Friday 21 February 2014

வாட்ஸ்ஆப்பில் அப்படி என்ன இருக்கு என்று ஃபேஸ்புக் ரூ.99,584 கோடி கொடுத்து வாங்குகிறது..?



நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாங்கும் வாட்ஸ்ஆப் என்றால் என்னவென்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாட்ஸ்ஆப்பை வாங்குகிறது என்ற செய்தி தான் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து வாங்கும் அளவுக்கு வாட்ஸ்ஆப்பில் என்ன உள்ளது என்று பலரும் வியக்கின்றனர். ஃபேஸ்புக்கை கவர்ந்த வாட்ஸ்ஆப் என்றால் என்ன என்று பார்ப்போம்.

வாட்ஸ்ஆப் என்பது ஆன்லைன் மெசேஜிங் சர்வீஸ் ஆகும். செல்போனில் இருந்து மெசேஜ், வீடியோ, புகைப்படங்களை நண்பர்களுக்கு, நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப உதவும் அப்ளிகேஷன் தான் வாட்ஸ்ஆப். இது இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது.

வாட்ஸ்ஆப்பை மாதத்திற்கு 450 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். அதாவது ட்விட்டரை விட 200 மில்லியன் பேர் கூடுதலாக வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள். மேலும் தினமும் 10 லட்சம் பேர் புதிதாக வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. இது தான் ஃபேஸ்புக்கின் கவனத்தை வாட்ஸ்ஆப் பக்கம் ஈர்த்தது.

வாட்ஸ்ஆப் மூலம் மாநிலம் விட்டு மாநிலம், ஏன் நாடு விட்டு நாடு மெசேஜ் அனுப்பலாம். அதுவும் கட்டணம் இல்லாமல். இது தான் இளம் தலை முறையினரை வாட்ஸ்ஆப் பக்கம் இழுத்துள்ளது.

செல்போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ்ஆப்பை டவுன்லோட் செய்து அதில் உங்களின் செல்போன் எண்ணை டைப் செய்து, மெசேஜ் மூலம் வரும் கோடை பயன்படுத்தி சரிபார்த்தால் அதை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா