Thursday, 6 February 2014

காரை தொலைத்த மனைவியின் சோகக் கதை – சிரிக்க மட்டும்..!



ஒரு பெண் தனக்கு நடந்த சோகக் கதையை இங்கே விவரிக்கிறாள்.. அவளுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்..

carநான் எனது அலுவலக மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். வழக்கம் போல எனது பையில் கார் சாவியை தேடினேன். என்னால் ஆன மட்டும் பையின் அனைத்து மூலை முடுக்குகளையும் தேடிவிட்டேன்… இல்லைவே இல்லை என்று சொல்லிவிட்டன கை விரல்கள். அந்த விரல்களுக்கு கண்ணில்லை என்று நினைத்து பையை ஒரு முறை கண்களால் துளாவினேன். இல்லை கண்களும் அதே பதிலைத் தான் சொன்னது.

மூளையில் திடீரென ஒரு  பல்ப் எரிந்தது… ஒரு வேளை காரிலேயே சாவியை விட்டு விட்டு வந்திருப்பேனோ.. (அய்யோ எத்தனையோ முறை காரில் சாவியை வைத்து விட்டு வறாதே என்று கணவர் திரட்டியுள்ளார். காரிலேயே சாவி இருந்தால் சாவி தொலையாது என்பது எனது நினைப்பு. ஆனால் காரே தொலைந்துவிடும் என்பது அவரது தரப்பு).. சரி இறுதியாக ஓடிச் சென்று பார்க்கிங்கில் தேடினேன்.. அய்யோ எனது கணவர் தரப்பு தான் சரி.. காரை காணவில்லை.. ஒரு நிமிடம் மூளையில் எரிந்து கொண்டிருந்த பல்ப் பளிச்சென்று எரிந்து வெடித்தது.

என்ன செய்வது என்று தெரியாமல், காவல்துறைக்கு போன் செய்து, என் பெயர், விலாசம், கார் எண், காரை பார்க் செய்த இடம், காணாமல் போன நேரம் எல்லாவற்றையும் விரிவாகக் கூறினேன். காவலரும் உடனடியாக நான் இருக்கும் இடத்துக்கு வருவதாகக் கூறினார்.

சற்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு எனது கணவருக்கு போன் செய்ய முடிவு செய்தேன். போனை எடுத்து கணவருக்கு ரிங் செய்தேன். எடுத்த வேகத்தில், என்னங்க கார் சாவியை காரிலேயே வைத்து விட்டு சென்றுவிட்டேன். வந்து பார்த்தால் காரைக் காணவில்லை என்று கொட்டினேன்.

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு இடியட் என்று மட்டும் காட்டமாக பதில் வந்தது.

நானே ஆரம்பித்து… மன்னிச்சிடுங்க.. என்ன வந்து அலுவலகத்தில் இருந்து கூட்டின் போறீங்களா என்று கேட்டேன்.
அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் என்னை சுக்குநூறாக்கியது… “ஹேய்.. இன்று காலை நான் தான் உன்னை காரில் கொண்டு வந்து அலுவலகத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். இங்கு போலிஸ் காரர் உன் காரை திருடிவிட்டதாக என்னை பிடித்து வைத்துள்ளார்.. அவரிடம் உண்மையை விளக்கிவிட்டு உன் அலுவலகத்துக்கு வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றாரே பார்க்கலாம்.

என்ன வட போச்சா…

No comments:

Post a Comment

 
நண்பேன்டா