Friday 21 February 2014

ஆன்ட்ராயிட் ஃபோன்களுக்கு வந்தது சோதனை..!



உலகத்தின் நெ.1 கைப்பேசி / ஸ்மார்ட்ஃபோன் மற்றூம் டேப்ளட்களுக்கான மென்பொருள் ஆன்ட்ராயிட் எனப்படும் கூகுள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு. இது ஜிஎமெஸ் (GMS) என்னும் முறையில் இந்த மென்பொருளை சாம்சங்க் முதல் அனைத்து நான் ஆப்பிள் ஃபோன் நிறுவங்களுக்கு கொடுக்கிறது.

இதன் மூலம் பல வெர்ஷன்கள் வந்தாலும் எல்லா போன்களும் ஒரே ஆன்ட்ராயிட் மென்பொருளை கொடுப்பதில்லை காரணம் லேட்டஸ்ட் மென்பொருளான ஜெல்லி பீன் ஸ்மார்ட் ஃபோன் என்ற போன்களுக்கு மட்டும் தான் உபயோகபடுத்த முடியும். பட்ஜெட் ரக சின்ன ஃபோன்களுக்கு இதை இன்ஸ்டால் செய்ய மினிமம் 512 எம்பி மெம்ரி தேவை . அதனால் ஜின்சர் பிரட் / கிட்காட் / ஃப்ரோயோ எனப்படும் ஆன்ட்ராயிட் 2.2 இன்னும் பல ஃபோன் கம்பெனிகள் உபயோகபடுத்துகின்றனர்.

இதன் மூலம் வெப் தளங்கள் / செர்ச் இஞ்சின்ஸ் / யூனிகோடிங் / ஆப்ஸ் த்யாரிப்பாளர்களுக்கு பெரும் கஷ்டம் உண்டாகிறது. அதனால் உலகத்தின் பெரிய நிறுவனங்கள் இந்த அப்டேட் இல்லாத ஃபோன்கள் அந்த சைட்டை அல்லது ஆப்ஸை உபயோகபடுத்த முடியாது காரணம் பழைய வெர்ஷனை பிளாக் செய்து விடுகின்றனர். இதனால் கூகுள் ஜி எம் எஸ் முறைப்படி தயாரிக்கும் அத்தனை ஃபோன்களும் – லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யணும் புது ஃபோன்கள் 9 மாத டைமுக்குள் இந்த மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என பிரஸ் ரிலீஸ் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தான் தன்னுடைய சஃப்ட்வேர் அப்டேட்டை உடனுக்குடன் எல்லா வெர்ஷனுக்கும் கிடைக்குமாறு செய்கிறது. அதனால் சின்ன சின்ன கொரியன் செட் / சைனீஸ் செட் இந்த வகை ஃபோன்களுக்கு சோதனை தான். ஏற்கனவே ஆன்ட்ராயிட் ஃப்ராக்மென்டேஷன் (Fragmentation) ஒரு பெரிய சோதனை இதுல இது வேற…….

No comments:

Post a Comment

 
நண்பேன்டா