Sunday 9 February 2014

இணையத்தில் உங்களை தொடரும் ஆசாமிகள்..! - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!



நீங்கள் இணையத்தில் இணைந்து, தேவையான தளங்களைச் சுற்றி வந்தாலே போதும், உங்களைப் பற்றிய அனைத்து பெர்சனல் தகவல்களும் யாருக்காவது சென்று விடும் வகையில் சேர்க்கப்படுகின்றன. எப்படி, எந்த வழிகளில் இவை தேடி எடுக்கப்படுகின்றன என்பது நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால், இணையம் இயங்கும் வழிகளை ஆய்வு செய்தவர்கள், இந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

கொலை கொலையா முந்திரிக்கா என்று கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் எப்படி நாம் அறியாமல் நம் பின்னால், துணியைப் போட்டு, பின் நம்மைத் துரத்தி விளையாடுகிறார்களோ, அதே போல, நாம் அறியாமல் நமக்குத் தூண்டில் போட்டு, நம்மைப் பற்றிய தகவல்களைப் பெறும் இந்த இணைய விளையாட்டினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

சில வகை தகவல் சேகரிப்பு வெளிப்படையாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, இணைய தளங்களில் நீங்கள் லாக் இன் செய்திடுகையில், நீங்கள் யார் என்பதனை அது அறிந்திருக்கும். ஆனால், உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து, முழுமையான உங்கள் பெர்சனாலிட்டியை அறிந்து கொள்கின்றனர் என்பதுதான் நாம் எண்ணிப் பார்த்து, உஷாராக வேண்டிய ஒன்று.

பொதுவாக விளம்பரங்களுக்கான வலைப்பின்னல்களில், விளம்பரங்களைக் குறிவைத்து, உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவார்கள். ஏதேனும் ஒரு வர்த்தக இணைய தளத்தில் நுழைந்து, வர்த்தகம் குறித்த விளம்பரங்களை, தொடர்பு தரும் இணைய தளங்களில் பார்த்தாலும், நம்மைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்படும்.

ஐ.பி. முகவரிகள்: உங்களை விரைவில் எளிதாக அடையாளம் காட்டுவது உங்கள் ஐ.பி. முகவரி தான்.இணையத்தில், உங்கள் ஐ.பி. முகவரி, உங்களை அடையாளம் காட்டுகிறது. இதிலிருந்து, மிகச் சரியான உங்கள் முகவரியை அறிய முடியாது என்றாலும், உத்தேசமாக, பூகோள ரீதியான இடத்தை அறியலாம். உங்களின் தெரு தெரியாவிட்டாலும், நகரம் அல்லது நகரத்தில் ஏரியா தெரிய வரும். இருப்பினும், ஒரே ஐ.பி. முகவரியை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் பயன்படுத்த முடியும் என்பதால், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை மட்டும் பிரித்தறிவது எளிதானதல்ல. இருந்தாலும், ஐ.பி. முகவரியை மற்ற தொழில் நுட்பத்துடன் இணைத்து, நம் இடத்தை உறுதிப் படுத்தலாம்.

எச்.டி.டி.பி. ரெபரர் (HTTP Referrer): நீங்கள் இணையத்தில், லிங்க் ஒன்றைக் கிளிக் செய்தால், உங்கள் பிரவுசர், நீங்கள் கிளிக் செய்த லிங்க் சார்ந்த இணைய தளத்தினைக் கொண்டுவருகிறது. இணையதள சர்வரில், நீங்கள் எங்கிருந்து தொடர்பினை ஏற்படுத்துகிறீர்கள் என்று சொல்கிறது. இந்த தகவல் HTTP referrer headerல் கிடைக்கும்.

இணையப் பக்கத்தில், அதன் தகவல்களைக் கொண்டு வருகையில், HTTP referrerம் அனுப்பப்படுகிறது. எடுத்துக் காட்டாக, இணைய தளம் ஒன்று விளம்பரத்தைக் கொண்டிருந்தால், ட்ரேக் செய்திடும் ஸ்கிரிப்ட் ஒன்றை வைத்திருந்தால், உங்கள் பிரவுசர், அந்த விளம்பரதாரரிடம் அல்லது பின் தொடரும் நெட்வொர்க்கி டம், நீங்கள் எந்த பக்கங்களைப் பார்க்கிறீர்கள் என்பதனைச் சொல்கிறது.

"Web bugs” என்று அழைக்கப்படும் மிகச் சிறிய (1x1 பிக்ஸெல்) கண்ணால் பார்க்க இயலாத இமேஜ்கள் இந்த எச்.டி.டி.பி. ரெபரரைத் தனக்கு உதவியாக எடுத்துக் கொண்டு, இணைய தளத்தில் தன்னைக் காட்டாமலேயே, உங்களைப் பின் தொடரும். இதனையே பயன்படுத்தி, நீங்கள் திறந்து பார்க்கும் மின் அஞ்சல்களையும் இவை தொடர்கின்றன.
குக்கீகளும் ட்ரேக்கிங் ஸ்கிரிப்ட்களும் (Cookies & Tracking Scripts): இணைய தளங்கள் உங்கள் பிரவுசரில் ஸ்டோர் செய்து வைக்கும் சிறிய பைல்கள் குக்கீஸ் ஆகும். இவை நமக்கு நன்மை செய்பவையாகவும் உள்ளன.

எடுத்துக் காட்டாக, வங்கிகளின் தளத்தில் நுழைகையில், குக்கி பைல் உங்களைப் பற்றிய தகவல்களை நினைவில் கொண்டு, நீங்கள் தரும் தகவல்களைக் கணிக்கிறது. இணைய தள செட்டிங்ஸ் மாற்றினால், அதனையும் நினைவில் கொண்டு, உங்களுக்கு உதவுகிறது.

குக்கிகள் உங்களை அடையாளம் கண்டு கொண்டு, உங்கள் இணைய உலாவினைப் பின் தொடர்ந்து கண் காணிக்கிறது. நீங்கள் பார்க்கும் இணைய தளங்கள் அனைத்தையும் பின் தொடர்ந்து, உங்கள் அனுபவம் குறித்து ஒரு அமைப்பை உருவாக்கி வைத்துக் கொள்கிறது. மூன்றாவது நபர்கள் நுழைத்திடும் குக்கி பைல்கள் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளூம்போது பிரச்னை வரும். இதில் நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம், இணைய தளங்கள் மூன்றாவது நபர் குக்கிகளைப் பதிந்து வைத்து அனுமதிப்பதுதான்.

இரண்டு வெவ்வேறு இணைய தளங்கள் ஒரே விளம்பரத்தைப் பயன்படுத்தினால் அல்லது நெட்வொர்க்கினைப் பின்பற்றினால், உங்கள் பிரவுசர் ஹிஸ்டரியை அவை முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளும்.

சூப்பர் குக்கீஸ் (Super Cookies): நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் சேரும் குக்கீஸ் பைல்களை அவ்வப்போது நீக்கிவிடலாம். ஆனால், அதனால் உங்கள் இணைய நடவடிக்கையினை மற்றவர்கள் பின்பற்றுவதனைத் தடுக்க முடியாது. தற்போது "super cookies” என அழைக்கப்படுபவை நிறைய உண்டு.

 அப்படி ஒன்று தான் எவர்குக்கி (http://samy.pl/evercookie/)ஆகும். இது ஒரு சூப்பர் குக்கி. இவை குக்கிகளுக்கான டேட்டாவினை பல இடங்களில் பதிந்து வைக்கும். பயனாளர்களைத் தனித்தனியே அடையாளம் கண்டு, தகவல்களைத் தொகுத்து வைக்கும். ஓர் இடத்தில், குக்கியை அழிப்பதன் மூலம், அது சேர்த்து வைத்த தகவல்களை நீங்கள் நீக்கிவிட்டால், அது மற்ற இடங்களில் இருந்து அவற்றை எடுத்து, சரி செய்து கொள்ளும். சூப்பர் குக்கிகள் அனைத்துமே, இழந்தவற்றை மீட்டுத் தருவதில் திறன் கொண்டவை.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா