Thursday, 6 March 2014

கள்ள நோட்டுகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை ஏன்..?




பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டுகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை,

ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது இது அடிக்கடி மாற்றப்படும் இதனை வரயறை மற்றும் வடிவமைப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா.

இப்படி வந்த ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்களை பற்றி தெறிந்து கொண்டால் ,எளிதாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத்தில் உள்ள எண்ணைக்குறிக்கும்)

1)ஒவ்வொரு ரூபாயிலும் உள்ள "ரைஸெட் இமேஜ்" எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில் "டயமன்ட்" இமேஜ் 500 ரூபாயில் "வட்டவடிவிலும்" 100 ரூபாயில் "முக்கோண வடிவிலும்" 50 ரூபாயில்சதுர வடிவிலும்" இருக்கும் இதனை தொட்டுபார்த்தால் அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.

2)ரூபாயின் கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன் மீது "ஆர்பிஐ""500" என்ற வார்த்தைகள் இருக்கும்.

3)ரூபாயை 45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.

4)வாட்டர்மார்க்கிங் இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள பகுதியில் காந்தி அடிகளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில் தூக்கி பார்த்தால் தெறியும்.

5)காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் "ஆர்பிஐ""500" போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.

6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.

இப்படிபல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய்களின் பண்புகள் அடிகடி மாற்றப்படலாம்,மேலும் இப்போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும் ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா