கொழுப்பு மிக முக்கியமான சத்துப் பொருள் என்பதால், உணவு மூலமாகக் குறிப்பிட்ட அளவில் அது நமக்குக் கிடைக்க வேண்டும்.
ஆனால் எல்லோருக்கும் ஒரே அளவில் கொழுப்புச் சத்து தேவைப்படுவதில்லை.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிலோ எடைக்கு சுமார் 5 முதல் 7 கிராம் வரையும், சிறுவர்களுக்கு (3 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள்) சுமார்20 முதல் 50 கிராம் வரையும் 13 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு தினமும் 30 முதல் 70 கிராம் வரையும், பெரியவர்களுக்கு 20 முதல் 60 கிராம் வரை கொழுப்புச் சத்து அவர்களின் உழைப்பைப் பொறுத்தும் தேவைப்படும்.
தினமும் சுமார் 15 கிராம் அவசியமான கொழுப்பு அமிலங்கள் பெரியவர்களுக்குத் தேவைப்படும்.
நமக்குத் தினந்தோறும் தேவைப்படும் சக்தியில் 30 சதவீதம் கொழுப்பு உணவுகளின் இருந்து கிடைக்க வேண்டும். அவற்றில்,
பூரிதமான கொழுப்பு 7 சதவீதத்திற்கும் குறைவானதாகவும் பல பூரிதமாகாத கொழுப்பு அமிலங்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் ஒற்றைப் பூரிதமாகாத அமிலங்கள் 13 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
தினமும் தேவைப்படும் கொலஸ்ட்ராலின் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 200 மி.கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment