Sunday, 9 February 2014

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!




ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துவதில் உதடுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய உதடானது ஒருசில பருவக் காலத்தில் அதிகம் வறட்சி அடையும்.

குறிப்பாக குளிர்காலத்தில் தான் அதிகம் ஏற்படும். இவ்வாறு வறட்சி ஏற்படும் போது உதடுகளைச் சுற்றி வெள்ளையாக இருப்பதோடு, உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, சில சமயங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை மட்டுமின்றி, உதடுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், உதடுகள் அதன் இயற்கை அழகை இழந்து அசிங்கமாக காணப்படும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குளிர்காலத்தில் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் இருக்க எந்த பொருட்களைக் கொண்டு உதடுகளை பராமரித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கொடுத்துள்ளது.

அதைப் படித்து அவற்றைக் கொண்டு உதடுகளை பராமரித்து, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்யாக் எணணெயை தினமும் பலமுறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமல் இருப்பதோடு, உதடுகளின் இயற்கை அழகும் பாதுகாக்கப்படும்.

கற்றாழை

கற்றாழை ஜெல் கூட உதடு வறட்சியைத் தடுக்கும் அருமையான பொருள். எனவே தினமும் உதடுகளுக்கு கற்றாழை ஜெல்லை தடவி வாருங்கள்.
உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

ரோஜாப்பூ

ரோஜாப்பூவில் சிறிது கிளிசரின் சேர்த்து அரைத்து, அதனை உதடுகளுக்கு தினமும் இரவில் தடவி வந்தால், உதடுகளின் நிறம் அதிகரிப்பதோடு, உதடுகளில் ஈரப்பதமும் தக்க வைக்கப்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தாலும், உதடுகளின் வறட்சி தடுக்கப்படும்.
உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளில் ஈரப்பதை அதிகரிப்பதோடு, உதடுகளும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

தேன்

தேன் ஒரு அருமையான மாய்ஸ்சுரைசர். எனவே தினமும் தேனைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தால், உதடுகளில் உள்ள வறட்சியுடன், வெடிப்புகள் விரைவில் குணமடைந்து, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயும் அருமையான ஒரு பொருள். ஆகவே இதனையும் உதடுகளுக்கு தடவலாம்.

கிளிசரின்

1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டனை நீரில் நனைத்து உதடுகளை துடைத்து எடுக்க வேண்டும். இதுவும் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் போன்று இருக்கும்.

க்ரீம் மில்க்

க்ரீம் மில்க்கை உதடுகளுக்கு தடவி வந்தாலும், உதடுகளில் பிரச்சனை ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.

வேஸ்லின் மற்றும் தேன்

வேஸ்லின் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை உதடுகளுக்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தாலும், நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா