Wednesday 5 February 2014

உயிறற்றவரின் கண் செல்கள் மூலம் விழி இழந்த கண்களுக்கு ஒளி..!



கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை ரெடினல் ஸ்டெம் செல்களைக் கொண்டும், இருதய கோளாறுகளை போக்க இருதய ஸ்டெம் செல்களைக் கொண்டும், அல்ஷிமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றை குணப் படுத்த நரம்பு ஸ்டெம்செல்களும், தசை திசுக்களின் குறைபாடுகளை களைய மஸ்கோஸ்கெலிடல் ஸ்டெம் செல்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் சோதனைகளின் பல்வேறு நிலை களைக் கடந்து வெற்றிகரமாக மனிதர்களில் சிகிச்சை யளித்து வரும் நிலையில் தற்போது இறந்தவரின் கண் செல்கள் மூலம் பார்வையற்றோர்க்கு பார்க்கும் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.அதிலும் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு உயிரற்றவரின் கண்களின் செல்கள் மூலம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் பொருட்களை அடையாளம் கண்டறியும் அளவுக்குத் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உயிரிழந்தோரின் கண்களின் பின் உள்ள ஒருவகையான செல்கள் மூலம் பார்வையற்ற எலிகளுக்கு அடையாளம் காணும் திறனை உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு ” ஸ்டெம் செல் மாற்று மருந்து ” என பெயரிட்டுள்ளனர்..இதனை பார்வையற்றோர்க்கு வழங்கும்போது அவர்களால் முழுப்பார்வையை திரும்ப பெற முடியாவிட்டாலும் பொருட்களை எளிதாக இனம் கண்டறிய முடியும் என லண்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மேலும் இதற்கான ஆராய்ச்சி இன்னும் மூன்று வருடங்களில் தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு கண் பின்புற செல்லான “முல்லர் கிளையல்” பயன்படுகிறது.”இந்த “முல்லர் கிளையல்” செல் மாற்று கண்டுபிடிப்பானது பார்வை குறைபாடுகளுக்கான சிகிச்சையில் மைல்கல்லாக அமையும்”என்று லண்டனின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பால் கோல்விலே-நாஷ் கூறியுள்ளார்.உடலின் மற்ற செல்களின் பயன்பாட்டை போலவே இக்கண் செல் ஆராய்ச்சியும் வெற்றிபெற்றால் உலகில் பார்வையற்றவர்களே இல்லாமல் செய்துவிட முடியும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா