Saturday 1 March 2014

பணக்காரர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன வித்தியாசம்..?



இந்த உலகத்தில் பணக்காரராக மாற வேண்டும் என்று ஆசை படாதவர் யாரேனும் இருக்க முடியுமா? வெகு சிலரை தவிர, அனைவருக்கும் இந்த ஆசை இருக்கத் தான் செய்கிறது. பணக்காரராக மாறுவதற்கும் அந்த அந்தஸ்தை நிலை நிறுத்துவதற்கும் சில தகுதிகள் இருக்கிறது. அது தெரியாததால் தான் பலராலும் பணக்காரராக முடிவதில்லை. பணக்காரராக கடும் உழைப்பும், தெளிவான அறிவு மட்டும் போதாது. வேறு என்ன வேண்டும் என்று தானே கதைக்கிறீங்க..

ஒரு கோடீஸ்வரன் மற்றவர்களிடமிருந்து எவ்வாறு மாறுபடுகிறான்? அது அவர்களின் நிகர சொத்து மதிப்பில் உள்ள பூஜியங்கள் மட்டுமா அல்லது அவர்களின் சிந்தனை, மனப்பான்மை மற்றும் முற்றுணிபு போன்றவைகளாலும் தீர்மானிக்கப்படுகிறதா? மற்றவர்கள் மத்தியில் ஒரு பெரும் பணக்காரரின் குணாதிசயங்கள் தனித்துவமானதாக இருக்கும். அப்படி என்ன குணாதிசயங்கள்?? இதை பின்பற்றினால் நாமும் பணக்காரராக மாறலாம்.

நீங்கள் உங்களை தன்னம்பிக்கை நிறைந்தவராக கூறிக் கொள்ளலாம், ஆனால் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு கூட சில காலங்களில் தன் ஆற்றல்கள் மீது ஐயங்கள் எழும். அதனை தடுக்க இயலாவிட்டாலும் கூட, சுய ஐயங்களை கடந்து செல்ல சில வினைமுறைத் திறன்களை வகுக்கலாம். வசதி மற்றும் வெற்றியின் மீதான ஐயங்களை கோடீஸ்வரர்கள் மூட்டை கட்டி விட்டு, அவர்களின் இலக்கை நோக்கியே பயணிப்பார்கள். Show Thumbnail

பணக்காரர்கள் உறுதியான தெளிவான இலக்குகளை நிர்ணயித்து கொள்வார்கள். பின் அந்த இலக்கை போதிய காலத்திற்குள் அடைய, ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் தொடர்ச்சியாக பாடு படுவார்கள். ஆனால் நாம் இலக்கை மட்டுமே நிர்ணயித்து கொண்டு, அதை மறந்தே போகிறவர்கள், பெரிதாக சாதிக்க போகும் வாய்ப்பை இழக்கிறார்கள்.

பணக்காரர்கள், அடுத்த கட்ட காரியங்களை எடுப்பதற்கு முன்பும், பிறருக்கு உதவுவதற்கு முன்பும், தங்களின் வேலைகளை முதலில் முடிப்பார்கள். தங்கள் அட்டவணையை சரியாக பின்பற்றி, பிறர் கூறுவதை பற்றி கவலை கொள்ளாமல், இலக்கை அடைய சோர்வடையாமல், கடினமாக வேலை செய்வார்கள். சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பை மீறி, தங்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, கல்லூரி படிப்பை துறந்த மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களை எப்படி நாம் மறக்க முடியும்.

இவ்வுலகில் மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் - நினைத்தை நடக்க வைப்பவர்கள்; நினைத்தது நடக்க காத்திருப்பவர்கள்; 'என்ன நடந்தது' என்று எப்போதுமே கேட்பவர்கள். பணக்காரர்கள் இதில், முதல் ரகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் எப்போதுமே தொடக்க முயற்சிகளை எடுத்து அதனை சாதிப்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல், தனியொரு ஆளாக, நடக்கும் அனைத்தையும் சமாளித்து, மனதுக்கு சரியென பட்டதை செய்வார்கள்.

பணக்காரர்கள் எதையுமே அரை குறையாக விடுவதில்லை - அது சொந்த உறவுகளாகட்டும் அல்லது தொழில் ரீதியான விஷயமாகட்டும். எந்த ஒரு செய்திட்டத்தையும் முடிக்காமல் விட மாட்டார்கள். அதே போல் அவர்களின் பில் தொகைகளையும் கட்டாமல் இருக்க மாட்டார்கள். வேலைகளை தள்ளி கொண்டே சென்றால் உங்கள் ஆற்றலுக்கு அது முட்டுக்கட்டை போட்டு, உங்கள் சிந்தனைகளை சிதற விடும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரிவதால், சாமர்த்தியமாக நடந்து கொள்வார்கள்.

அவர்களுக்கென சில இலக்குகள் இருப்பதால், அதற்கு இடையூறாக இருக்கும் விஷயங்களுக்கு எப்போது, எப்படி 'வேண்டாம்' என்று சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். நீங்கள் எந்தளவுக்கு வசதியாக இருக்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்களை அனைத்திலும் உட்படுத்த பலரும் முயல்வார்கள் என்பது தெளிவான ஒன்றே. ஆனால் மறுக்கும் கலையை ஒருவன் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அவன் சீக்கிரத்திலேயே பிரச்சனையில் சிக்கிக் கொள்வான்.

பணக்காரர்கள் அவர்கள் விரும்பியதையே செய்வார்கள். அதற்கு காரணம் அதில் கிடைக்கும் சுதந்திரம் மட்டுமல்லாது விரும்பி செய்யும் எந்த வேலையானாலும் நன்மையையே ஈட்டி தரும் என்பது அவர்களுக்கு தெரியும். சாதாரண மக்களுக்கு வேலை பிடிக்கவில்லை என்றாலும் கூட, பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் அதனை செய்வார்கள். ஆனால் பணக்கார்கள் அப்படி யோசிப்பதில்லை.

எல்லோரும் சொல்வதை போல், சொத்தை இழந்தால் ஏதோ ஒன்றை தான் இழப்போம்; ஆனால் உடல்நலத்தை இழந்தால், அனைத்தையும் இழந்ததை போலாகும். பணக்காரர்கள் பல நேரங்களில் சிக்கனமாக இருந்தாலும் கூட, ஆரோக்கியத்தை பெறுவதற்கும், நல்ல கல்வியையை பெறுவதற்கும் முதலீடு செய்ய தயங்குவதில்லை. இந்த முதலீடு அவர்களை பணக்காரர்களாக மாற்றும். எப்படி என்று தெரிய வேண்டுமா?

மிகவும் சுலபம்; ஆரோக்கியத்தையும் நல்ல கல்வியையும் பெற்றிருந்தால், அவர்களால் புது தொழிலை ஆரம்பித்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட முடியும். வியாபாரம் வெற்றியடைய வேண்டுமானால், தொழிலில் ஈட்டிய லாபத்தை மீண்டும் அதில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வகை முதலீடு உங்களை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடனும் வைத்திருக்கும்.

பணக்காரர்கள் வேலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குடும்பத்திற்கும் கொடுக்கிறார்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவதையும் சமுதாயத்தோடு ஈடுபடுவதையும் அவர்கள் தவிர்ப்பதில்லை. பணக்காரர்களில் 97% மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களையும் வாழ்க்கையை அணுகும் முறையையும் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று பாஸ்டன் கல்லூரியை சேர்ந்த பால் ஜி. செர்விஷ் மற்றும் ஜான் ஜே. ஹாவென்ஸ் நடத்திய ஆய்வு கூறுகிறது.

மனிதனின் மனப்பான்மை இரண்டு வகைப்படும் - நல்ல மனப்பான்மை மற்றும் கெட்ட மனப்பான்மை. நல்ல மனப்பான்மை எப்போதும் உங்களை வருங்கால வெற்றியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். நல்ல மனப்பான்மை இருக்கும் போது, உங்கள் பிரச்னையை தீர்க்க அதிசயம் நடக்கும் என்று காத்திருக்காமல், நல்ல தீர்வை நீங்களே காண்பீர்கள். ஒரு பணக்காரன் இதையே செய்வான். அவர்களின் பேச்சும் செயலும், மோசமான சூழ்நிலைகளிலும் கூட, வெற்றியை ஈட்டும் மனப்பான்மையையே பிரதிபலிக்கும்.

மக்கள் மத்தியில் வணிகம் செய்யப்படும் முதலீடுகள் வேகமாக பரவுவதால், அதனை பற்றிய தகவல்களை சுலபமாக அடையலாம். இந்த தகவல்களை பல முதலீட்டாளர்களும் நிதி துறை சார்ந்தவர்களும் படித்து, இதன் அடிப்படையில் பங்கு விலையை நிலைநாட்டுகிறார்கள். பணக்காரர்கள் இந்த ஊகத்துக்கு முரண்பாடாக நடக்க மாட்டார்கள். அதனால் முதலீடு செய்யும் போது, வருங்காலத்தை கணிக்க மாட்டார்கள். பணக்காரர்கள் எப்போதுமே இடர்பாட்டை குறைக்க விரும்புவார்கள். அப்படி செய்து, பல பிரிவுகளுக்கு கீழ் சந்தை ஈட்டு தொகையை அதிகரிக்க விரும்புவார்கள். ஆனால் சாதாரண மக்களோ, வருங்காலத்தை கணித்து, குறிப்பிட்ட பங்கில் முதலீடு செய்து, தவரிழைப்பார்கள்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா