிறார்கள். அது தங்களின் இருப்பை நிலை நிலைநாட்டுமென்றும் பெருமைகளையும் சிறப்புக்களையும் பேசுமென்றும் கருதுகிறார்கள்.

ஆனால் சரித்திரம் கருணையற்றது. அவை போன்ற சிலைகள் புறக்கணிக்கப்பட்டு, அசலானவர்களுக்கு வைக்கப்படும் சிலை – அது அளவில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும்கூட மக்களால் ஏற்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும்; வருகிறது.

மாடுகளை திருட முயன்ற 4 பேர் தீ வைத்து எரிப்பு..!



கால்நடைகளை திருடமுயன்றதாக கருதி 4 பேரை கட்டிவைத்து கிராம மக்கள் உயிருடன் எரித்துக் கொன்ற நிகழ்வு மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் ஜால்பைகுரியில் மாடுகளை திருட முயன்றதாக கூறி நான்கு பேரை கிராம மக்கள் இன்று காலை பிடித்துள்ளனர். பின்னர் கடுமையாக தாக்கி அவர்களை கட்டி வைத்து உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர். இறந்த உடல்கள் அடையாளம் காணமுடியாத கருகிவிட்டன.

பாலராம் என்ற இடத்தில் இன்று காலை 3 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா- வங்காளதேசம் எல்லையில் உள்ள இந்த கிராமத்தில் ஏற்கனவே கால்நடைகள் திருடப்படுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


பட்டதாரிகளில் 34% மட்டுமே தகுதியானவர்கள்! – அதிர வைக்கும் ஆய்வு முடிவு..!

பட்டதாரிகளில் 34 சதவீதத்தினர் மட்டுமே பணிக்கு தகுதியானவர்கள்! – அதிர வைக்கும் ஆய்வு முடிவு..!


பட்டதாரிகளில் 34 சதவீதத்தினர் மட்டுமே பணியில் அமர்த்த தகுதி படைத்தவர்களாக உள்ளனர் என்பது அண்மைக் கால ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரு லட்சம் மாணவ–மாணவியரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஆண்களை விட பெண்கள் அதிக தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆன்லைன் மதிப்பீட்டு நிறுவனமான வீபாக்ஸ், 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாணவ–மாணவிகளிடம் கணித–ஆங்கில அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் இணையதள அறிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அவர்களுடைய பணியில் அமரும் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல சுவாரஸ்யமான முடிவுகள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, ஆந்திர பிரதேசம், அரியானா, கர்நாடகா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு பட்டதாரிகள் வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் நாகாலாந்து, மேகாலயா, ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் பின்தங்கியுள்ளன.


ராஜஸ்தான், ஆந்திரா, அரியானா, உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் கல்வியைப் பொறுத்தவரை அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்களை அதிகம் கொண்ட மாநிலங்களில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒன்றாக உள்ளது

அப்பா மாதிரியா நான்?




1. நம்ம அப்பாவெல்லாம் பெல்ஸ் பேன்ட்டும், கட்டம் போட்ட சட்டையும் தான் அதிகம் அணிந்தார்கள். நாம் ஜீன்சும் டீ ஷர்ட்டும் தான் அதிகம் அணிகிறோம்.

2. நம்ம அப்பாவெல்லாம் சீப்பை வைத்து தான் தலை வாரினார்கள். நமக்கு கைகளை சீப்பாக்கி தலைவாரினால் தான் பிடிக்கும்.

3. நம்ம அப்பாவெல்லாம் மீசையை வீரத்தின் அடையாளமாகப் பார்த்தார்கள். நாம் வயதின் அடையாளமாகப் பார்க்கிறோம். மீசை பெரிதாய் இருந்தால் வயதானது போல் தெரியும் என்று அடிக்கடி ட்ரிம் செய்து விடுவோம்.

4. நம்ம அப்பாவெல்லாம் மாதம் ஒரு முறை தலைமுடியை சுத்தமாக ஒட்ட வெட்டிவிடுவார்கள். நாம் மாதம் இருமுறை வெட்டினாலும் பட்டும் படாமல் தான் வெட்டுவோம்.இல்லைன்னா கடைக்காரரிடம் சண்டைக்கு போவோம்.

5. நம்ம அப்பாவெல்லாம் டிவிஎஸ் எக்ஸ்செல் வண்டிதான் ஓட்டினார்கள். நாம இப்ப அதையெல்லாம் வண்டியாகவே ஒற்றுக்கொள்ள மாட்டோம்.

6. நம்ம அப்பாவெல்லாம் முக்கியமான செய்தியை நேர்ல பாத்து தான் பேசுவாங்க. நாம எவ்ளோ பெரிய செய்தியையும் சின்னோண்டு சம்ஸ் ல முடிச்சுருவோம்.

7. நம்ம அப்பாவெல்லாம் அவங்க அப்பாகிட்ட வெளிய போறப்ப சொல்லிட்டு தான் போவாங்க. நாம போயிட்டு வந்துக் கூட சொல்ல மாட்டோம் எங்க போனோம்ன்னு.

8. நம்ம அப்பாவெல்லாம் கஞ்சிக்கே கஷ்டம்னாலும் கடன் வாங்க யோசிப்பாங்க.நாம கடன் வாங்கி கார் ரே வாங்குவோம்.

தற்கொலையும், அதன் விளைவுகளும்..!


கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற ஒருவர் தான் புரிந்த கொலையின் பயங்கரத்தையும், தான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையின் பின் தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து, அவை திரும்பத்திரும்ப நிகழ்வது போன்ற கற்பனையில் ஈடுபட்டிருந்து கொண்டு அதே துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெரும் தீவிபத்தில் உயிர்நீத்த பெண்மணியொருவர், இறந்து ஐந்து நாட்களின் பின்னரும் தீயின் கோரப்பிடியில் தான் சிக்குண்டதையும் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தான்பட்ட அவஸ்தைகளையும் திரும்பத் திரும்ப மனக்கண்முன் நிறுத்தி அவை மறுபடியும் மறுபடியும் நிகழ்வது போன்ற மனப்பிரமையில் இருக்கக் காணப்பட்டார் என்று கூறப்படுகின்றது.

தனது குழந்தையை மார்போடு அணைத்துப் பால் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் தூய உள்ளம் படைத்த பெண்மணியொருவர், கடலில் ஆழ்ந்து போன கப்பலின் அடித்தளத்தில் இருந்தவாறு சடுதியாக மூழ்கிப்போனார். இறந்தபின் அவர் தன் கணவனையும் குழந்தைகளையும் பற்றிய இன்ப நினைவுகளுடன் அமைதியாக உறங்குவது போன்ற உணர்வு நிலையில் இருக்கக் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இங்கு வாழ்ந்தபொழுது தொழில்துறைகள், சமூகத் தொடர்புகள், குடும்ப உறவுகள் ஆகிய காரியங்களில் மிதமிஞ்சிய ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் சடுதி மரணம் அடைந்தவுடன் இத்தொடர்புகளை அறுத்துக் கொள்ள முடியாது தவிப்புடன் காணப்படுவர்.

மறு உலகத் தொண்டர்களின் என்னதான் இவர்களைச் சாந்தப்படுத்த முயன்றாலும் அநேகர் நிம்மதியற்ற நிலையிலேயே சிலகாலம் இருந்துகொண்டிருப்பர். பின்னர் மெது மெதுவாக இந்த நிலையிலிருந்து விடுபட்டு காமலோகத்தில் ஏனையோர் போன்று சஞ்சரிக்க ஆரம்பிப்பர்.

இவ்வுலகில் கொடிய பாவமான காரியங்களைப் புரிந்து கொண்டிருந்த கீழ்த்தர மனிதர்கள், சடுதி மரணமடைந்தவுடன் எதிர்கொள்ளும் நிலை மிகப் பரிதாபத்துக்குரியது. இம்மனிதர்கள் இறந்தபின் தமது கீழ்த்தர ஆசைகளையும், பாவச்செயல்களையும் தொடருவதற்கு இயலாத அங்கலாய்ப்பில் அதே செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டு பூவுலகில் வாழ்பவர்களை “பிசாசு”களாக பின்தொடர்ந்து (Obsession) அவர்களை மேலும் மேலும் பாவகாரியங்களைச் புரிவதற்கு ஊக்குவித்து அவர்கள் சீரழிவதைப் பார்த்து (Vicarious Gratification) திருப்தியுறுவர்.

மதுபானச்சாலைகளிலும், இறைச்சிக் கடைகளிலும் “வேள்வி” என்ற பெயரில் ஆடுகள்,கோழிகள், பலியிடப்படும் இடங்களிலும், விபசார விடுதிகளிலும், கொலைஞர்கள் கொள்ளையர்கள் மத்தியிலும் இவைகள் தமது ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக சுற்றித்திரிவதை சித்த புருஷர்கள் கண்டு உரைத்திருக்கிறார்கள். குடிப்பவர்கள் பெருங்குடிகாரர்கள் ஆவதற்கும், கொலை செய்தவர்கள் மேலும் மேலும் கொலைபுரிவதற்கும் கெட்ட ஆவிகளால் பீடிக்கப்படுவதும் ஒரு காரணமாகின்றது.

சுயநலம் காரணமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொள்பவர்கள் மிகப் பரிதாபத்துக்குரியவர்கள். ஒரு துன்பத்துக்கு முடிவுகட்டுவதாக நினைத்துக் கொண்டு தற்கொலையில் இறங்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதன் விளைவாக மறு உலகில் அனுபவிக்கும் துன்பமோ அதைவிடக் கொடுமையானது.

எந்தத் துன்பத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைத்து தற்கொலை புரிந்தாரோ அதேதுன்பம் அவரது சிந்தனையில் விஸ்வரூபம் பெற்று சொல்லொண்ணாத் துயரத்தைக் கொடுக்கும். தாங்கமுடியாத உடல்வேதனை காரணமாக தற்கொலை புரிந்தவர் இறந்தபின்னும் சில நாட்களுக்கு அதேவேதனையை அனுபவிப்பது போன்ற பிரமையில் இருந்துகொண்டு அல்லல்படுவார். மேலும் தற்கொலை செய்ததற்கான கர்ம வினை அவரைச் சார்ந்து விடுவதோடு, அவர் எடுக்கப்போகும் மறுபிறப்பின் குணாம்சங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு விடுகின்றன.

சுயநலமற்ற தற்கொலைகளின் நிலையோ வேறு. பிறர் நலன்கருதி தியாக சிந்தனையோடு செய்யப்படும் தற்கொலையினால் இறந்தவர்களுக்கு தீயபாதிப்பு ஏற்படுவதில்லை. போர் முனையில் நாட்டிற்காக இறப்பவர்களும் சுயநலமற்ற இலட்சிய நோக்கத்திற்காக தமது உயிர்களை அர்ப்பணிப்பவர்களும் மறு உலகில் அதிக தீமைகளை அனுபவிப்பதில்லை.

மிகையான பூவுலக நாட்டம் உள்ள சிலர் சடுதி மரணமடைந்த சமயத்தில் தமது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஏதோவொரு பலம்வாய்ந்த இச்சை உணர்வு காரணமாக விரைவிலேயே மறுபிறப்பு எடுத்துவிடுகிறார்கள். இவ்வாறு மறுபிறப்பு எடுத்தவர்களில் சிலருக்கு முற்பிறப்பு நினைவுகள் இருப்பதுண்டு.

பேசும் மரங்கள்...!



சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது.

ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி.

சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் “வா வந்து என்னுடன் விளையாடு ” என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் “இல்லை இப்போதெல்லாம் அப்படி விளையாட முடியாது, நான் பெரியவன் ஆகிவிட்டேன்.எனக்கு விளையாட பொம்மைகள் வேண்டும் ” என்றான்.

மரம், “என்னிடம் பொம்மைகள் எதுவும் இல்லை, என்னிடம் இருக்கும் ஆப்பிள்களை பறித்துக் கொள்.அதை விற்றுப் பணமாக்கி பொம்மை வாங்கிக் கொள் என்றது”

சிறுவனின் முகம் உடனே மலர்ந்தது.அப்படியா உண்மையாவா!! என்று எல்லா பழங்களையும் பறித்துக் கொண்டு சென்றான்.அதன் பின் மரத்தைப் பார்க்க வரவில்லை.

மீண்டும் சில நாட்கள் கழித்து வந்தான்.இம்முறையும் மரம் ” வா , வந்து என்னுடன் விளையாடு ” என்று அழைத்தது.அவன் இல்லை நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன்.நான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.நாங்கள் தங்குவதற்கே வீடு இல்லாமல் இருக்கிறோம்.உன்னால் எங்களுக்கு வீடு தர முடியுமா என்றது.

மரம் ” என்னிடம் வீடு இல்லை, என் கிளைகளில் சிலவற்றை எடுத்துக் கொள், அதைக் கொண்டு சின்ன வீடு அமைத்துக் கொள்” என்றது.மீண்டும் அவனின் சந்தோசத்தை கண்டு மரம் மகிழ்ந்தது.தன்னிடம் இருப்பதை இழக்கிறோம் என்று மரம் கொஞ்சமும் வருந்தவில்லை.

வழக்கம் போல் மரம் அவன் வரவிற்காக ஏங்கி தவிக்கிறது.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கோடை நாளில் வந்தான். எனக்கு வெப்பமாக இருக்கிறது.கடலுக்கு செல்ல ஆசையாக இருக்கு.எனக்கு ஒரு படகு வேண்டும் என்றான்.மரம் என்னிடம் படகு இல்லை, ஆனால் நீ என் தண்டுப் பகுதியை எடுத்து படகு செய்துக் கொள் என்றது.அவனுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

காலங்கள் ஓடி அவனுக்கும் வயதாயிற்று.அப்போதும் ஒரு நாள் மரத்தைப் பார்க்க வருகிறான்.இம்முறையும் மரம் அவனை ஆசையாய் வரவேற்று அரவணைக்க நினைக்கிறது. எனக்கு வயதாகிட்டு , மிகுந்த களைப்பாய் இருக்கு.நான் இங்கு ஓய்வு எடுக்க ஆசைபடுகிறேன் என்றது.

எல்லாவற்றையும் இழந்தும் சிரித்துக் கொண்டே மரம் “என்னிடம் இருப்பது வேர் மட்டுமே.நீ என் வேர் பகுதியை சிறிது வெட்டி விட்டு அந்த இடத்தில் ஓய்வு எட்டுத்துக் கொள் ” என்று சொல்லிக்கொண்டே சாகிறது.

அவனும் அவ்வாறே செத்துக் கொண்டிருக்கும் மரத்தின் மேலே படுத்துக் கொண்டான்.


  •  நீதி : 

கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நாம் மரங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவற்றை வெட்டி விடுகிறோம்.மரத்தை வெட்டுவது பாவம்.இவ்வளவு தானே!!!

கதை அதை மட்டும் சொல்லவில்லை.இந்த மரம் தான் நம் ஒவ்வொருவரின் பெற்றோரும். சிறுவயதில் பெற்றோருடன் ஆடிப் பாடி மகிழ்கிறோம்.வளர வளர அவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நம் தேவைகளுக்கு மட்டும் அவர்கள் முன் சென்று நிற்கிறோம்.

நாம் குடும்பம் ஆனதும் முழுவதுமாய் ஒதுங்கி, நமக்கு பிரச்சனை என்றதும், நம்மை காத்துக் கொள்ள மட்டும் அவர்களை எதிர்பார்க்கிறோம்.பெற்றோர்கள் இந்த மரத்தை போன்றே நம் வரவிற்காக எப்போதும் ஏங்குபவர்கள்.தம்மால் இயன்றதை நமக்கு கொடுத்து நம் புன்னகையில் அவர்கள் சந்தோசத்தை தேடுவார்கள்.
 
நண்பேன்டா