Monday 10 February 2014

இனிமேல் ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் தான்...!!



ஒரு குடும்பம் ஒரு கார்’ என்ற முறையை பின்பற்றினால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதோடு, எரிபொருளையும் மிச்சப்படுத்தலாம்.என்பதால் அனைவரும் இம் முறையை கடைபிடிக்குமாறு மும்பை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

மும்பையில் தற்போது பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரும் தனித்தனி கார்களை பயன்படுத்துவதே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

 இதற்கிடையில் குடியிருப்பு சங்கங்களிடம் இருந்து என்.ஓ.சி. பெற்றால் மட்டுமே ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் புதிய காரை பதிவு செய்கின்றனர்.இதையடுத்து வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களை பயன்படுத்த பெரும்பாலான குடியிருப்பு சங்கங்கள் அனுமதி வழங்குவதில்லை.

 இப்படி குடியிருப்பு சங்கங்களின் என்.ஓ.சி., இல்லாத காரணத்தால் வாகனப் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் போலி முகவரிகளில் வாகனங்களை பதிவு செய்கின்றனர். இச்செயல்பாடுகள் ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்துதான் மும்பை ஹைகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த ஹைகோர்ட், ஆர்.டி.ஓ., அதிகாரிகளை கண்டித்ததுடன் பொதுமக்களுக்கும் சிலஅறிவுரைகளை வழங்கியுள்ளது.அதில் ஹைகோர்ட் நீதிபதி ”கார்கள் பதிவு போலி முகவரிகளில் கார்கள் பதிவு செய்யப்படுவதை, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

குடியிருப்பு சங்கங்களிடம் இருந்து, என்.ஓ.சி., பெறாத நபர்களின் பெயரிலும், கார்கள் பதிவு செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“ஒரு குடும்பம் ஒரு கார்’ என்ற முறையை பின்பற்றினால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதோடு, எரிபொருளையும் மிச்சப்படுத்தலாம். இந்த நடைமுறையை பின்பற்ற, பொதுமக்களிடம், ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா