Tuesday, 4 March 2014

முதுமையை நோக்கிச்செல்லும் இளைஞர்களே...!



மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது.

பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன.

 விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விசயமே வந்தது.

அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன.

போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது.

வியாபார கொள்கைகள் வாழ்க்கையிலும் வந்தபின் , எதையும் நியாயப்படுத்தும் சுயநல அரக்கன் முதலில் பலி கொண்டது இத்தகைய பொறுப்புகளைத்தான்.

இதன் முடிவில் மனித்தத்துவம் மரித்து போகும்.

நாம் அவற்றை உணர்ந்திருந்தாலும் மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லுவதில் தயங்கத் தேவையில்லை. எதிர்கால உலகம் நமக்கும்தான் காத்திருக்கிறது.

கரணம் 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள்.

அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக, ஆக அவர்களின் உடல் நலப்பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும்.

65 வயசுக்குப்பிறகு ஆண்களும், பெண்களும் அதிக வலிகளால அவதிப்படுகிறார்க்ள்.

அவர்களின் வலிகள், மற்ரவ்ர்களின் வலிகள் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

அதற்க்கான அணுகுமுறை, சிகிச்சை எல்லாமே வேறு என்கிற வலி என்று விளக்கம் சொல்லும் மருத்துவர்கள் ”இந்த வயோகத்தால வரக்கூடிய வலி திசுக்களோட தேய்மானம், பலவீனத்தால வரக்கூடியது.

ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப்பிரச்சனைனு, வேற நோய்களோட விளைவால் வரக்கூடியது, தனிமை, வாழ்க்கையைப்பத்தின பயம், வருமானம், இல்லாததுனு வேற காரணங்களால உணரப்படற வலி புற்றுநோயால வரக்கூடிய வலி…

இதெல்லாம் வயசானவங்களோட வலிக்கான காரணங்கள். 65 வயசுக்குப் பிறகு புற்றுநோய் தாக்கற ஆபத்து அவங்களுக்கு அதிகம்.இவங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அத்தனை சுலபம் இல்லை.. சிகிச்சைக்கு ஓத்துழைக்க மாட்டாங்க.

காது கேட்காதது, கவனமின்மை, மறதி, மனரீதியான பிரச்சனைகள்னு பல காரணங்களால சிகிச்சைகளை பத்திப் புரிஞ்சிக்கிற சக்தி அவங்களுக்கு இருக்காது.

உடற்பயிற்சி, பிசியோதெரபி மாதிரியான விஷயங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டாங்க. ரொம்ப பொறுமையோடத்தான் அவங்களை அணுகணும் என்கிற டாக்டர் குமார், மூட்டு வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, காலட எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் காணப்படுகிற வலிகள் என்கிறார்..

ஏற்கனவே அவங்களுக்கு ஏதாவது நோய் இருந்தா, வலிகளுக்கான மருந்துகளை கொடுக்கிறப்ப, அதிக பட்ச கவனம் தேவை..

 எல்லா மருந்துகளும் அவங்களுக்கு ஒத்துக்காது. நோயோட தன்மை, அவங்களோட உடல் மற்றும் மனநிலையை தெரிஞ்சிக்கிட்டு தான் மருந்துகள் தரணும். 60 வயசுக்கு மேலானவங்க எக்காரணம் கொண்டும், எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாதுங்கிற வலிகளுக்கு கவுன்சிலிங்கும், உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி செய்யறது மூலமா வலியோட தீவிரம் அதிகமாகிறதைத் தவிர்க்கலாம்.

 சிலவலிகளுக்கு அறுவைசிகிச்சை தான் தீர்வா இருக்கும். ஆனா வயோதிகம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்துகளும் தர முடியாதுங்கிற நிலைமையில உள்ளவங்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுக்கிறது பலன் தரும்” என்கிறார்கள்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா