Tuesday, 4 March 2014

கருப்பைக் கட்டி வராமல் தடுக்கும் டயட்...!



பெண்கள் வயதுக்கு வந்த பின்னர் சத்தான உணவுகள் மற்றும் பழங்கள், காய்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் வரும் மாதவிடாய் பிரச்சனைகளை சிறிய மருத்துவ சிகிச்சை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சரி செய்து விட முடியும். 45 வயதுக்கு மேல் தான் கருப்பையில் கட்டி பிரச்சனை வருகிறது.

அதிகமான உதிரப்போக்கு, அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அடிவயிற்றில் வீக்கம் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கட்டி ஏற்படுகிறது. பரம்பரைக் காரணம் மற்றும் 10 வயதுக்குள்ளாகவே பூப்படையும் பெண்களையும் இது போன்ற பிரச்சனைகள் தாக்க வாய்ப்புள்ளது.

மதுப்பழக்கம், நோய்த் தொற்று அடிக்கடி ஏற்படுபவர்களுக்கும் கருப்பைக் கட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு உடலில் அதிகமாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனால் கருப்பையில் கட்டி உருவாகலாம். கருப்பைக் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்க்கவும்.

இறைச்சி வகைகளும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகள், காபியை தவிர்க்கவும். தண்ணீர் அதிகமாகக் குடிக்கவும். பழங்கள், காய்கறிகள் உணவில் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். பழங்களில் ஆப்பிள், கருப்பு திராட்சை, சாத்துக்குடி சேர்த்துக் கொள்ளவும்.

வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள், முளை கட்டிய முழு தானியங்கள், கிட்னி பீன்ஸ் பருப்பு, கருப்பு பீன்ஸ் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்கவும். இவை ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாக சுரப்பதை கட்டுப்படுத்தும்.  

No comments:

Post a Comment

 
நண்பேன்டா