Wednesday, 5 March 2014
சர்க்கரை மூலம் மொபைல் ஃபோனை பத்து நாள் வரை உபயோகபடுத்தலாம்…!
எல்லா மொபைல் ஃபோனுக்கும் உள்ள காமன் பிரச்சினை பேட்டரி லைஃப்……..ஏற்கெனவே சொல்லியிருந்தேன் சுகர் பேஷன்ட் மாதிரி பேட்டரி சார்ஜரோடு ஆன்ட்ராயிட் அங்கிள்களும் ஆண்டிகளும் சுற்றுவதை பார்த்திருப்போம், ஆனால் இன்னைக்கு நான் சொன்னது உண்மையாகி போச்சு.
இது என்ன? சர்க்கரை மூலம் புது வகை பேட்டரிகளை உருவாக்கியுள்ளனர் வர்ஜினியா பாலிடெக்னிக் மற்றும் ஸ்டேட் யுனிவர்ஸிட்டி.
இந்த வகை பேட்டரிகள் சர்க்கரையை கொண்டு ஒரு எனர்ஜியை உருவாக்கும். இதன் மூலம் பத்து நாள் வரை அந்த பேட்டரி உயிர்கொடுக்கும். இந்த பேட்டரி தற்போது சிங்கிள் யூஸ் பேட்டரி – ஆனால் ரீசார்ஜபிள் ஆப்ஷன் விரைவில் வர இருக்கிறதாம்.
இதன் எடை சாதாரண பேட்டரியை விட பாதி தான் இதனால் மொபைல் ஃபோன் எடையும் பாதியாய் குறையும். இது எப்படி வேலை செய்கிறது?
நம் உடம்பை போலவே சர்க்கரை சாப்பிட்ட உடன் அது எனர்ஜி ஆகி சர்க்கரையானது கார்பன் டயாக்ஸைடாக மாறி தண்ணீர் எலக்ட்ரானை விடுவிக்கிறது. இந்த வகை என்ஞ்மைகள் சரியாக ஆறு சைக்கிள்கள் வேலை செய்து 10 நாள் வரை பவரை கொடுத்து கொண்டே இருக்கும்.
இது பயோ வகை அதனால் இயற்க்கைக்கு ஆபத்து இல்லாதது. மக்கியும் போகும் 2 வருஷத்துக்குள் இதை வெளியே வீசும் பட்சம். அண்ணாச்சி சுகர் பேட்டரி ஒன்னு டக்குனு தாங்க சார்ஜரை கானும் எங்க வச்சேன்னு தெரியலைனு சொல்ற நேரம் அதி தூரம் இல்லை!
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment