Friday 14 February 2014

சிறையிலேயே வாழ்வதற்காக குற்றங்கள் செய்யும் வினோத மனிதர்...!



சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் நபர்களுக்கு, சிறைவாசம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்காக யாரும் சிறையிலேயே பொழுதைக் கழிக்க மனதார விரும்புவதில்லை.

ஆனால், சிறையில் வழங்கும் சாப்பாடு மற்றும் பாதுகாப்பான தங்கும் இடத்துக்காக சீனாவைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் குற்றச் செயலைச் செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வாங் என்று அழைக்கப்படும் 60 வயது முதியவர்தான் இந்த வினோதமான குற்றவாளி.

திருட்டு, பொது இடங்களில் சண்டையிடுதல் போன்ற குற்றங்களுக்காக 7 முறை வாங் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு வழக்கில் ஒருமுறை 14 வருடங்கள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். ஆனால் சிறை வாசம் முடிந்தபிறகு வெளியில் இருக்க பிடிக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங்கின் பெங்காட்டி பகுதியில் பேருந்தில் சென்றபோது, டிரைவர் இருக்கைக்கு வேண்டுமென்றே தீ வைத்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாங்கிற்கு, சமீபத்தில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதுபற்றி வாங் அளித்த பேட்டியில், “எனக்கு வீடு ஏதும் கிடையாது. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் என்னசெய்வதென்றே எனக்கு தெரியவில்லை. சிறையில் நல்ல உணவும் இருக்க பாதுகாப்பான இடமும் கிடைப்பதால் நான் மீண்டும் சிறைக்கு திரும்பி வர முடிவு செய்தேன். எனவே இக்குற்றத்தை செய்தேன்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா