Friday 21 February 2014

இரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்...!



  சிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது? அதுவும் இந்தியா போன்ற நாட்டில்! அழகும் அங்கீகாரமும் சிவப்புக்குத்தான் இருக்கிறது.மற்ற திறமையால் சிலர் பெயர் பெற்றிருக்கலாம்.கலர் அப்படியில்லாமல் இருப்பவர்கள் தாழ்வு மனப்பானமையால் பொசுங்கிப் போய்விடுகிறார்கள்.

  நானும் கொஞ்சம்(?!) கலர் குறைவுதான்.எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? ஆஹா! அது மட்டும் நடந்து விட்டால்,குறைந்தபட்சம் முகம் மட்டுமாவது சிவப்பாகிவிட்டால்? நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.மீசை அரும்பிக்கொண்டிருக்கிறது.அப்போதுதான் அந்த விளம்பரத்தைப்பார்த்தேன்.

  ஆறே வாரங்களில் சிவப்பழகு.மனசுக்குள் மத்தாப்பு.எப்படியாவது வாங்கி விட வேண்டும்.விலையும் அதிகமில்லை.கிராமத்தில் கூட எல்லா கடையிலும் கிடைக்கிறது.அது ஒரு பெரிய விஷயமில்லை.வாங்கிவிட்டேன்.உடனே பயன்படுத்தவில்லை.நாளை காலை முதல்தான் அந்த அதிசயம் நடக்கப்போகிறது

 குளித்துவிட்டு முகத்தை சுத்தமாக துடைத்தேன்.அந்த பொக்கிஷத்தை எடுத்து முதன்முதலாக நெற்றியில் கொஞ்சமாக தடவினேன்.அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்ட்து.அப்புறம் முகம் முழுக்க தேய்த்து கண்ணாடியில் பார்த்தபோது சந்தோஷமாக இருந்த்து.இவ்வளவு அழகாகவா இருக்கிறோம் நாம்?

தெருவில் நடந்து போகும்போது என்னையே உற்று பார்ப்பதுபோல ஒரு உணர்வு.சந்தோஷம்,தன்னம்பிக்கை எல்லாம் வந்து விட்ட்து.மாலை வந்து கண்ணாடி பார்த்தால் பழைய முகமாக இருந்த்து.ஒரே நாளில் மாறிப்போகுமா என்ன? நான் எப்போதும் வாழ்க்கையில் நம்பிக்கையை மட்டும் இழந்த்தில்லை.தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன்.

 இரண்டு வாரமாகியிருந்த்து.சில நாட்களாகவே முகத்தில் ஏதோ மாற்றம் வந்து கொண்டிருப்பதுபோல உணர்ந்தேன்.அன்று ஞாயிற்றுக்கிழமை.முடி வெட்டுமளவுக்கு வளர்ந்துவிட்ட்து.கடைக்கு போய் முடிவெட்டி ஷேவிங்கும் செய்தாயிற்று! வழக்கத்துக்கு மாறாக எரிச்சல்.சிவப்பாகும்போது அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

முகத்தை கண்ணாடியில் உற்று பார்த்தபோது என் முகத்தில் அவ்வளவு சிவப்பு! இவ்வளவு விரைவாக அதுவும் ரத்தச்சிவப்பு! ஆஹா! என் முகம் சிவப்பாகிவிட்ட்து.கை வைத்து பார்த்தபோது பிசுபிசுவென்று ஒட்டியது.உண்மையில் ரத்தம்தான்.கடிக்காரனை முறைத்தேன்.”முகத்தில் சிறுசிறு கொப்புளம் இருந்திருக்கிறது,நான் என்ன செய்ய முடியும்? பார்த்தால் தெரியவில்ல

 கடையில் இருந்தவர் விளக்கம் கேட்டார்.” ஏதாவது ஒத்துக்கொள்ளாத உணவு சாப்பிட்டீங்களா?” நான் அழகு க்ரீம் பற்றி கூறினேன்.” அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.உங்களுக்கு அப்படித்தான் என்று நினைக்கிறேன்.இனிமேல் பூசாதீர்கள்’’ என்றார்.எனக்கு சப்பென்று ஆகிவிட்ட்து.இனி நான் சிவப்பாக மாற வழியே இல்லையா

   பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன சிவப்பழகு க்ரீம்கள். பெட்டிக்கடைகள் தோறும் கிடைக்கிறது.ஆனால்,அதை பயன்படுத்தி யாராவது கலர் மாறியிருக்கிறார்களா? அப்போதைக்கு கொஞ்சம் மெழுகு பூசினாற்போல தெரியும் வித்தைக்கு இருக்கும் வரவேற்பை என்ன சொல்வ

   எனக்கு ஏற்பட்ட்து போல ஒவ்வாமை மட்டுமன்றி ,தோல் புற்றுநோய்க்கும் கூட வழி வகுக்கும் என்கிறார்கள்.ப்ளீச்சிங்,வேதிப்பொருட்களை உள்ளடக்கியவைதான் பெரும்பான்மையான க்ரீம்களும்.தோலுக்கும் உடலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதே நிஜம்.எந்த தோல்நோய் நிபுணரும் இவற்றை பரிந்துரைப்பதில்லை மஞ்சள்,சந்தனம்,தேன்,ப்ப்பாளி,தயிர் போன்ற இயற்கைப்பொருட்கள் முகத்துக்கு பொலிவு தருபவை.இயற்கைக்கு நிகர் வேறில்லை.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா