இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரை எனப்படும் சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இப்படிதான் நீங்களும் தினமும் அளவுக்கு அதிகமான சர்க்கரை சேர்த்துக் கொள்பவரா? ஆம் எனில் உங்களுக்கான அதிர்ச்சி தகவல் தான் இது. இதனால் இதய நோய் உங்களை விரைவில் தாக்கும் என்பதுடன் எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.
இதற்கிடையில் வழக்கமாக பருகும் காபி, டீ, உட்பட பானங்களில் சர்க்கரை போதவில்லை என்று கூறி எக்ஸ்டரா சர்க்கரையை சேர்த்து சிலர் பருகுவார்கள். மேலும் சிலர் இனிப்பு பலகார வகைகளை அதிகமாக உன்பர். இவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய அமெரிக்க நோய் தடுப்பு ஆணையம், ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தினமும் அதிகமா சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைந்த அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 2000 கலோரி உணவுகளை ஒருவர் எடுத்துக்கொள்வதாகவும், இதோடு சேர்த்து 34 கிராம் சோடா சேர்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் சோடா, மற்றும் சர்க்கரை பானங்களை பருகுவதை அமெரிக்காவில் பலர் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த பழக்கத்தால் இவர்களில் பலருக்கு இதயநோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க நோய் தடுப்பு ஆணைய பேராசிரியர் குயான்சி யாங் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஏறபடும் இதய நோய் பாதிப்பால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கேன்டிடா எல்பிகன்ஸ்’ என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை இன்னும் அதிகளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக “சுக்ரோஸ்’ உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது. காபி அல்லது டீ-யில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி சர்க்கரையை மட்டுமே சேர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடாமல் இருந்தால், இன்னும் சிறப்பு தான். எனவே, மெல்ல கொல்லும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment