Wednesday, 5 March 2014

அசிடிட்டியை ஏற்படுத்தும் பித்த நீரின் சுரப்பை குறைக்க சில டிப்ஸ்...



பித்த நீர் என்பது உங்கள் உடலில் இருக்கும் ஈரலில் இருந்து வெளிப்படும் நீர்மமாகும். உட்கொண்ட உணவின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இந்த பித்த நீர் உதவுகிறது. ஈரலில் உற்பத்தியாகும் இந்த பித்த நீர், பித்தப்பையில் தேங்கியிருக்கும்.

பித்த நீரில் 80-90% வரை தண்ணீர் தான் உள்ளது. மீதமுள்ள 10-20%-ல் பித்த நீர் உப்பு, கொழுப்பு, சளி மற்றும் கனிமமற்ற உப்புகள் அடங்கியிருக்கும். பித்த நீரின் உற்பத்தியும் கழித்தலும் உங்கள் உடலின் செயல்முறை தேவைப்பாட்டை பொறுத்தே அமையும். பித்த நீரின் கழித்தல் என்பது ஈரல் செயல்பாட்டில் குறை இருக்கும் போது ஏற்படும்.

பித்த நீர் அதிகமாக உற்பத்தியாகும் போது குமட்டலும் வாந்தியும் ஏற்படும். ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் செரிமான சம்பந்த பிரச்சனைகள் போன்ற காரணங்களால் அளவுக்கு அதிகமான பித்த நீர் உற்பத்தியாகும்.

பித்த நீர், அளவுக்கு அதிகமான சுரக்கும் போது, குமட்டலும், வாந்தியும், மன உளைச்சலும் ஏற்படும். தேவைக்கு மேலான உணவுகளை உண்ணும் போது, அளவுக்கு அதிகமான பித்த நீர் கழிவு ஏற்படும். அதனால் நீங்கள் உண்ணும் உணவின் அளவில் கவனம் தேவை. அதே போல் தூங்க செல்வதற்கு முன்னாள், அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது. தேவைக்கு அதிகமாகவும் உண்ணக்கூடாது. வலுக்கட்டாயமாக உணவை உள்ளே திணிக்காதீர்கள். சரியான நேரத்தில் சரியான அளவுகளில் உணவை உண்ணுவது, அளவுக்கு அதிகமான பித்த நீர் சுரப்பதை தடுப்பதற்கான டிப்ஸாகும்.

உண்ணும் உணவு அளவில் செலுத்தும் கவனத்தை அதன் தரத்தில் செலுத்துவதும் அவசியம். அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை பொருட்கள் நிறைந்த கொழுப்புச்சத்துள்ள உணவுகள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். அதனால் பித்த நீர் அளவுக்கு அதிகமாக சுரக்கிறது. அளவுக்கு அதிகமான பித்த நீர் சுரத்தலை தடுக்க, அதிக கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்க்கவும். ஜங் உணவுகள், சீஸ் நிறைந்த உணவுகள் மற்றும் சர்க்கரை நிரப்பிய உணவுகளும் இதில் அடக்கம்.

அளவுக்கு அதிகமான பித்த நீரை தடுக்க, உங்கள் உடல் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும். உணவு செரிமானத்திற்கு தண்ணீர் பெரிதும் உதவும். இதனால் பித்த நீர் சுரப்பதும் குறையும். நாள் முழுவதும் அதிகமாக தண்ணீர் குடிப்பது, அளவுக்கு அதிமான பித்த நீர் சுரத்தலை தடுப்பதற்கான சிறந்த வழியாகும். சொல்லப்போனால், காலை எழுந்தவுடன், முதல் வேலையாகவும், இரவு தூங்கச் செல்வதற்கு முன், கடைசி வேலையாகவும், தண்ணீர் குடித்தால் செரிமான அமைப்பு மேம்படும். மேலும் வயிற்று பொருமல், குமட்டல், இரப்பைக் குடலழற்சி மற்றும் மன உளைச்சலைப் போக்கும்.

பித்த நீர் அதிகமாக சுரக்கும் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், அமிலங்கள் அடங்கிய அனைத்து வித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். காபி, சிட்ரஸ் பழச்சாறுகள், எலுமிச்சை சாறு போன்றவைகளை தவிர்க்க வேண்டும், முக்கியமாக உங்கள் இரவு உணவை முடித்த பிறகு. மேலும் அசிடிட்டியை உண்டாக்கி பித்த நீர் சுரத்தலை அதிகரிக்கும் அனைத்து உணவுகளையுமே தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி என்பது அனைத்து வியாதிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது. சீரான முறையில் எடற்பயிர்சியில் ஈடுபடும் போது, உடல் ஆரோக்கியத்துடன், நோய் நொடி இல்லாமல் இருக்கும். அதே போல், பித்த நீர் பிரச்சனைகளை குறைக்க, உடற்பயிற்சி செய்வதும் ஒரு சிறந்த டிப்ஸாக விளங்குகிறது. செரிமானத்தை தூண்ட உணவு அருந்திய பின் ஒரு நடை, செரிமானத்தை மேம்படுத்த யோகா மற்றும் சீரான ஜிம் உடற்பயிற்சிகள் போன்ற அனைத்துமே உங்கள் உடலில் உள்ள பித்த நீரின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா