Tuesday 4 February 2014

’காதலர்கள் நல ஆணையம்’ அமைக்க கெஜ்ரிவாலிடம் கோரிக்கை!




காதலர்கள் பூங்காக்களில் சுதந்திரமாக சுற்றி திரியவும், ஓட்டல்களில் அறை எடுத்து தங்கவும் அனுமதிக்க வேண்டும். டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் காதல் சம்பந்தப்பட்ட துறை அறிமுகப்படுத்த வேண்டும்.

 அங்கு, உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது பற்றி கற்று தர வேண்டும்.குறிப்பாக காதலர்கள் குறை தீர்க்க ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கோரிக்கைகளை கெஜ்ரிவால் கனிவுடன் கேட்பார். ஏனெனில் அவரும் காதல் திருமணம் செய்தவர்தான்.

 எனவே, காதலர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை அவர் நிச்சயம் புரிந்துகொள்வார்.”என்று காதலர்களுக்கென ‘காதல் தர்மம்’ (லவ் தர்மா’) என்று அமைப்பின் தலைவர் ஷசாங்க் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் முதல்–மந்திரி கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை கூறி வருகின்றனர். அதேபோன்று காதலர்களும் தங்கள் குறைகளை தீர்க்க ‘காதலர்கள் ஆணையம்’ அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் காதலர்களுக்கென ‘காதல் தர்மம்’ (லவ் தர்மா’) என்று அமைப்பு இயங்கி வருகிறது. அதன் தலைவர் ஷசாங்க் ஆனந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,” தேசிய பெண்கள் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், காதலர்கள் நலன் பாதுகாக்க, காதலர்கள் நல ஆணையம் அமைக்க வேண்டும்.

காதலர்கள் பூங்காக்களில் சுதந்திரமாக சுற்றி திரியவும், ஓட்டல்களில் அறை எடுத்து தங்கவும் அனுமதிக்க வேண்டும். டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் காதல் சம்பந்தப்பட்ட துறை அறிமுகப்படுத்த வேண்டும்.

அங்கு, உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது பற்றி கற்று தர வேண்டும். எங்கள் கோரிக்கைகளை கெஜ்ரிவால் கனிவுடன் கேட்பார் என நம்புகிறேன். ஏனெனில் அவரும் காதல் திருமணம் செய்தவர்தான். எனவே, காதலர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை அவர் நிச்சயம் புரிந்துகொள்வார்.

மேலும், ”விபசாரம் சட்டமயமாக்கப்பட வேண்டும். ஏனெனில் பெண்கள் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் சுதந்திரத்துக்கும், துன்புறுத்தலில் இருந்து விடுபடவும் வசதியாக இருக்கும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாளை (5 ஆம் தேதி) முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு கூடி வலியுறுத்த உள்ளோம். அதற்கு அவர் மறுத்தால், ஜந்தர் மந்தரில் திரண்டு தர்ணா போராட்டம் நடத்த காதலர்கள் முடிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா