Friday 21 February 2014

காந்தி செத்துட்டாரா..? அதுவும்அக்டோபர்,30-ல் சுடப்பட்டாரா..? பாட புத்தகத்தி்ல்அவலம்..!



 மகாத்மா 1948-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 -ம் தேதி சுடப்பட்டார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மீது ஜப்பான் அணு குண்டு வீசியது. இது போன்ற தகவல்கள் குஜராத் மாநில பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது பெற்றோரை அதிர்ச்சி்க்குள்ளாக்கி உள்ளது.

தேசதந்தை மகாத்மா சுடப்பட்டது 1948-ம்ஆண்டு ஜனவரிமாதம் 30-ம்நாள் இந்தநாள் தியாகிகள் தினமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டின் ஹீரோஷீமா , நாகஸாகி ஆகிய இரண்டு நகரங்களின் மீது அமெரிக்கா தான் அணு குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இவை இரண்டும் மறுக்க முடியாத வரலாற்று சம்பவங்கள். ஆனால் குஜராத் மாநிலத்தின் ஆறாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் மேற்கண்ட தவறான தகவல்களுடன் அச்சிடப்பட்ட புத்தகங்ளையே மாணவர்கள் படித்து வருகின்றனர். இது ஒருசிலஉதாரணம் மட்டுமே மேலும் அறிவியல் உட்பட பல்வேறு பாட புத்தகங்களிம் தவறான தகவல்களே இடம் பெற்றுள்ளது. இது படித்த பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து புகார்கள் மாநில அரசின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு சென்ற வகையில் இரண்டு நபர்கள்கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் பூபேந்தர்சிங்சூடாசாமா கூறிய போதிலும் பள்ளி மாணவர்களிடம் இருந்து தறுவதலாக அச்சிடப்பட்ட புத்த்கங்களை திரும்ப பெறப்படவில்லை.

பள்ளி குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படக்கூடாது. என்பதனை கருத்தில் கொண்டு விரைவாக அச்சிடப்பட்டுள்ளது என கல்வி அதிகாரிகள் கூறினர்.

ஆனால்இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளி இயக்குனரகத்தை சேர்ந்த வசந்த்பட் கூறுகையில் புத்தகங்களை விற்பனைக்காக வெளியி்ல் அனுப்பும் போது அடிப்படை சரிபார்ப்பு பணியை மேற்கொள்வது இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. என தெரிவி்த்தார். மேலும் அரசாங்கமும் இதை கண்டுபிடிக்க எதுவும் செய்யவில்லை என அவர் கூறினார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா