Tuesday, 4 February 2014

“பேஸ்புக்” தனது 10-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது...




 சமூக வலைத்தளத்தில் வல்லரசாக வலம் வரும் “பேஸ்புக்” தனது 10-வது பிறந்த நாளை செவ்வாய்க் கிழமை கொண்டாடுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.

அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார். இப்போது பேஸ்புக்வாசிகளின் எண்ணிக்கை 120 கோடியைத் தாண்டிவிட்டது. பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் கடந்த மே மாதம் தனது 30-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

அப்போது பேசிய அவர், இந்த இணையதளம் உலக கோடீஸ்வரர் களில் ஒருவராக என்னை உயர்த் தும் என்று கனவில்கூட நினைத் துப் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். பூஜ்ஜியத்தில் தொடங்கிய பேஸ்புக்கின் வருவாய் இப்போது கோடி கோடியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டில் பேஸ்புக் கின் ஆண்டு நிகர வருமானம் 53 மில்லியன் டாலராக இருந்தது. 2013-ம் ஆண்டில் அதன் வருவாய் இருமடங்கு அதிகரித்து 1.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துவிடும் என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா