Thursday 6 February 2014

610 கிலோ குண்டு மனிதருக்கு 320 கிலோ அதிரடி கரைப்பு..!


சவுதியில் 610 கிலோ குண்டு மனிதருக்கு அந்நாட்டு மன்னர் உத்தரவின் பேரில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு 4 மாதத்தில் 290 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.சவுதியில் உள்ள ரியாத் நகரை சேர்ந்தவர் கலீத் மொஹிசன் அல் ஷேரி. இவருக்கு வினோதமான உடல் எடை அதிகரிப்பு நோய் காணப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது உடல் எடை 620 கிலோவுக்கு கன்னாபின்னாவென்று எகிறியது. இதனால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். எழுந்து நடமாட கூட முடியவில்லை. தூங்குவதற்கு 3 கட்டில்களை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டியிருந்தது.இதையடுத்து தனது உடல் எடையை குறைக்கும் சிகிச்சைக்கு உதவும்படி சவுதி அரசிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி, கலீத் மொஹிசனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டார்.

ரியாத்தில் உள்ள கிங் மருத்துவ சிட்டி மருத்துவமனை ஊழியர்கள் சிறப்பு வாகனம் மூலம் 4 மாதங்களுக்கு முன்பு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அயத் அல் ஹத்தானி கூறுகையில், கலீத் மொஹிசனின் உடல் எடையை குறைக்க லேப்ராஸ்கோபிக் உள்பட சில அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 நான்கு மாதங்களில் 320 கிலோ கரைக்கப்பட்டு அவரது உடல் எடை 290க்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது இதய துடிப்பு, சுவாசம் ஆகியவை நார்மலாக உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் 150 கிலோ கரைக்கப்பட உள்ளது. உலகிலேயே முதல் முறையாக அதிநவீன முறையில் 4 மாதத்தில் உடல் எடை குறைப்பு சிகிச்சை இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கலீத் மொஹிசன் தனது அன்றாட பணிகளை இயல்பாக செய்கிறார்  என்றார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா