Wednesday 5 March 2014

ஃபேஸ்புக் கம்பெனி டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை வாங்க போகிறது..!



ஃபேஸ்புக் நிறுவனம் நேற்று கடைசி சுற்று பேச்சுவார்த்தையில் உள்ளது டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன். ஃபேஸ்புக்குகும் ஏரோஸ்பேஸுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் – கூகுளின் லூன் / சிறிய சாட் மூலம் உலகம் முழுவதும் இலவச இன்டர்னெட் என அத்தனை கம்பெனியும் உலகின் எந்த ஒரு மூலைக்கு இன்டர்னெட்டை எப்படி எடுத்து செல்வது / இலவசமாய் வழங்குவது என டீலை ஃபைனலைஸ் செய்துகொண்டு 2015 முதல் இலவச இன்டர்னெட் வான் வெளி மூலம் சாத்தியம் என நிருபிக்க போகிறது.

அதே நேரத்தில் ஃபேஸ்புக்கும் தன் 100 கோடி சந்தாகாரர்களை எப்படி 300 – 400 கோடியாய் மாற்றுவது என யோசிக்கையில் தானும் இலவச இன்டர்னெட்டை அதாவது ஃபேஸ்புக் உபயோகிக்க அவர்களே இன்டர்னெட்டை தர யோசித்து ஏற்கனவே டைட்டன் ஏரோஸ்பேஸ் மூலம் ஆளில்லா விமானத்தின் மூலம் இன்டர்னெட் பெறுவதை சக்ஸஸ் ஆக்கி காட்டியதால்தான் அந்த நிறுவனத்தை வாங்க இப்போது முயல்கிற்து.

ஒகே டைட்டன் ஏரோஸ்பேஸ் இன்டர்னெட் மூலம் எப்படி இது சாத்தியம்.? – டைட்டன் ஏரோஸ்பேஸ் 100 கிலோ பிளஸ் ஆளில்லா சூரிய சக்தியில் மட்டும் இயங்கும் விமானத்தை கண்டுபிடித்து அதை அவர்கள் 104 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து ஐந்து வருடம் வரை தரையிரக்காமல் பறந்து கொண்டே இருக்கு வகையில் அமைத்தது மட்டும் இல்லாமல் அதன் மூலம் சாட்டிலைட்டில் இருந்து சிக்னலை எடுத்து தரைக்கு இன்டர்னெட்டை தர முடியும் என நிரூபித்ததால் இது சாத்தியமாகிறது.

அத்துடன் இந்த டெக்னாலஜி மூலம் 50-60 விமானங்கள் இருந்தால் உலகில் உள்ள அத்தனை இன்டர்னெட் இல்லாத இடத்தில் இன்டர்னெட் இதன் மூலம் கொடுக்க முடியுமாம். இதான் ஃபேஸ்புக் வாங்குற நோக்கம். நீங்க இந்த விமானம் எப்படி பறக்குது – எப்படி இன்டர்னெட்டை சேட்டிலைட் மூலம் தரும்னு பாருங்கோஓஓஓஓஓஓஓஓஒ –

No comments:

Post a Comment

 
நண்பேன்டா