Monday 10 February 2014

காற்புள்ளி காலாவதி ஆகுமா...? கொலம்பிய பல்கலை பரிந்துரை..!



ஆங்கிலத்தில் காற்புள்ளியை (,) நீக்கிவிடலாம் என்று கொலம்பிய பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது.

வாக்கியங்களை படிக்கும் போது எங்கெங்கு நிறுத்தி படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், எங்கு முடிக்க வேண்டும் என்பதற்கு உதவி செய்வது நிறுத்தல் குறியீடுகள். அதுபோல், கமா என்றழைக்கப்படும் காற்புள்ளி, அரை புள்ளி, முற்றுப்புள்ளி, ஆச்சரிய குறி, கேள்வி குறி போன்ற பல குறியீடுகள் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் காற்புள்ளியை ஆங்கிலத்தை பயன்படுத்தும் புதிய தலைமுறையினர் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கொலம்பிய பல்கலைக்கழக ஆங்கில மொழி துறை பேராசிரியர் ஜான் மெக்வொர்ட்டர் கூறுகையில், தற்போது இணையதளங்களில் எழுத வந்துள்ள புதிய தலைமுறையினர் பெரும்பாலும் நிறுத்தல் குறிகளை பயன்படுத்துவதில்லை. புதிய தலைமுறை எழுத்தாளர்களும் ஆங்கிலத்தை பயன்படுத்தும் போது பெரும்பாலான இடங்களில் நிறுத்தல் குறிகளை பயன்படுத்த விரும்புவதில்லை.

இதனால் ஒரு சில இடங்களில் அர்த்த மயக்கம் ஏற்பட்டாலும் பொருள் பெரும்பாலும் மாறுவதில்லை. எனவே, புதிய காற்புள்ளி உள்ளிட்ட நிறுத்தல் குறிகள் தேவையில்லை என்று மொழி வல்லுனர்கள் பலர் தெரிவித்துள்ளனர். எனவே, காற்புள்ளி போன்ற நிறுத்தல் குறிகளை நீக்கி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா