Friday 14 February 2014

இரவில் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வைக்கும் பில் கேட்ஸ்...!



கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாலே நம் வீட்டு இளசுகள் சாப்பிட்ட கையைக் கூட கழுவாமல் கணினி முன் அமர்ந்திருக்கும் நிலையில், உலகின் பெரும் செல்வந்தரான மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், தினமும் தான் சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அவரது முதலீடுகளின் வாயிலாக ஒவ்வொரு வினாடியும் 114.16 அமெரிக்க டாலர்களை வட்டியாக ஈட்டி வரும் பில் கேட்ஸ், ஆன்லைனில் நேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, தினமும் இரவில் நான் சாப்பிட்ட தட்டுகளை நானே சுத்தம் செய்து வைக்கிறேன். இது எனக்கு மன நிறைவை தருகிறது. ஒரு விஷயம் உங்களுக்கு மன நிறைவை தருகிறது என்றால் அதை செய்யுங்கள். அது மற்றவர்கள் உங்களிடம் எதிர்பார்க்காத ஒன்றாகக் கூட இருக்கலாம் என்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு, இப்போதும், தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க ஒரு நிமிஷம் கூட நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்று அதிரடியாக பதில் அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.


No comments:

Post a Comment

 
நண்பேன்டா