Friday 14 February 2014

காதலர் தின ஸ்பெஷல் - பாதாம் சாக்லெட் ரெசிபி...!



காதலர் தினத்தன்று உங்கள் காதலரை அசத்த ஆசையா? அப்படியானால், உங்கள் கையாலேயே சாக்லெட் செய்து கொடுங்கள். அதிலும் பாதாம் சாக்லெட் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி மிகவும் ஈஸியானது மட்டுமல்லாமல், மிகவும் சுவையாகவும் இருக்கும்.

இப்போது அந்த பாதாம் சாக்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பார்த்த பின் முயற்சி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.


  • தேவையான பொருட்கள்:
  • கொக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணெய் – 50 கிராம் (உருக வைத்தது)
  • சர்க்கரை – தேவையான அளவு (குறைந்தது 1 கப்)
  • பால் பவுடர் – 1 கப்
  • தண்ணீர் – 3/4 கப்
  • சாக்லெட் மோல்டுகள் – 10-15
  • வென்னிலா எசன்ஸ் – 2 துளிகள்


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

கலவையானது சற்று கெட்டியாகும் போது, அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் பால் பவுடர் சேர்த்து உடனே கட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் கொக்கோ பவுடர் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, எலக்ட்ரானிக் பிளெண்டர் கொண்டு கலவையை நன்கு அடிக்க வேண்டும்.

பின் அதில் பாதாம் சேர்த்து கிளறி, இறுதியில் அதனை சாக்லெட் மோல்ட்டுகளில் ஊற்றி, 45 நிமிடம் அப்படியே உலர வைத்தால், சுவையான பாதாம் சாக்லெட் ரெசிபி ரெடி..!

No comments:

Post a Comment

 
நண்பேன்டா