(அந்த குண்டம்மாவுக்கு பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு சொல்லிட்டே பெரிய பாப்பாவுக்கு போன் செய்கிறாள் சின்ன பாப்பா.)
சின்ன பாப்பா: ஹலோ... ஹலோ... ச்சே.... இவ்ளோ நேரமா ரிங் அடிக்குது, எடுக்க மாட்டிங்கறாளே, இவ ஆடி அசைஞ்சு நடந்து வரவே ரெண்டு நாள் ஆகும். அதனால அடுத்து கால் பண்ணுவோம்.
(அடுத்த கால் செய்கிறாள்)
ஹலோ... ஹலோ... குண்டம்மா சீக்கிரம் போனை எடுடி.
பெரிய பாப்பா: (யாரிது போனை இப்படி அலற வைக்கிறது?) ஹலோ... ஹலோ... நான் தான் பெரிய பாப்பா பேசறேன். நீங்க யாருங்க?
சின்ன பாப்பா: அக்கா, நான்தான் சின்ன பாப்பா பேசறேன். எப்படி அக்கா இருக்கீங்க? ரொம்ப நேரமா போன் பண்றேன். நீங்க எடுக்கவே இல்லை. எங்கக்கா போயிருந்திங்க?
பெரிய பாப்பா: அடியே, நீதான் இப்படி போனை அலற வச்சியா? நான் எங்கடி போவேன்? இங்க வீட்டுல தாண்டி இருக்கேன். ஆனாலும் இப்ப ஒரு மாசமா ரொம்ப பிஸியா இருக்கேன்டி.
சின்ன பாப்பா: என்னக்கா சொல்றிங்க? வீட்டுல இருக்கேன்னு சொல்றிங்க, அப்புறம் ரொம்ப பிசின்னு சொல்றிங்க, புரியற மாதிரி சொல்லுங்கக்கா?
பெரிய பாப்பா: அதுவாடி, கொஞ்ச நாளா என் கணவருக்கு எம்மேல கோவமா இருந்தார்டி. அவரு நல்ல மூடுல இருக்கறப்போ என்னங்க, எம்மேல பாசமா இருக்க மாட்டிங்கறிங்கன்னு கேட்டேன். அப்பத்தான்டி மனுஷன் கொஞ்சம் வாயை தொறந்து பேசினாரு. அதாவது நான் வர வர வெயிட் போட்டுட்டே போறேனாம். உடம்பை கவனிக்கவே மாட்டிங்கறேனாம். அதான் அவர் அதை சொன்னா, எங்கே என்னைய குறை சொல்றார்ன்னு சொல்லி புலம்புவேன்னு, ஒண்ணுமே பேசாம கோவத்துல இருந்திருக்கார்.
சின்ன பாப்பா: ஓ... அப்படியா சங்கதி.. சரி, அவர் சொல்ற மாதிரி நீங்க வெயிட் அதிகமாயிட்டே தான் வறீங்க. கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணுங்க அக்கா.
பெரிய பாப்பா: அடியே, வெயிட் குறைக்க ஒரு மாசமா லேடிஸ் பிட்னெஸ் சென்டருக்கு போயிட்டு இருக்கேன்டி. இப்ப தான் கொஞ்சம் வெயிட் லாஸ் ஆகுற மாதிரி தெரியுது. இப்பத்தான்டி எனக்குள்ள ஒரு நம்பிக்கையே வந்திருக்கு. வெயிட் குறைக்க முடியும்னு...
சின்ன பாப்பா: அக்கா ரொம்ப நல்ல விஷயம்... பிட்னஸ் சென்டருக்கு எவ்ளோ அக்கா பீஸ்? லேட்டஸ்ட் எக்கியூப்மென்ட்ஸ் எல்லாம் இருக்கா?
பெரிய பாப்பா: அடியே, என்னடி அப்படி கேட்டுட்ட? மாசம் சுளையா அறுநூறு ரூபா தரேன்டி, எல்லா லேட்டஸ்ட் எக்கியூப்மென்ட்ஸும் இருக்குடி. ஆரம்பத்துல வார்மப்புல இருந்து ஹெவி எக்ஸர்சைஸ் வரை எல்லாமே இருக்குடி. அதோட டயட்டும் பாலோ பன்றேன்டி. வீட்டுல இப்ப நானும் அவரும் டயட் புட் தான் எடுத்துக்கறோம்.
சின்ன பாப்பா: அக்கா, இப்பவே உங்கள பாக்கணும் போல இருக்கு. ஆனாலும் கொஞ்சம் வேலை இருக்கு. அதனால இந்த வீக் எண்ட்ல அங்க வரேன்.
பெரிய பாப்பா: சரிடி, எப்போ வேணாலும் வாடி.. வேறென்ன சங்கதி?
சின்ன பாப்பா: அக்கா, ஜீ தமிழ் டிவியில போடற சொல்வதெல்லாம் உண்மை ப்ரோக்ராம் பாப்பிங்களா? பெண்கள், பொதுவான குடும்ப பிரச்சனைகளை தீர்க்குற விழிப்புணர்வு ப்ரோக்ராம்...
பெரிய பாப்பா: சில எபிசோட்ஸ் பார்த்திருக்கேன். இந்த மாதிரி ப்ரோக்ராம் அவசியமா இருந்தாலும், நாலு சுவத்துக்குள்ள குடும்பத்துக்குள்ள பேசி தீர்க்குற பிரச்சனைகளும் வெட்ட வெளிச்சத்துக்கு வருதே. அதனால அவங்களோட ப்யூச்சர் ஸ்பாயில் ஆக சான்ஸ் இருக்கேடி.
சின்ன பாப்பா: அக்கா, நீங்க சொல்றது சரி தான். ஆனாலும், அப்படி நாலு சுவத்துக்குள்ள தீர்க்க முடியாமத் தான் இங்க வருதுன்னு சொல்லிக்கறாங்க. இப்படி ப்ரோக்ராம்ல கலந்துகிட்டு பிரச்சனை தீர்ந்தா போதும். நிம்மதி கெடச்சா போதும்னு தான் வராங்கன்னு கேள்விப்பட்டேன். ப்யூச்சர் பத்தி அவங்க கவலைப்பட்டா ப்ராப்ளம் சால்வ் ஆகாதுல. இந்த ப்ரோக்ராம் டைம்ல நான் சீரியல் பார்க்கிறது இல்லைக்கா...
பெரிய பாப்பா: ஆமாண்டி, சீரியலை விட பயங்கர இன்ட்ரஸ்டிங் டர்னிங்கெல்லாம் அந்த ப்ரோக்ராம்ல நடக்குது. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு ஒரே பரபரப்பா தான் இருக்கு. அதனால இந்த மாதிரி விழிப்புணர்வு ப்ரோக்ராம்ஸ் பாக்கலாம்.
சின்ன பாப்பா: அக்கா, இங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு லேடிஸ் பியூட்டி பார்லர் இருக்குல. அங்க போன வாரம் புதுசா ஸ்பா அப்படின்னு தொறந்திருக்காங்க. எங்க தெரு லேடிஸ் எல்லாம் இப்ப அங்க கூட்டமா மொய்க்கறாங்க. நானும் அங்க போலாம்ன்னு பார்த்தா அந்த ஸ்பா ரேட் ரொம்ப அதிகமா இருக்கு. அப்படி ஸ்பான்னா என்னா அக்கா.
பெரிய பாப்பா: அடியே, ஸ்பா அப்படின்னா தண்ணீர்ல குளியல்ன்னு அர்த்தம். அதாவது நேச்சுரல் கிரீம் யூஸ் பண்ணி, மசாஜ், பேசியல், உடம்பை புத்துணர்ச்சி ஆக்கி அழுக்கை நீக்கும் மூலிகை குளியல்ன்னு விதவிதமா நிறைய இருக்கு. ரொம்ப காஸ்ட்லி தான். முன்னாடி பாரீன்ல பேமசா இருந்துச்சு. இப்போ நம்ம நாட்டுக்கும் வந்திருச்சு.
சின்ன பாப்பா: அக்கா நீங்க சொல்றத பார்த்தா அழகு பராமரிப்பின் லேட்டஸ்ட் நுட்பமா இருக்கும் போல. ரேட் காஸ்ட்லியா இருந்தாலும் ஒரு வாட்டியாவது அங்க போயிட்டு வரணும் அக்கா. மொதல்ல அவர் கிட்ட பெர்மிஷன் வாங்கணும். ஒரு நாளைக்கு நீங்களும் வாங்க. ரெண்டு பேரும் போலாம்.
பெரிய பாப்பா: அடியே, இப்பவே மாசம் அறுநூறு செலவு பண்ணிட்டு இருக்கேன். இதுல ஸ்பாக்கும் செலவு பண்ணினா அவரு ரொம்ப கோவப்பட்டிருவார். நீ போயிட்டு வாடி. அப்புறமா யோசிக்கலாம் நானும் வர்றத பத்தி...
சின்ன பாப்பா: ஓகே அக்கா. அக்கா... ஓகேன்னதும் ஒரு விஷயம் ஞாபகம் வருது. இந்த ஹன்சிகா பொண்ணு இருக்குல. சிம்பு கூட கிசுகிசுல சிக்கியிருக்கு. சிம்பு கூட வேட்டை மன்னன் படத்துல ஹன்சிகா ஜோடி சேர்ந்தது மட்டுமில்லாம அடுத்த வாலு படத்துலயும் ஜோடி சேர போறாங்களாம். இதுக்கு சிம்பு ஹெவி ரெக்கமென்ட் பண்ணியிருக்காராம்.
பெரிய பாப்பா: ம்ஹும்... நல்ல ரெக்கமென்ட் தான்... சிம்பு கூட கிசுகிசுல மாட்டறது பெரிய விசயமே இல்லைடி...
(போன் கட் ஆகிறது. திரும்ப பெரிய பாப்பா போன் செய்கிறாள். சின்ன பாப்பா அட்டென்ட் செய்கிறாள்)
சின்ன பாப்பா: அக்கா, போன்ல காசு தீர்ந்து போச்சு. அதான் கட் ஆயிருச்சு. இந்த ஏர்டெல்ல ரொம்ப காஸ்ட்லி அக்கா.
பெரிய பாப்பா: ஏர்டெல் காஸ்ட்லின்னு நீதான் சொல்ற. ஆனா போன மாசம் அதிகமா ஆள் புடிச்சது ஏர்டெல் தான்னு ஒரு புள்ளி விவரம் சொல்லுது. எல்லா மொபைல் காரனும் அவனால பிடுங்க முடிஞ்ச காசை பிடுங்குறான்.
சின்ன பாப்பா: ஆமாங்கக்கா.... அக்கா, அவர் வர்ற நேரம் ஆச்சு. ஏதாச்சும் ஸ்நாக்ஸ் செஞ்சு வைக்கலினா மனுஷன் ருத்ரதாண்டவம் ஆடிருவார்.
பெரிய பாப்பா: என்ன டிபன் செய்யப்போறடி....
சின்ன பாப்பா: பால் பணியாரம். அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதான் செய்யப்போறேன். ஓகே அக்கா... டைம் ஆச்சு.... பை... பை....
பெரிய பாப்பா: ஓகேடி... பை..பை....
(இருவரும் அரட்டையை முடித்தார்கள்)
No comments:
Post a Comment