Friday 21 February 2014

வீட்டில் கழிவுநீர் அடைத்துக் கொள்வதை தவிர்க்கும் சில அற்புத வழிகள்..!



நம் ஒவ்வொருவரின் வீட்டிலிம் எதிர்கொள்ளும் வாடிக்கையான பிரச்னைகளில் ஒன்று கழிவு நீர் செல்லும் வழி அடைத்துக் கொள்வது. இதனால் மிகவும் மோசமாக நாற்றம் வீசத் தொடங்கினாலும், இவ்வாறு நடக்கும் போது நாம் செய்து வரும் தினசரி வேலைகளும் பாதிக்கப்படுகின்றன.

இவ்வாறு அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை சரி செய்ய நமக்கு உடனடியாக தேவைப்படுபவர் ஒரு பிளம்பர். தேடிக் கண்டுபிடித்துக் கூட்டி வந்தாலும், அதிகமான விலையை நாம் இதற்கு கொடுக்க வேண்டியிருக்கும். இது போன்ற சூழல்களில் நாம் என்ன செய்யலாம்?

எங்களைக் கேளுங்கள். இந்த சூழலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் யோசனைகளை நாங்கள் கொடுக்கிறோம். இவை உடனடி தீர்வு தருவதுடன், செலவும் இல்லாதவையாக இருக்கின்றன.


ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு, அதில் 1:3 அளவு வினிகர் மற்றும் 1:3 அளவு சமையல் சோடாவை கலக்கவும். இந்த கலவை உடனடியாக நுரைக்கும். எனவே, நேரத்தை வீணாக்காமல் இந்த கலவையை கழிவு நீர் அடைத்துள்ள இடத்தில் போடவும். இவ்வாறு உருவாகும் நுரை, சாக்கடையில் அடைத்துள்ள அழுக்குகள் மற்றும் முடிகளை நீக்கும். சில மணி நேரங்களோ அல்லது இரவு முழுவதுமோ இந்த கலவையை, அடைத்துக் கொண்டுள்ள இடத்தில் இருக்கச் செய்யுங்கள். இப்பொழுது சூடான தண்ணீரை விடவும். மாற்றாக, நீங்கள் சமையல் சோடாவை முதலில் போட்டு விட்டு, பின்னர் வினிகரை போடலாம்.


உங்கள் வீட்டில் துணிகளை தொங்க விடும் ஹேங்கரை எடுத்து, உங்களுடைய வலிமையைக் காட்டி அதனை நேராக நிமிர்த்தவும். இப்பொழுது அதன் ஒரு முனையை மட்டும் வளைத்து, சிறிய ஊக்கு போன்று உருவாக்கவும். இப்போது ஹேங்கரை சாக்கடை அடைத்துக் கொண்டுள்ள இடத்தில் வைத்து, அடைப்பை நீக்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், அங்கே அடைத்துக் கொண்டிருக்கும் அனைத்து விதமான விஷயங்களையும் நீக்க முடியும். ஆனால், இதை செய்யும் போது அடைத்துக் கொண்டிருக்கும் குப்பைகள், அழுக்குகளை வெளியே இழுக்க வேண்டுமே, தவிர, மேலும் உள்ளே தள்ளி விடக் கூடாது. உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அழுக்குகளை வெளியே எடுக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களுடைய சாக்கடைகளை திறமையுடன் சுத்தம் செய்யும் வழிமுறையாகும்.


இந்த முறையை மிகவும் எச்சரிக்கையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். சோடியம் ஹைட்ராக்ஸைடு அல்லது காஸ்டிக் சோடா மோசமான எரிச்சலை உருவாக்கும் குணம் கொண்டுள்ளதால், இந்த வழிமுறை மிகவும் திறனுள்ளதாக இருந்தாலும், கவனம் தேவைப்படுவதாகவும் உள்ளது. முதலில், உங்களுடைய கைகள் மற்றும் கண்களை பாதுகாக்கும் வகையில் இரப்பர் உறைகளை மாட்டிக் கொள்ளவும். ஒரு வாளியை எடுத்து, அதில் 3/4 அளவிற்கு குளிர்ந்த நீரை ஊற்றவும். இந்த தண்ணீரில் 3 கப் காஸ்டிக் சோடாவை போட்டு, நன்றாக கலக்கவும். இந்த கலவையை மெதுவாக நுரைக்கத் தொடங்கும் மற்றும் வெப்பத்தையும் உருவாக்கும். இந்த தண்ணீரை எடுத்து அடைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் ஊற்றி, சுமார் 30 நிமிடங்கள் பொறுத்திருக்கவும். பின்னர் சூடான தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்யவும். தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை இதை செய்யவும்.


1/2 கப் சமையல் சோடாவுடன், 1/2 கப் உப்பை சேர்த்து கலக்கவும். அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையில் இந்த கலவையை ஊற்றி 10-20 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர், சூடான தண்ணீரை ஊற்றவும். சமையல் சோடா, உப்பு மற்றும் சூடான தண்ணீர் ஆகியவை இணைந்து புரியும் வேதி வினையால் சாக்கடைகளை அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்குகள் கரைந்து வெளியேறி விடுகின்றன.


அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை அல்லது கழிவு நீரை சுத்தம் செய்ய உதவும் மிக எளிமையான வழியாக இது உள்ளது. எளிமையான வழி என்றாலும் திறன் மிக்க வழியாக இது உள்ளது. சிறிதளவு தண்ணீரை எடுத்து (கெட்டில், ஸ்டவ் அல்லது மைக்ரோ வேவ்)-ல் கொதிக்க வைக்கவும். இந்த சூடான தண்ணீரை மெதுவாக அடைத்துக் கொண்டிருக்கும் குழாய்க்குள் விடவும். 2 அல்லது 3 நிலைகளுக்குள், சூடான தண்ணீர் வேலை செய்யத் தொடங்கி விடும். இது மிகவும் வேகமான மற்றும் எளிமையான முறையில் சாக்கடையை சுத்தம் செய்யும் வழிமுறையாகும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா