Tuesday, 4 March 2014
ஜலதோஷத்திற்கு ஜீராமிளகு ரஸம் சிறந்த நிவாரணி...!
ஜீராமிளகு ரஸம்.
வேண்டியவைகள்
தனியா——இரண்டு டீஸ்பூன்
மிளகு—–ஒரு டீஸ்பூன்
சீரகம்——ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு–இரண்டு டீஸ்பூன்
பெரிய தக்காளிப் பழம்—–ஒன்று
புளி—–சின்ன எலுமிச்சம்பழ அளவு
பூண்டு——7 அல்லது 8 இதழ்கள்
நெய்—-2 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
தாளிக்க—சிறிது கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை
ஒரு துளி மஞ்சட் பொடி
மிளகாய்——சிறியதாக ஒன்று
செய்முறை—-புளியை ஊறவைத்து நன்றாகக் கரைத்து
இரண்டு கப் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும்.
உப்பு, மஞ்சட்பொடி சேர்க்கவும்.
சிறிது நெய்யில் பருப்பு, மிளகு, மிளகாய், தனியாவை
சிவக்க வறுத்துக் கொண்டு பூண்டையும் சேர்த்து
கறுகாமல் வதக்கி, நறுக்கிய தக்காளியையும்,
சேர்த்து லேசாக வதக்கவும்.
ஆறியவுடன் சீரகம் சேர்த்து மிக்ஸியிலிட்டு
சிறிது ஜலம் தெளித்து விழுதாக அரைக்கவும்.
உப்பு சேர்த்த புளிக்கரைசலை பாத்திரத்திலிட்டு
நிதானமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும்.
புளி வாஸனை போகக் கொதித்தவுடன், அரைத்த
விழுதை இரண்டரை கப் நீரில் கரைத்து சேர்க்கவும்.
நுறைத்துப் பொங்கும் அளவு கொதிக்கவிட்டு
இறக்கி நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து
கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி உபயோகிக்கவும்.
சுலபமாகச் செய்யக்கூடிய மருத்துவ குணமுள்ள
ரஸமிது.
ஜலதோஷம். ஜுரம் போன்றவைகளின் போது
இம்மாதிரி ரஸம் மிகவும் நல்லது.
துணைக்கு
பருப்புத் துவையல். சுட்ட அப்பளாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment