Tuesday, 4 February 2014

சச்சின், விஞ்ஞானி ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது..!



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானியும், பேராசிரியருமான சிஎன்ஆர் ராவ் ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சச்சின் டெண்டுல்கர் (40), ராவ் (79) ஆகியோரது சீரிய பணியை கௌரவிக்கும் வகையில், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம், பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.பல்வேறு சாதனைகளைப் படைத்து பாரத ரத்னா விருது பெற்றுள்ள ராவ், தற்போது பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் தர்பார் ஹாலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் மற்றும் அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.இந்தியாவின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷண் இவ்விரண்டு பேருக்கும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இவர்களுடன் சேர்த்து 41 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

கடந்த நவம்பர் 16ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் அறிவித்தார். இந்நிலையில்இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை தெண்டுல்கர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா