Thursday, 6 February 2014

பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சப்ஜி..!



மார்கெட் சென்றால் பட்டாணி விலை மலிவில் கிடைக்கிறதா? அப்படியானால் தவறாமல் அதை வாங்கி வாருங்கள். ஏனெனில் அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அப்போதே வாங்கி சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை எளிதில் பெற முடியும். அந்த வகையில் பட்டாணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.

எனவே பட்டாணியைக் கொண்டு பலவாறான ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். இங்கு பட்டாணி மற்றும் தக்காளி கொண்டு செய்யக்கூடிய ஒரு சப்ஜி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். மேலும் இது பேச்சுலர் ரெசிபியும் கூட.

தேவையான பொருட்கள்: 


  • பச்சை பட்டாணி - 1 
  • கப் தக்காளி - 4 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது) 
  • மிளகாய் தூள் - 1 
  • டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1
  • டீஸ்பூன் மல்லி தூள் - 1 
  • டீஸ்பூன் சீரகம் - 1
  • டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1


 டீஸ்பூன் செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

தக்காளியானது நன்கு வதங்கிவிட்டால், பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கி விட்டால், பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சப்ஜி ரெடி!!! இதனை சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா