Thursday 6 February 2014

கண்ணீர் எப்படி உருவாகிறது..?

கண்ணீர் எப்படி உருவாகிறது?


கண்ணீர்த் துளிகள் உப்பு நீராலானவை. கண்விழி தக்கவாறு சுழல்வதற்கேற்ப ஈரப்பசை தரும் சுரப்பி, இயல்பான நீருக்கு மேல் அதிகமாகச் சுரப்பதால் கண்ணீர் ஏற்படுகிறது. கண் எல்லா நீரையும் வடிக்க இயலாததால் மிகுதியான நீர் கண்ணீர்ப் பெருக்காக வெளியேறுகிறது.

கண்ணீரைத் தோற்றுவிக்கும் சுரப்பி கண்ணீர் சுரப்பி (Lachymal gland) என அழைக்கப்படுகிறது. கண்ணீர் என்பதற்கான லத்தீன் மொழிச் சொல் லக்ரிமா (Lacryma) என்பதாகும். அச்சுரப்பி கிட்டத்தட்ட வாதுமைக் கொட்டை அளவு வடிவில் (Almond nut) கண்ணின் மேலே அமைந்துள்ளது. ஆறு அல்லது ஏழு நுண்ணிய நரம்புக் குழாய்களால் கண்விழியில் மேற்பரப்பில் அது திறந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் கண்மூடித் திறக்கும்போது (blink) கண்ணின் மேற்பரப்பு முழுமையும் பரப்பலாகிறது. மேல் கீழ் கண்ணிமைகள் சேருமிடத்தில் தேவைக்கு மேலான நீர் சேகரிக்கப்பட்டு கண்ணின் உள் மூலையில் இரண்டு வாய்க்கால் வழியே வந்து மூக்கின் அருகிலுள்ள கண்ணீர்ப் பைக்கு எடுத்து வரப்படுகிறது (Lachymal Sac).

வெங்காயம் அல்லது வீட்டு அமைப்பில் தோன்றும் நவச்சார ஆவி (Ammonia) போன்ற சேர்மம் ஆகியவற்றின் மூக்கைத் துளைக்கும் மணம் அல்லது துன்பம், மகிழ்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளால் ஏற்படும். அழுத்தம் போன்றவற்றால் கிளறப்படும்போது கண்ணீர் சுரப்பி வழக்கமான நீருக்குமேல் மிகவும் உண்டாகிறது. அதனால் கண்ணீர்ப்பை மிகவும் நிரம்பி நீர் மூக்கில் நுழைக்கிறது. குழாய்கள் ததும்பி வெளிப்படுத்துகின்றன. இத்ததும்பி வழிதல் நீர்ம ஒழுக்காக ஓடுகிறது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா