முதுமையை தள்ளிப் போடும் உணவுகள்..!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் பல வழிகளை ஆர்வமுடன் தேடுகின்றனர். அமெரிக்க மக்களின் முதன்மையான ஆட்கொல்லி நோயான இதய நோய்க்கும் மற்றும் பிற நோய்களுக்கும், தீவிர உழைப்புடன் கூடிய வாழ்வினை மேற்கொள்வதும், நன்றாக உணவு உண்பதும் காரணமாக அமைகிறது.
புத்தம் புதிய முழுமையான, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவினை உண்பது அனைத்து வித வயதுள்ள பெண்களையும் தங்களை சிறந்தவர்களாக காண்பிக்கவும் உணரவும் வைக்கிறது.
இப்போது முதுமைக்கு காரணமான விளைவுகளை எதிர்த்து போரிடும் சத்துக்கள் நிறைந்த உணவுக்கான பட்டியல் குறித்து காண்போம். இந்த உணவுகளை உட்கொண்டால், விரைவில் முதுமை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
சால்மன்
சருமத்தை மிருதுவாக வைக்க பெண்கள் வாரத்திற்கு ஒரு முறை 12 அவுன்ஸ் சால்மன் மீனை உண்ண வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது. சால்மனில் வைட்டமின் பி12, வைட்டமின் டி ஆகியவை செறிந்துள்ள ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. உடலின் கட்டிகளை குறைக்கிறது. இது நாள்பட்ட நோயின் தீவிரத்தை குறைக்கிறது. மேலும் 50 வயதினை கடந்த பெண்களின் பொதுவான பிரச்சனையான இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.
பசுமையான இலை கீரைகள்
கேல், பசலைக்கீரை, கொலார்டூ கீரைகள், ரோமன் லெட்யூஸ் மற்றும் ஸ்விஸ் கேரட் ஆகியவை வைட்டமின் சி, வைட்டமின் கே, போலிக் அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள பசுமையான காய்கறிகள் ஆகும். க்ரீன் கேரட்டில் உள்ள வைட்டமின் பி இதயத்திற்கும், நினைவாற்றலுக்கும் நல்லது. வைட்டமின் ஏ சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மேலும் எண்ணற்ற பச்சை காய்கறிகளில் கண்டறியப்பட்டுள்ள லுடேயின் பார்வை திறனை பாதுகாக்கிறது. பச்சை காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் முகத்தின் கோடுகளையும், சுருக்கங்களையும் தடுக்கிறது. பொதுவாக பச்சை காய்கறிகளில் காணப்படும் லைகோஃபைன், லூடென் மற்றும் பீட்டா கரோட்டீன் சருமத்தின் முதுமைக்கு காரணமான புறஊதாக் கதிர்களை தடுக்கிறது. கீரைகளில் காணப்படும் சத்துக்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் முடக்கு வாதம் ஆகிய நோய்க்கு எதிராக போரிடுகிறது. மேலும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.
பூண்டு
பூண்டில் சுவையும், நன்மையும் சம அளவில் கலந்துள்ளன. கல்லீரலின் இயக்கு திறனை அதிகரிக்கவும், நச்சுகளை அகற்றவும் பூண்டு துணை புரிகிறது.செல் சீரழிவினை தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்களை தடுக்கிறது. பட்டியலிலுள்ள மற்ற உணவு வகைகளை போலவே பூண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் செறிந்து காணப்படுகிறது. இது அசாதாரண செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. விழிப்புணர்விற்காக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.
குறிப்பு
ஆரோக்கியமான உணவினை உண்ண அறிவுறுத்தப்படுவது நம்மையும், நாம் விரும்புகின்ற உணவினையும் பிரித்து வைப்பதற்காக அல்ல. மாறாக நமது உடலுக்கு தேவையான முக்கியமான சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான். இந்த சிறந்த உணவு தகவல்களின் மூலம் நம்மை அற்புதமாக உணரவும் காண்பிக்கவும் முடியும்.
Tuesday, 4 March 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment