யானை மூக்கு மீன் - Elephant Nose Fish ..!
குதிரையின் குணத்தை அறிந்து தான் அதற்கு இறைவன் கொம்பை படைக்கவில்லை என நம் முன்னோர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியாயின் மீன் இனம் ஒன்றிற்கு தும்பிக்கை இருந்தால் அதை எப்படிக் கூறுவது? இவ்வாறான, அசாத்தியமான விடயங்களும் உலகில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
நைகர் மற்றும் மேற்கு ஆபிரிக்க கடற் பகுதிகளில் உள்ள ஒருவகை மீன் இனங்களுக்கு யானையின் தும்பிக்கை போல் மூக்கு காணப்படுகிறது. இந்த வகையான மீன்களை ஆங்கிலத்தில் யானை மூக்கு மீன் (Elephant Nose Fish) என அழைக்கின்றனர்.
இந்த வகையான மீன்கள் 23 தொடக்கம் 25 சென்ரி மீற்றர் நீளமானவையாக உள்ளன. இவை அநேகமாக இருண்ட பிறவுண் மற்றும் கறுப்பு நிறங்களில் காணப்படுகின்றன. கண் பார்வை சக்தி குறைவாக காணப்படுவதனால் இந்த வகை மீன்கள் அவற்றின் சிறப்பு அங்கமாகிய தும்பிக்கையின் உதவியினால் உணவை கண்டறிகின்றன.
இந்த மீன் இனத்தின் ஆயுட்காலம் 6 தொடக்கம் 10 ஆண்டுகள் என குறிப்பிடப்படுகிறது.
Thursday, 6 February 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment