பிராங்க்பர்ட்: ஜெர்மனியின், பிராங்க்பர்ட் நகரில், 32 அடுக்கு கட்டடம், வெடி வைத்து, 10 நொடிகளில் தகர்க்கப்பட்டது. ஜெர்மனியின், பிராங்க்பர்ட் நகரில், நிதி மையமான, "ஏ.எப்.இ., கோபுரம் உள்ளது.
இந்த கோபுரம் பழையதாகி விட்டதால், சீரமைப்பதை விட தகர்த்து விட்டு, புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம், 10 நொடிகளில், வெடி வைத்து தகர்த்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பிராங்க்பர்ட்டில், கோத்தி பல்கலைக்கழக வளாகத்தில், 1972ல் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 116 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கோபுரத்தை தரைமட்டமாக்குவதற்கு, 950 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது. கோபுரம் தகர்க்கப்டும் போது, பாதுகாப்பு பணியில், 500 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த கட்டடம் தரைமட்டமாவதை, 10 ஆயிரம் பேர், நேரடியாக பார்த்தனர். கட்டட இடிபாடுகள், 250 அடி வரை குவிந்துள்ளன. 50 ஆயிரம் டன் கான்க்ரீட் குப்பைகளை, ஐந்து மாதத்திற்குள், முற்றிலும் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment