Thursday, 6 March 2014

பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய சில ஸ்வாராஸ்ய தகவல்கள்...




ஒவ்வொருவரின் வாழ்விலும் பிறந்தநாள் முக்கியமானதானதொன்றாகும்.  தமது கடந்த காலத்தினை மீட்டு எதிர்காலத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு பிறந்தநாள் என்பது விசேடத்துவமானதொன்று எனலாம்.


அந்தவகையில் உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள் வருமாறு;
நண்பர்களுக்கான என் பிறந்தநாள் பரிசாக இந்தப் பதிவு...


Ø  இங்கிலாந்து  நாட்டில் ஒருவர் 80, 90 அல்லது 100 வயதினைக் அடைகின்றபோது அவர் மகாராணியாரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து தந்தியினை பெற்றுக்கொள்வார்.


Ø  கொரிய நாட்டில் இரண்டு பிறந்தநாட்கள் முக்கியமானதாகும். 100வது நாள் மற்றும் 60வது வருடப் பிறந்தநாள் ஆகியவையாகும்.


Ø  சீனாவில் பிறந்தநாள் அன்பளிப்பாக கடிகாரத்தினை வழங்குவதனை தவிர்த்துவிடுகின்றனர். சீன மண்டேரியன் மொழியில் "கடிகாரம்" என்ற பதமானது இறப்பு என்ற பதத்தினை ஒத்தவொன்றாக கருதுகின்றனர். மேலும் சீன நாட்டினர் பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு வெள்ளை, கறுப்பு, நீல  நிறங்களினை உபயோகிப்பதில்லை.


Ø  இஸ்லாமிய உலகில், பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு பச்சை நிறம் நல்லதென கருதுகின்றனர்.


Ø  வியட்னாம் நாட்டினர் தமது பிறந்தநாளினை தமது "டெட் புத்தாண்டு(Tet)" ஆரம்பத்திலேயே கொண்டாடுகின்றனர்.


Ø  உலகில் அதிகமானோர் ஏனைய மாதங்களினைவிடவும் ஆகஸ்ட் மாதத்திலேயே தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம். (உலக மக்களில் 9%) இந்த வரிசையில் அடுத்த இடத்தினைப் பெறுவது ஜூலை, செப்டெம்பர் மாதங்களாகும்.


Ø  உலகில் மிக செலவான பிறந்தநாள் கொண்டாட்டமாக 1996 ஜூலை 13ம் திகதி புருணை சுல்தானின் 50வது பிறந்தநாள் விளங்குகின்றது. இந்தக் கொண்டாட்டத்திற்கு 27.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்பட்டதாம். இச்செலவில் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் 3 இசை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டதாம்.


Ø  பிரித்தானிய மகாராணியாரின் பிறந்தநாளானது பொதுநலவாய அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்தில் ஜூன் முதலாவது சனிக்கிழமையும், நியூசிலாந்தில் ஜூன் முதலாவது திங்கட்கிழமையும், கனடாவில் மே மாத மத்தியிலும் கொண்டாடப்படுகின்றது. எலிசபெத் மகாராணி பிறந்தது 1926ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியாகும்.


Ø  ஒவ்வொரு நாளும் உலகில் சராசரியாக 19 மில்லியன் மக்கள் தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம்.


Ø  ஜப்பான் நாட்டில், வழமையாக 60, 70, 79, 88 மற்றும் 99 வது பிறந்த நாளுக்கே பரிசில்களினை வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படுகின்ற பிறந்தநாள் பரிசுப்பொருட் தொகுதியில் 10இலும் குறைந்த ஒற்றை எண்களில் பரிசுப்பொருட்கள் இருக்குமாம். வழமையாகவே ஜப்பான் நாட்டினர் 4 மற்றும் 9ம் இலக்கங்களை தவிர்ப்பதுடன் வெள்ளை நிறத்தால் சுற்றப்பட்ட பரிசுப்பொருட்களை இறப்புடன் தொடர்புடையதாக கருதுகின்றனர்.


Ø  ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.  பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.


Ø  "ஹெப்பி பேர்த் டே" பாடல் முதன்முதலில் விண்வெளியில் 1969ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி அப்பலோ9 விண்வெளி வீரர்கள் பாடப்பட்டது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா