Monday 10 February 2014

உங்களுக்கு தெரியுமா..? இந்த தகவல்கள்..!



விந்தை தகவல்கள்:-

1.கங்காருக்குட்டி பிறக்கும் பொது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.

2.உலகிலேயே அதிகம் பேர் உயிரிழப்பது எதனால் தெரியுமா? மலேரியா கொசுவினால்

3.அமெரிக்காவில் இருக்கும் பொதுவான பாலுட்டி எலி தான்

4.ஆந்தைகளின் விழிகள் நீளவாக்கில் இருக்கின்றன. அதனால், அவை கண்களை அசைக்க முடியாது,

5.பெண்கள் பயன்படுத்தும் உதட்டு சாயத்தில் மீன் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன

6.இறால் மீன்களின் இதயம் அதன் தலையில் இருக்கின்றன

7.எறும்புகள் 16 வாரம் வரை வாழக் கூடியவை

8.ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்க முடியும்.

9.முதலைகளால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது

10.பனிக்கரடிகள் எல்லாவற்றையும் தம் இடது கைகளாலேயே செய்யும்.

11.பட்டாம்பூசிகள் தம் பாதங்கள் வழியே சுவையை உணரும்.

12.யானைகளால் குதிக்க முடியாது

13.பன்றிகளால் நிமிர்ந்து பார்க்க முடியாது

14.ஆமைகளுக்கு பற்கள் கிடையாது

15.மாகரெல் என்ற மீன்வகை, ஒரே நேரத்தில் 5 லட்சம் முட்டைகளை இடும்

16.நெருப்பு கோழியால் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்

17.கார்பன் மோனாக்ஸைடு வாயு ஒரு மனிதனை 15 நிமிடத்தில் கொன்றுவிடும்

18.30 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் பூனை பிழைத்துக்கொள்ளும்

19.பெண்கள் ஆண்களை போல இரண்டு மட‌ங்கு கண் சிமிட்டுகிறார்கள் .

20.கேட்டு போகாத ஒரே உணவு பண்டம் தேன் தான் .

No comments:

Post a Comment

 
நண்பேன்டா