Friday 14 February 2014

விண்டோஸ் 9 வதந்தியால் விண் 8 விற்பனை மந்தம்...!



பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களை அவ்வளவாகச் சென்றடையவில்லை. புதிய அப்ளிகேஷன்களுக்கும், சிஸ்டம் பயன்படுத்தும் வழிகளுக்கும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை, அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் ஒத்திசைவு போன்றவற்றால், மக்கள் விண் 8க்கு மாற்றிக் கொள்ளத் தயங்கினர். எக்ஸ்பியை விட்டு வெளியேறும் முடிவெடுத்தவர்கள் கூட, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குத் தங்களை மாற்றிக் கொண்டனர்.

ஆனால், அதன் பின், வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களை அடுத்து, விண் 8.1 வெளியானது. இதில் பல புதிய வசதிகள் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் கிடைத்தன. இந்நிலையில், விண்டோஸ் 9 உருவாக்கப்பட்டு வருவதாகப் பலத்த வதந்திகள் வெளியாகியுள்ளன.

அது வெளிவரும் உத்தேச நாள் குறித்தும் பத்திரிக்கைகளில் செய்திகள் ஊகத்தில் வெளி வந்தன. இதனைக் கேள்விப் பட்ட பல நிறுவனங்கள், தாங்கள் வாங்க விருந்த விண்டோஸ் 8 மற்றும் விண் 8.1 பதித்த கம்ப்யூட்டர்கள் வாங்குவதனை ஒத்தி போட்டுள்ளன. மேலும், விண் 7 சிஸ்டத்திற்கு 2020 ஆம் ஆண்டு வரை சப்போர்ட் கிடைக்கும் என்பதால், பொறுத்திருந்து விண்டோஸ் 9 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் எனப் பல நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

இதற்குக் காரணம், தங்கள் ஊழியர்கள் அடுத்தடுத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மாற்றுகையில், வேலை மேற்கொள்வதில் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர். ஆயிரக் கணக்கில் ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் உற்பத்தி இதனால் பாதிக்கப்படுகிறது. எனவே தான், இவை பொறுமை யாக, அடுத்த சிஸ்டம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மாறிக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா