Tuesday 4 March 2014

நீரிழிவுக்கு இயற்கை மருத்துவ முறையில் கட்டுப்பாடு தேவையா..?



முள்ளங்கிக் கிழங்கு 2 நசுக்கியது முற்றிய வேப்பிலை, மாவிலை பொடி செய்தது 25 கிராம். இவைகளை மண்பாத்திரத்தில் போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி சுமார் அரை லிட்டர் ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் 100 மில்லி கஷாயம் நாவினால் வெறும் வயிற்றில் சாப்பிட வரவேண்டும்.

தினமும் தயார் செய்து வைத்துள்ள கஷாயத்தை சூடு செய்து அதிலிருந்து 100 மில்லி கஷாயத்தை எடுத்துக் குடிக்க வேண்டும். 5 தினங்களுக்கு ஒரு முறை புதியதாகக் கஷாயம் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

உணவு முறை: வழக்கமாக அவரவர் உடம்பு ஏற்றுக் கொள்ளும் உணவு வகைகளைச் சாப்பிட்டு வரலாம். இனிப்பு வகைகளை குறைவாக சேர்த்துக் கொள்வது நல்லது. இரவு உணவில் பாதியளவு உணவு தான் சாப்பிட்டு வர வேண்டும். தேவைக்குத் தக்கபடி 20 அல்லது 30 நாட்கள் கஷாயம் குடித்து வரலாம்.

உடலில் புண் உண்டாகி எளிதில் ஆறாத காயங்களுடன் இருக்கும் நீரிழிவு வியாதிக்காரர்கள் கீழ்க்கண்ட முறையைப் பயன்படுத்திப் பலன் அடையலாம்.

அருகம்புல்: குண்டு (அ) ஜம்பு நாவல் மா இலை, அத்தி இலை வகைக்கு தலா 25 கிராம் எடுத்து ஒன்றரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து மண் பாத்திரத்தில் போட்டு முக்கால் லிட்டர் கஷாயம் வரும்படி வற்றக் காய்ச்சி சுத்தமான வெண்மை நிறத் துணியில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50 மில்லியும், இரவு உணவுக்கு முன் 50 மில்லி கஷாயமும் குடித்து வர வேண்டும்.

இதுவும் 5 தினங்களுக்கு ஒரு முறை புதியதாக தயாரித்துக் கொள்ள வேண்டும். மொத்தம் 30 தினங்கள் அருந்தி வரலாம். உடம்பில் மேலே உள்ள ஆறாத புண்களுக்கு அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி இவைகளை அரைத்து (இலுப்ப எண்ணெய் தேவைக்கு விட்டு கலந்து) இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் புண்களின் மீது தடவிக் கொள்ளலாம். இரவு உணவு வகை அரை வயிறு தான் சாப்பிட்டு வரலாம். பகலில் பப்பாளி பழம் கிடைத்தால் உணவுக்குப் பின் கொஞ்சம் சாப்பிட்டு வரலாம்

No comments:

Post a Comment

 
நண்பேன்டா