இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று தெரியும். ஆனால் இந்த ஒயினில் பல வெரைட்டிகள் உள்ளன. அவைகளின் பெயர்களை கேட்டாலே அசந்துவிடுவீர்கள். ஏன் சிலருக்கு அருவெறுப்பு கூட ஏற்படும்.
அதுமட்டுமின்றி, விஸ்கி, வோட்கா, பீர் போன்றவற்றை கூட விசித்திரமாக தயாரித்து சாப்பிடுகிறார்கள். இப்போது அப்படி உலகில் உள்ள விசித்திரமான சில ஆல்கஹால்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. முடிந்தால் அவற்றை ட்ரை செய்து பாருங்கள்...
பாம்பு ஒயின் (Snake Wine)
உலகிலேயே இந்த ஒயின் மிகவும் சிறந்த பானமாக கருதப்படுகிறது. இது நச்சுத்தன்மையுடைய நாகப்பாம்பை மூன்று மாதமாக நீரில் போட்டு பதப்படுத்தி வைத்து, பின் அதனை குடிப்பார்கள். இதனைக் குடித்தால், வாதநோய் குணமாவதோடு, செக்ஸில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக இந்த ஒயின் சீனாவில் அதிகம் கிடைக்கும்.
தேள் விஸ்கி (Scorpion whiskey)
இந்த விசித்திரமான பானமானது கருந்தேளை, ஜின்செங் வேர் மற்றும் சில மூலிகைகளின் விதைகள் ஆகியவற்றை விஸ்கியில் ஊற வைத்து செய்யப்படுவதாகும். இந்த தேள் விஸ்கியானது இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் தசை வலிகளுக்கும் சிறந்தது.
எலி ஒயின் (Mouse Wine)
சீனாவில் கிடைக்கும் இந்த எலி ஒயின், பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தரக்கூடியது. இது சில சீன மூலிகைகள், வேர்கள் மற்றும் எலிக் குட்டி ஆகியவற்றை நீரில் போட்டு மூன்று வருடங்கள் ஊற வைத்து செய்யப்படுவதாகும். முக்கியமாக இந்த எலி ஒயின் ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்சனைக்கு சிறந்தது.
அணில் பீர் (Squirrel beer)
அணில் பீர் தான் உலகிலேயே மிகவும் ஸ்ட்ராங்கான பீர். இதனை ஒரு சிப் குடித்தாலே, போதை தலைக்கு ஏறிவிடும். அதற்கேற்றாற் போல் இதன் விலை மிகவும் அதிகமானது.
பேகன் வோட்கா (Bacon Vodka)
எந்த இறைச்சியானாலும் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டும் தான் இந்த பேகன் வோட்காவை குடிக்க முடியும். ஏனெனில் சமைத்த பன்றி இறைச்சியை வோட்காவில் சேர்த்து செய்யப்படுவதாகும். மேலும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த பானம் மிளகு மற்றும் வேக வைத்த பன்றியின் வாசனையோடு இருக்கும்.
பல்லி ஆல்கஹால் (Three Lizard Liquor)
உலகிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் ஆல்கஹாலை சுவைக்க நினைத்தால், அதற்கு பல்லி ஆல்கஹால் தான். இந்த ஆல்கஹாலில் மூன்று பல்லியை ஊற வைத்து செய்வார்கள். இது மிகவும் விலை அதிகமானது. இதனை ஒரு சிப் குடித்தாலே, உடலில் எனர்ஜி அளவுக்கு அதிகமாகவிடும்.
கடற்பறவை ஒயின் (Seagull Wine)
இந்த ஒயினானது இறந்த கடற்பறவையை தண்ணீரில் போட்டு பதப்படுத்தி செய்யப்படுவதாகும். இதுவும் உலகில் உள்ள மக்களால் விரும்பி பருகப்படும் ஒயின்களுள் ஒன்றாகும்.
No comments:
Post a Comment