Wednesday, 5 February 2014
பாழாய் போன ‘’சிம் கார்டு’’ செய்யும் சில்மிஷங்கள்..!
இப்போதெல்லாம் ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட ‘’சிம்’’ களை வைத்து பேசுவது சர்வசாதாரணமாகிவிட்டது. நவீன உலகத்தில் இதுவெல்லாம் சகஜம் தான் என்றாலும் இந்த “சிம்” வசதிகளைப் பயன்படுத்தியே ஊரையும் தங்கள் வீட்டையும் ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது தான் வியப்பானது. சரி விஷயத்துக்கு வருவோம்.
அன்று அந்த பஸ்ஸில் சனகூட்டம். எப்படியோ எனது நண்பருக்கும் ஒரு சீட் கிடைத்துவிட்டது. அருகில் ஒரு வாலிபமிடுக்கோடு பெண் ஒருவர் இருந்தார். நண்பருக்கோ பெண் என்றால் சற்று அலர்ஜி. இருந்தாலும் வழியில்லை. கொஞ்சம் அவரை அவதானிக்கவும் தவறவில்லை.
பஸ்ஸில் சனக்கூட்டம் என்பதால் இடையிடையே அந்தப் பெண் மீது உரசவும் நேர்ந்தது. என்ன செய்வது நிலைமை அப்படி. இப்போது அந்தப் பெண் தனது பையிலிருந்த கைத் தொலைபேசியை எடுத்தார். உடனே கட்டளைகள் பறந்தன. நேரத்தோடு வீட்டுக்கு வந்துவிடுங்கள் வரும் போது கொத்து ரொட்டி வாங்கி வாருங்கள். கொடியில் காயும் உடுப்புகளை உள்ளே எடுத்துப் போடுங்கள் என்றெல்லாம் நீண்ட பட்டியல் போட்டார். அதேபோன்று மகளுக்கும் போன் செய்து 6 மணிக்கு முன்னர் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எவ்வளவு பொறுப்பான குடும்பப் பெண், தனது கணவருடனும் மகளுடனும் எவ்வளவு பிரியமாகப் பேசுகிறார் என்று எண்ணி வியந்தார் நண்பர்.
அப்படியே பஸ் ஒரு ‘’சடின் பிரேக்’’ போட்டது. அந்தப் பெண் மீது கூடவே சாய்ந்துவிட்ட நண்பர் ‘’சொறி’’ என்று கூறி சற்று தள்ளி அமர்ந்தார்.
அடுத்த கனமே அந்தப் பெண் தான் பயன்படுத்திய போனின் ‘’சிம்மை’’ கழற்றி தனது பைக்குள் போட்டுக் கொண்டார். உடனே மற்றமொரு ‘’சிம்மை’’ யும் மாற்றிவிட்டார்.
காசு முடிந்துவிட்டதாக்கும் என்பது நண்பரின் எண்ணம். அப்போது தான் அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. எங்கே இருக்கிறீர்கள்? காரிலா, பைக்கிளா வந்தீர்கள்? யாருமில்லாத இடமாக இருந்தால் நல்லது. நான் ஸ்டேடியம் அருகில் வந்து போன் செய்கின்றேன். நீங்கள் மிகவும் கவனம், வீட்டுக்கு கால தாமதமாக வருவதாகக் கூறியுள்ளேன் என்று கூறியுள்ளார். அப்போது தான் மறு முனையில் அவரது கள்ளக் காதலன் என்பது நண்பருக்கு வெளிச்சது. நண்பருக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்படியே ஒரு கனம் அதிர்ந்து போனார். தன்னையே நம்ப முடியாமல் தனது கைகளையும் சற்று கிள்ளிப் பார்த்துக் கொண்டார். எல்லாமே இந்தப் பாழாய் போன ‘’சிம்’’ செய்யும் சில்மிஷங்கள் தான்.
Labels:
அனுபவம்,
தொழில்நுட்பம்,
பெண்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment