Tuesday 4 March 2014

கற்பை சூறையாடும் ஃபேஸ்புக் நட்பு: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...!



 பெண்கள் ஃபேஸ்புக் நட்பை நம்பி கற்பை பறிகொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.


இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டரில் உள்ளனர்.


அப்படி யாராவது ஃபேஸ்புக்கில் இல்லை என்றால் அவர்களை ஏதோ வேற்று கிரக வாசிகளை பார்ப்பது போன்று பார்க்கின்றனர்.


 இந்த ஃபேஸ்புக்கால் பெண்களுக்கு நேரும் அவலம் பற்றி பார்ப்போம்.


பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் ஃபேஸ்புக்கில் புதியவர்களுடன் நட்பு வைத்துக் கொள்கிறார்கள். இந்த நட்பு ஃபேஸ்புக்கில் பிறந்து, மலர்ந்து வளர்கிறது.


நட்பு ஓரளவுக்கு வளர்ந்தவுடன் அந்த நபர்கள் பெண்களை தங்களை நேரில் வந்து சந்திக்குமாறு கூறுகிறார்கள். பெண்களும் ஃபேஸ்புக் நண்பரை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் சென்றுவிடுகின்றனர்.


ஃபேஸ்புக் நண்பரை நேரில் சந்திக்க சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.


ஃபேஸ்புக்கில் பழக்கமான ஆண் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு கூறினால் அவரை தனிமையில் சந்திக்காதீர்கள். மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக பார்த்து சந்திக்கவும். முதலில் அந்த நபரை அப்படி சந்தித்தே ஆக வேண்டுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.


ஃபேஸ்புக் நண்பரை சந்திக்க பெண்களே தனியாக செல்லாதீர்கள். துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். தனியாக சென்றுவிட்டு அதன் பிறகு கற்பு போச்சே என்று கதற வேண்டாம்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா