நமது உடலில் உள்ள உறுப்புகளில் இதயமே நாம் உயிரோடும், துடிப்போடும் வாழ்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆரோக்கியமான இதயமே, ஆரோக்கியமான மற்றும் நீண்ட வாழ்வை நமக்குத் தரும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் தானியங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கொலஸ்ட்ராலை குறைப்பது மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.ஓட்சில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஒமேகா அமிலங்கள் போன்றவை அடங்கி உள்ளன.இவை நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. எனவே ஓட்ஸ் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்த, சிறந்த காலை உணவு.
ப்ரௌன் பிரட் சாண்ட்விச்
பொதுவாக முழு தானியங்களில் வைட்டமின் மற்றும் தாது பொருட்கள் நிறைந்த நிறமி அதிக அளவில் அடங்கி உள்ளன. ப்ரௌன் பிரட்டானது, முழு தானியங்களால் செய்யப்படுகிறது.இது போலவே காய்கறிகளில் அதிக அளவில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் மற்றும் உடல் நலத்திற்கு தேவையான சத்துகள் அடங்கி உள்ளன.இவை இரண்டும் கலந்து செய்வதால், இது இதயத்தை நல்ல முறையில் பேண ஆரோக்கியமான மிக சிறந்த உணவாக அமைகிறது.
ப்ரௌன் பிரட் சாண்ட்விச், பொதுவாக தக்காளி, வெள்ளரி, கீரை இலைகள் மற்றும் வெங்காயம் போன்றவற்றால் தயாரிக்கப்படுவதால் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது.
இதயத்தின் நலத்திற்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகளை விட, இந்த சாண்ட்விச் பல மடங்கு சிறந்தது.
சூப்
சூப் விரைவில் தயாரிக்கக்கூடிய, வயிற்றை நிரப்பும் ஆரோக்கியமான சத்துள்ள உணவு.சூப்பானது பல வகையான காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.கீரை மற்றும் தக்காளி சூப்பில் சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆச்சிடன்ட்கள் அதிக அளவில் அடங்கி உள்ளதால், அவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
காய்கறி குழம்பும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சிறந்த உணவு.
சூப்பினை மாலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக் கொள்வது நல்லது.
முளைக்கட்டிய தானியங்கள்
முளைக்கட்டிய தானியங்களில் கொலஸ்ட்ராலின் அளவை சரியான அளவில் வைப்பதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துகள் அதிக அளவில் அடங்கி உள்ளன.
ஒரு கிண்ணம் அளவு முளைகெட்டிய தானியங்களோடு வெங்காயம், தக்காளி மற்றும் மசால் பொருட்கள் கலந்து உண்டால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
முளைக்கட்டிய தானியங்களில் சுவைக்காக எலுமிச்சை, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
தயிர் மற்றும் பழங்கள்
தயிர் மற்றும் பழங்கள் கலந்த கலவையானது ஒரு ஆரோக்கியமான, வயிற்றை நன்கு நிரப்பும், இதயத்திற்கு நல்ல ஆற்றலை அளிக்கும் சிறந்த உணவு.
இது குறைந்த அளவு கொலஸ்ட்ராலையும், அதிக அளவில் ஆண்டி ஆச்சிடன்ட்களையும் பெற்றுள்ளது.
இதனால் தயிர் மற்றும் பழங்கள் கலந்த கலவை, சுவை மிகுந்த நொறுக்குத்தீனியாக அமைகிறது.
இந்த கூட்டு உணவானத இதயத்திற்கு தேவையான பல நன்மைகளையும், குறைந்த அளவிலான நிறைவுற்ற கொழுப்பையும் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment